ரசிகர்கள் காலத்துக்கு காலம் ஒவ்வொரு வகை பாடல்களை ரசிக்கின்றனர் . ஒரு காலத்தில் மெலடி பாடல்களை ரசித்தனர் . இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குத்து பாடல்களை கேட்டு ரசிக்கிறார்கள் . இடைக்காலப் பாடல்களை எல்லாம் இப்போது எல்லோரும் விரும்புகிறார்கள் .
இதுக்கு காரணம் அந்த காலகட்டத்தில் வந்த பாடல்களில் வரிகள் புரியும்படியும் , அர்த்தமுள்ள வரிகளாகவும் , இரைச்சல் இல்லாத அமைதியான இசையும் , சிறப்பான குரல்வளம் , பாடகர் நல்ல உச்சரிப்புடன் பாடல்களை பாடும் விதம் என்று அப்பிடியே சொல்லிக் கொண்டு போகலாம் .
இப்போதைய பாடல்களில் வரிகள் என்னவென்றே அர்த்தம் புரிவதில்லை . இரைச்சலான இசை . அதைவிடுத்தும் சில பாடல்கள் நன்றாகத்தான் இருக்கின்றன . அதனையும் பாராட்ட வேண்டும் . அண்மையில் வந்த படங்களில் பார்த்தால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வந்த பாடல்கள் எல்லாம் நன்றாக இருந்தன . அடுத்து எங்கேயும் காதல் படத்தில் தீயில்லை பாடல் , கோ படத்தில் எல்லா பாடல்களும் சிறப்பாக இருந்தன .
காலையில் ஒரு அமைதியான இயற்கையுடன் சம்பந்தப்பட்ட பாடல்களை கேளுங்கள் . மாதுக்கு இதமாக இருக்கும் . மதிய நேரம் மெலடியான , நல்ல இசையுடன் கூடிய பாடல்களை கேளுங்கள் . சோர்ந்து இருக்கும் நேரங்களில் துள்ளல் இசையுடன் கூடிய பாடல்களை கேளுங்கள் . இரவில் இடைகால பாடல்களை கேளுங்கள் . உதாரணமாக மோகன் நடித்த , ராமராஜன் நடித்த படங்களில் இருந்து .
இசைக்கு மொழி இல்லை . எந்த நேரத்திலும் எமக்கு புத்துணர்ச்சி தரக்கூடியது . மனதுக்கு யொரு அமைதியை தருகிறது . தனிமையை விரும்புவோர் இசையை அதிகம் ரசியுங்கள் . எல்லா வகை பாடல்களையும் கேளுங்கள் . நீங்கள் தனிமையில் இருப்பதுபோல் உணரமாட்டீர்கள் . அதுதான் இசை . பாடல்கள் எவ்வளவு இருக்கின்றன . எத்தனையோ பாடகர்கள் இருக்கிறார்கள் . அவர்களின் பாடல்களை கேட்டு ரசியுங்கள் . எப்போதும் மனமகிழ்ச்சியுடன் இருங்கள் .
8 comments:
ஆமா, நானும் பூரா நாலும் பாட்டுக்களின் துணையுடந்தான் இருப்பென். அந்தத
மூடுக்கான பாடல் கேக்கும்போது
மனசு பூராவும் உற்சாகமாகவே
இருக்கும் உண்மைதான்
Ya Its True.
நல்ல பகிர்வு...
உங்கள் கூற்று முற்றிலும் உண்மை.
எனக்கு ராசாவின் பாடல்கள் கேட்டுக்கொண்டு வேலை பார்ப்பது மிகவும் பிடிக்கும்.
நன்றி லக்ஷ்மி அம்மா அவர்களே
நன்றி குமார் . ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது
வணக்கம் பவி இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதல் வந்துள்ளேன் .உங்கள் ஆக்கங்கள் பிடித்துக்கொண்ட காரணத்தால் இந்த நட்பைத் தொடர்கிட்றேன் .வாழ்த்துக்கள் மென்மேலும் வளர .என் வலைத்தளம் வந்து பாருங்கள் ஆக்கங்கள்
பிடித்திருந்தான் உங்களையும் என் தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள் .நன்றி அழகிய பகிர்வுகளுக்கு .
நன்றி அம்பாள் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
Post a Comment