Monday, April 19, 2010

சென்னை அணி அரை இறுதிக்கு முன்னேற்றம்


http://www.liveipl.net/images/chennai-super-kings.jpg

நான் நம்பி இருந்தேன் எப்படியாவது  சென்னை அணி அரை இறுதிக்குள் நுழையும் என்று . நான் நினைத்தது போலவே நடந்து விட்டது . கடைசி வரை போராடி பெற்ற வெற்றி அல்லவா . எவ்வளவு விறுவிறுப்பு , அசத்தல் . சும்மா அதிர்ந்துதல்லவா ? தோற்று விடுவார்களோ என்று கூட யோசிக்க வைத்த  போட்டி அல்லவா ? நேற்றைய போட்டி சென்னை அணிக்கு வாழ்வா , சாவா என்ற மிக முக்கியமான போட்டியாக அமைந்தது .
http://www.panasianbiz.com/wp-content/uploads/2010/03/m-s-dhoni.jpg
பரபரப்பான கடைசி ஓவரில் கேப்டன் தோனி வரிசையாக இரண்டு இமாலய சிக்சர்கள் விளாச, சென்னை கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐ.பி.எல்., அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.  பஞ்சாப் அணியின் ஆட்டம்  வீணானது .
அரையிறுதிக்கு முன்னேற, இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி களமிறங்கியது. அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்த பஞ்சாப் அணி எவ்வித நெருக்கடியும் இல்லாமல் களம் கண்டது. மழை வாய்ப்பு இருந்ததால்,  நாணய சுழற்ச்சியில் வென்ற சென்னை கேப்டன் தோனி சாமர்த்தியமாக முதலில் பீல்டிங் செய்வது என முடிவு செய்தார்.
http://static.cricinfo.com/db/PICTURES/CMS/102700/102729.jpg
பஞ்சாப் அணிக்கு ஜெயவர்தனா, ஷான் மார்ஷ் இணைந்து அதிரடி தொடக்கம் கொடுத்தனர் .தியாகி வீசிய முதல் ஓவரில் ஜெயவர்தனா அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசினார். பின் மார்கல் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த ஜெயவர்தனா 21  ஓட்டங்களுக்கு  வெளியேறினார். அடுத்து வந்த சங்ககரா  கை கொடுக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் மார்ஷ். இந்த நேரத்தில் அஷ்வின் பந்தில் "ஸ்வீப் ஷாட்' அடிக்க முயன்ற சங்ககரா(33) போல்டானார். ரெய்னா சுழலில் யுவராஜ்(1) சிக்கினார் .http://www.rainbowskill.com/wp-content/uploads/2008/10/irfan_pathan_and_brett_lee.jpg

இதற்கு பின்  ஜோடி சேர்ந்த இர்பான் பதான், மார்ஷ் அசத்தினர் . சென்னை பந்துவீச்சை சிதறடித்த இவர்கள்  கடைசி 8 ஓவரில் 99 ஓட்டங்கள்  சேர்த்து அசத்தினர். ஜகாதி ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த மார்ஷ், அரைசதம் கடந்தார். போலிஞ்சர் வீசிய போட்டியின் 19வது ஓவரில் மார்ஷ் 2 சிக்சர், இர்பான் ஒரு பவுண்டரி சேர்த்து மொத்தமாக 19  ஓட்டங்கள் எடுக்கப்பட பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்கள்  எடுத்தது.http://1.bp.blogspot.com/_O4AVHENazMc/S177JyRNheI/AAAAAAAAAYM/QvxcQVSTSLY/s400/Chennai%2Bsuper%2Bkings%2Bteam.jpg
சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணி தொடக்கத்திலேயே சொதப்பியது .  ஹைடன்(5), ரமேஷ் பவார் சுழலில் அவுட்டாகி ஏமாற்றினார். மிகவும் எதிர்பார்த்த தமிழக வீரர் முரளி விஜய்யும்(13), பவார் பந்தில் வீழ்ந்தார்.  பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் இணைந்து அசத்தினர் . வி.ஆர்.வி.சிங், பியுஸ் சாவ்லா பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார் ரெய்னா. மறுபக்கம் ரமேஷ் பவார் சுழலில் பத்ரிநாத் ஒரு சிக்சர் விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய ரெய்னா 46  ஓட்டங்களுக்கு  (5 பவுண்டரி, 3 சிக்சர்), திரான் பந்துவீச்சில் அவுட்டானார். http://keralanext.com/news/images/dhoni-ipl.jpg
பின் தோனி, பத்ரிநாத் இணைந்து பொறுப்பாக ஆடினர். திரான் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசிய தமிழக வீரர் பத்ரிநாத், ஐ.பி.எல்., அரங்கில் 5வது அரைசதம் கடந்தார். அடுத்து வந்த மார்கலும் அதிரடி காட்ட,  ஆட்டம்  சூடு பிடித்தது. விறு விறுப்பானது. கடைசி ஓவரில் 16  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. 

இர்பான் பதான் பந்துவீசினார். ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட தோனி, முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இரண்டாவது பந்தில் 2  ஓட்டம் , மூன்றாவது பந்தில் இமாலய சிக்சர்(108 மீ.,) அடித்தார். நான்காவது பந்தில் இன்னொரு சிக்சர் அடித்த தோனி, வெற்றியை உறுதி செய்தார். சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195  ஓட்டங்கள் எடுத்து "திரில்' வெற்றி பெற்றது. அரைசதம் கடந்த தோனி 59(5 பவுண்டரி, 2 சிக்சர்), மார்கல் 14  ஓட்டங்களுடன்  இருந்தார் .  ஆட்ட நாயகன் விருதை தோனி பெற்றார் .

http://2.bp.blogspot.com/_IzPHfWDbMLM/SfBKa9cQVMI/AAAAAAAAAXw/okU0rQDLP2s/s400/Mahendrasing-dhoni-IPL_Team.jpg இவ்வெற்றியின் மூலம் சென்னை அணி 14 புள்ளிகளுடன் நல்ல "ரன் ரேட்' அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கடந்த 2008, 2009 தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய சென்னை அணி, இம்முறை கோப்பை கைப்பற்ற காத்திருக்கிறது. தோனி 32  ஓட்டங்கள்  எடுத்திருந்த நிலையில் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை பஞ்சாப் வீரர் திரான் கோட்டை விட்டார். அப்போதே சென்னை அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதற்கேற்ப கடைசி ஓவரை இர்பான் பதான் சொதப்பலாக வீச, தோனி சூறாவளியாக மாறி சிக்சர் மழை பொழிய, சென்னை அணி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறியது. கோப்பையை வெல்லுமா சென்னை அணி ???
.


18 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹைய்யா..நாந்தான் பர்ஸ்ட்டு! எப்பிடி கேக்குறது, அதுவும் பர்ஸ்ட்டு வந்துட்டு? இருந்தாலும் கேப்போம்! ஏனுங்க, இந்த இர்பான் பதானுக்கும் தோனிக்கும் ஏதோ ரகசிய ஒப்பந்தம்னு பேசிக்கிறாங்களே உண்மையா? (கடைசி ஓவர சுப்பரா போட்டுக்கொடுத்ததுமில்லாம, கேட்ச வேற விட்டாரு, அதுக்கு பதிலா தோனி இந்திய அணில இடம் உறுதின்னாராமே)

S Maharajan said...

எதிர்பர்ர்போம்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இனிமே இந்த .பக்கம் வந்தா உஷாரதான் இருக்கணும் போல

KULIR NILA said...

ada match pathu neenga eludhinathunnu padicha

dinamalar news apdiye unga style la pottu irukeenga

good

Bala said...

// இந்த இர்பான் பதானுக்கும் தோனிக்கும் ஏதோ ரகசிய ஒப்பந்தம்னு பேசிக்கிறாங்களே உண்மையா?

நல்ல கேளப்புராய்ங்கய்யா பீதிய!!!!!!!

முகிலன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹைய்யா..நாந்தான் பர்ஸ்ட்டு! எப்பிடி கேக்குறது, அதுவும் பர்ஸ்ட்டு வந்துட்டு? இருந்தாலும் கேப்போம்! ஏனுங்க, இந்த இர்பான் பதானுக்கும் தோனிக்கும் ஏதோ ரகசிய ஒப்பந்தம்னு பேசிக்கிறாங்களே உண்மையா? (கடைசி ஓவர சுப்பரா போட்டுக்கொடுத்ததுமில்லாம, கேட்ச வேற விட்டாரு, அதுக்கு பதிலா தோனி இந்திய அணில இடம் உறுதின்னாராமே)//

உக்காந்து யோசிப்போர் சங்கத்துக்கு நீங்கதான் தலைவராம்ல?

இன்னொன்னையும் விட்டுட்டீங்கண்ணே.. அப்பிடி செய்யாட்டி ஜென்மத்துக்கு இந்திய டீமுக்குள்ள வர முடியாதுன்னு செலக்சன் கமிட்டி சேர்மன் ஸ்ரீகாந்த் இர்ஃபானை மிரட்டினாராம்ல?

முகிலன் said...

பவி,

பெரும்பாலான பெண்கள் கிரிக்கெட் பார்க்கிறதோட நிறுத்திக்குவாங்க. நீங்க பார்க்கிறது மட்டுமில்லாம அதை விமர்சனம் செஞ்சியும் எழுதுறீங்க. உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.. :))

முகிலன் said...

பவி,

உங்களை யாரும் அழைச்சாங்களான்னு தெரியல.. நான் எழுதும்போது உங்களை அறிமுகம் இல்லை. இப்போ நீங்க இதைத் தொடருங்களேன்?

http://pithatralkal.blogspot.com/2010/02/blog-post_23.html

சே.குமார் said...

முதல் முறை உங்கள் தளத்துக்கு வருகை.
அருமையான எழுத்துக்கள்.
சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

Anonymous said...

super..........
chennai win pannum.


mano

Pavi said...

நன்றி ராமசாமி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Pavi said...

ம்ம்ம்ம் நன்றி மகாராஜன்

Pavi said...

நான் பொதுவாக எல்லா செய்திகளும் வாசிப்பதுண்டு . அதன்பின் எனது ஸ்டைலில் எழுதுவேன் .
நன்றி நிலா

Pavi said...

எனக்கு எதுவும் தெரியாது பாலா
நன்றி உங்கள் வருகைக்கு

Pavi said...

எனக்கு கிரிக்கெட் பார்க்கிறது ரொம்ப பிடிக்கும் . பிடித்த விளையாட்டும் கூட . அதிலும் சுவாரஸ்யமாக எழுத இன்னும் பிடிக்கும் . ம்ம்மம்மம்ம்ம்ம் நன்றி முகிலன் உங்கள் பாராட்டுகளுக்கு .

Pavi said...

என்னை இதுவரை யாரும் அழைத்ததில்லை . எல்லோருக்கும் எல்லோரும் அறிமுகம் இல்லை தானே . நீங்கள் எனது தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிகவும் நன்றிகள் . எனது தளம் வந்தவர்கள் எனக்கு நண்பர்கள் . எனவே நானும் உங்களது நண்பி ஆகி கொள்கிறேன் . நன்றி முகிலன் .

உங்கள் தளம் வருகிறேன் .

Pavi said...

நன்றி குமார் . எனது தளத்துக்கு வந்தமைக்கு .
எல்லோரினதும் ஆசை இதுதானே .

Pavi said...

நன்றி மனோ
பொறுத்திருந்து பார்ப்போம்