Thursday, May 19, 2011

அன்பு, இரக்கம், கருணை உள்ளவரா நீங்கள் ?



மனிதர்கள் எல்லோரிடமும் இருக்க வேண்டிய நற்பண்புகள் அன்பு, இரக்கம் , கருணை ஆகும் . அது எல்லோரிடமும் இருந்தால் சண்டை, சச்சரவுகளே வராது . அன்பாக இரு உறவுகளிடமும் , ஏனையோரிடமும் . இறக்கத்துடன் இரு எல்லோரிடமும் . பொறுமை காத்துக்கொள் . மற்றவர்களை பார்த்து பொறாமை படாதே .
http://www.happynews.com/showImage.aspx?fn=272008/developing-good-habits.jpg&catid=23
பெருமை கொள்ளாதே . உன்னை மட்டும் புகழ்ந்து பேசாதே . அதனால் உன்னையே நீ புகழ்கிறாய் . அது தவறு . மற்றவர்கள் தான் உன் புகழ் பாட வேண்டும் . அதற்க்கு எல்லாம் இப்போது மற்றவர்களுக்கு எல்லாம் பணம் கொடுத்தே ஒருவரின் புகளை சொல்ல வைக்கிறார்கள் . அதெல்லாம் தவறு .

எது சரி , எது பிழை என்று சரியா ஊகிக்கும் தன்மை கொண்டவன் மனிதன் . ஆனால், எல்லோருக்கும் எது சரி, எது பிள்ளை என்று தெரிவதில்லை . உயிர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம் . முதலில் தாய் , தந்தை , சகோதரர்களிடம் அன்பாக இருந்தால் போதும் . பின்பு நீ மற்றையோரிடமும்  அன்பாக இருப்பாய் .
http://zentofitness.com/wp-content/uploads/2009/03/1638001945.jpg
இரக்க சுபாவத்துடன் இரு .நண்பர்களிடம் , உறவினர்களிடம் இரக்கமாக இருக்கப்பழகு . சில பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லி கொடுப்பதில்லை . பிள்ளை போகும் போக்குக்கு ஏற்ப விட்டு விடுவார்கள் . அது தீய வழியில் செல்கிறது . பின்பு கண்ணீர் வடித்து என்ன பிரயோசனம் .

இறைவனை வழிபடுங்கள் . உங்கள் கஷ்டங்களை சொல்லி கண்ணீர் பொழிந்து இறைவனிடத்தில் மன்றாடுங்கள் . உங்கள் கஷ்டத்தை எல்லாம் இறைவன் போக்குவான் . இறைவனிடத்தில் அன்பு, கருணை, இரக்கத்துடன் இருங்கள் . விசுவாசமாக இருங்கள் . எல்லா மதமும் அதை தான் சொல்கின்றன . 

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

அனைத்து மதங்களின் ஆழ்ந்த கருத்துக்கலின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Pavi said...

நன்றி ஈஸ்வரி அம்மா அவர்களே