மசாலா , அடிதடி என்று பார்த்து சலித்து விட்டது . சத்தான நல்ல கதையம்சம் உள்ள படங்களையே இப்போது ரசிகர்கள் விரும்புகிறார்கள் . இது முற்றிலும் உண்மை என நீருபித்து இருக்கிறார்கள் ரசிகர்கள் . ஆமாம். தெய்வத்திருமகள் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு
இருப்பதை பார்த்தே தெரிகிறது அல்லவா ?
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையம்சமுள்ள படத்தை பார்த்த திருப்தி ஏற்பட்டது . ஆபாசமில்லை , சண்டைகள் இல்லை , இரட்டை அர்த்த வரிகள் இல்லை , துள்ளல் இல்லை . கதையோடு பின்னிபிணைந்த இசை , பாடல்கள் . விக்ரமின் சிறப்பான நடிப்பு . அமலாபால் , அனுஷ்கா, சந்தானம் , நாசர் ஆகியோர் தமது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் .
விக்ரமின் குழந்தை இறந்து போன தங்கள் மகளின் நினைவாக வேண்டும் என்று விக்ரமை ஏமாற்றி, பேத்தியை தூக்கிச் செல்கின்றனர். சென்னைத் தெருவில் அனாதையாக விடப்படும் விக்ரமிற்கு உதவ முன்வருகிறார் வக்கீல் அனுஷ்கா. மனவளர்ச்சி குன்றியவரிடம் குழந்தையைக் கொடுக்க முடியாதென விஷயம் கோர்ட்டுக்குப் போகிறது. பாசமுள்ள தந்தையும் மகளும் இணைந்தார்களா? என்பதே கதை.
ஆங்கிலப் படத்தின் தழுவல் என்றாலும் தமிழுக்கு ஏற்றது போல் சிறப்பாக , அழகாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். அசத்தலான முகபாவனை செய்து எல்லோருடைய மனதிலும் ஆழமாக பதிந்திருப்பார் என்றால் மிகையல்ல. விக்ரமும், நிலாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் கொள்ளை கொள்ளும் அழகு. சிறிய வயதில் இந்த குழந்தை எவ்வளவு சிறப்பாக நடித்து இருக்கிறது .
பாடல்கள் எல்லாம் மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது . கேட்க இனிமையாகவும் இருக்கிறது . 'விழிகளில்' பாடலில் அனுஷ்கா அழகோ அழகு. 'பாப்பா', 'வெண்ணிலவே' பாடல்கள் நன்றாக உள்ளன. மாற்று திறனாளிகளை சமுதாயம் ஒதுக்கக்கூடாது. அவர்களையும் நம்மில் ஒருவராக பார்க்க வேண்டும். அப்படி இருப்பது அவர்கள் தவறல்ல. இந்த கருத்தைத்தான் `தெய்வத்திருமகள்' படத்தில் சொல்லி இருக்கிறார்கள் . படம் எல்லோரும் போய் பாருங்கள் . ரசியுங்கள் . எல்லோரும் பார்க்க வேண்டிய படம் . எல்லோருக்கும் பிடிக்கும் .
எனக்கு ரொம்பவும் இந்த படம் பிடித்து இருக்கிறது . மனதை உருக்கியது . ஆழ்ந்த கவலையுடன் தான் திரை அரங்கை விட்டு வரும்போது இருக்கிறது . கண்களில் கண்ணீரை வர வைக்கிறாள் இந்த தெய்வதிருமகள் .
4 comments:
நெகிழ வைக்கிற படம் தான்...
பகிர்வுக்கு மிக்க நன்றி...
அருமையான படம்....
அந்த் குட்டிப்பாப்பா நடிப்பு கலக்கலோ கலக்கல்.
ம்ம்ம்ம்ம்ம் உண்மைதான்
நன்றி சௌந்தர்
என்ன நடிப்பு ?
அசத்துகிறது இந்த குட்டி நட்ச்சத்திரம் நடிப்பில்
நன்றி குமார்
Post a Comment