அண்ணாசாமி எழுதிய கவிதை .
அருமையான கவிதை . எனக்கு பிடித்து இருக்கிறது . எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
நன்றி அண்ணாசாமி
தாயே நீயின்றி..
என்னைக் கண்டதும் பாசமழை பொழிந்தாய்.
சின்னதோர் அசைவையும் கவனித்தாய் உன்னிப்பாய்.
நேற்றுவரை நீயாரோ? என்னைத் தேற்றவும்
போற்றவும் தெய்வம்வேறு தேவையில்லை.
பசியில் அழுதால் பறந்து வந்தாயே.
நிசியும் பகலும் என்னுடன் பேசியே
மொழிகளையும் உறவின் வழிகளையும் முனைப்புடன்
அழியா வண்ணம் தெரிவித்தாய்.
எந்தப் பிறவி தொடரோ? நானறியேன்.
முந்தை வினைப் பயனே. விந்தையாய்,
விரல் பிடித்து வழிநடத்தி வீழாமலெனை
அரவணைத்து 'அன்பினையும்' மகிழ்வித்தாய்.
வளர்த்து ஆளாக்கி, உன்னுடல் தளர்ந்தும்
தளரா மனம் பெற்றவளே. உளமார
வேண்டுகிறேன் படைத்தோனிடம். நானுன் தாயாக
வேண்டும், ஒருதுளி கைமாறாய்...
3 comments:
nalla kavithai
mano
அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள்..
நன்றி மனோ
Post a Comment