பண்டிகைகள், விழாக்கள், நிகழ்வுகள் என்றால் பட்டாசு கொளுத்தி ஆனந்தம் அடைவதுண்டு . சிறியோர், பெரியோர் என்று வயது பாகுபாடு இல்லாமல் எல்லோரும் பட்டாசு கொளுத்தி விளையாடுவார்கள் . அதிலும் சிறியோர் எல்லோருக்கும் எவ்வளவு பட்டாசு வாங்கி கொடுத்தாலும் இவ்வளவு தானா என்று கேட்பார்கள் . அவ்வளவுக்கு பட்டாசு அவர்களுக்கு நிறைய வாங்கி கொடுக்க வேண்டும் .
சிறியோர்கள் பட்டாசு கொளுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் . ஏதாவது விசேச தினங்களுக்கு பட்டாசு கொளுத்தி விளையாடுவார்கள் . மறுநாள் பத்திரிகைகளிலோ , வானொலிகளிலோ கேட்டால், பார்த்தால் பட்டாசு கொளுத்தி விளையாடி கொண்டிருந்த இருவர் காயம் , மூவர் காயம் , கைகளில் காயம் , தலை மயிர் பொசுங்கி விட்டது என்று இருக்கும் . பட்டாசை வெடிக்க வைக்கும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .
ஒரு வெளியான இடமாக இருக்க வேண்டும் , சன நடமாட்டம் குறைந்த இடமாக இருக்க வேண்டும் , வாகங்களுக்கு வெடியை கொளுத்தி போட கூடாது , வயதானவர்களுக்கு அருகினில் நின்று வெடி கொளுத்த கூடாது . அவர்கள் வெடி சத்தத்தில் ஏங்கி விடுவார்கள் . பட்டாசு கொளுத்தும் போது அதில் இருந்து வெளியாகும் புகையை மணக்க கூடாது . அது நமது சுவாசத்துக்கு கூடாது .
பட்டாசு கொளுத்தும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை யாதெனில் பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசு வெடிக்க வைக்க வேண்டும் , இறுக்கமான ஆடைகளை அணிய கூடாது . பருத்தி ஆடைகளை அணிய கூடாது , வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க கூடாது , சேட், காற்சட்டை பொக்கற்றுகளுக்குள் பட்டாசை வைக்க கூடாது , வீட்டிற்கு வெளியில் பட்டாசை வெடிக்க வைக்க வேண்டும் , கைகளை பிடித்து வெடிக்கும்போது சாகசங்கள் செய்ய கூடாது , எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீ விபத்து ஏற்பட்டால் ஓடாதீர்கள். உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள்; அல்லது கீழே படுத்து உருளுங்கள்.
பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம்: அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறது. குறைவான மாசுபாட்டைகூட அவை தாங்குவதில்லை. பட்டாசுகள் அதிகம் வெடிக்கும் சத்தம் கேட்டால் காது செவிடாவதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிக சப்தத்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும்கூட ஏற்படலாம். பட்டாசுகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன.
பட்டாசுகளை உருவாக்கவும், சத்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கும் பொருட்கள் பல பாதிப்புகளை நமக்கு உண்டாக்கும் . செம்பு , காரியம் காட்மியம் , மக்னீசியம் , சோடியம் , துத்தநாகம் , நைட்ரைட்போன்ற வேதிப்பொருட்களை கொண்டு பட்டாசு தயாரிக்கப்படுகிறது . இவற்றை எல்லாம் சேர்த்து செய்யும் பட்டாசு வெடிப்பால் எமக்கு சுவாசபாதையில் எரிச்சல், மூளை வளர்ச்சியை பாதிக்கும் தன்மை, சிறுநீரக பாதிப்பு , குமட்டல், வாந்தி , தும்மல், நரம்பு மண்டல பிரச்சனைகள் , வலிப்பு , பக்கவாதம் போன்றன ஏற்பட வாய்ப்பு உண்டு . இந்த வேதிப்பொருட்கள் ஆபத்தானவை . எமது உடலுக்கு தீங்கு விளைவிப்பவை . நாம் கவனமாக இருக்க வேண்டும் . செயற்பட வேண்டும் .
எனவே பண்டிகை காலங்களில் பட்டாசு கொளுத்தும்போது இனிமேல் கவனமாக செயற்படுங்கள் .
.
5 comments:
நல்ல பகிவு பவி.
தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பவர்கள் கவனிக்க வேண்டிய பதிவு.
2011 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சிறப்பான வருடமாக அமைய வாழ்த்துக்கள்.
நன்றி சக்தி உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும்
ஓகே இதோ வருகிறேன்
நன்றி நன்றி குமார்
Post a Comment