எனக்காக ஒருவன்
பிறந்திருப்பான்
எப்போது எனது
திருமணம் என்று
காத்து இருந்தேன்
பெற்றோர் ஒரு
சிறந்த ஆண்மகனை
எனக்கு ஏற்றாற்போல்
தெரிவு செய்து இருந்தார்கள்
என்ற சந்தோசத்தில்
குதூகலித்தேன்
இறைவன் கொடுத்த வரம்
என்று நினைத்தேன்
உண்மையில் நான்
கும்பிட்ட தெய்வம் எனக்கு
ஏற்றவரை தந்துள்ளார்
என்ற சந்தோசத்தில்
இறைவனை பிரார்த்தித்தேன்
என்கிறாள் என் நண்பி .
No comments:
Post a Comment