Friday, May 20, 2011

தற்கொலைகளும் , வாகன விபத்துகளும்எல்லா உயிர்களும் இந்த உலகில் வாழத்தான் ஆசைப்படுகின்றன . ஆனால், சிலர் தாமே தம்மை அழித்துக் கொள்கிறார்கள் . இது மிகவும் தவறு . மனித உயிர்கள் தாமாவே தம்மை வருத்தி இந்த உலகை விட்டு பிரிகிறார்கள் . இப்போது எல்லாம் கூடுதலாக தற்கொலைகளும் , வாகனவிபத்துகளும் அதிகரித்து  விட்டன . அகால மரணங்கள் தான் கூடுதலாக நடக்கின்றன . இயற்கை மரணங்கள் குறைவு என்றே சொல்லலாம் .
http://www.teensuicideprevention.org/images/teen_suicide_copy.jpg
ஒரு நிமிடம் தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் தைரியம் இருந்தால் தான் வாழ முடியும் என்பது ஆன்றோர் வாக்கு. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சிலரின் வாழ்க்கை வசந்தம் ‎வீசுகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும் சுழன்று தாக்க வாழ்க்கையே ‎சோகமாகி விடுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிரச்சினையே வரக்கூடாது ‎என்று நினைக்கிறான். அதுதான் மனித இயல்பும்கூட. வெளி உலகில் வீராப்பு பேசும் ‎எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் ‎உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே ‎முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தடுக்கப்பட்ட ‎செயலைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர்.‎
http://www.parentingangrykids.com/wp-content/uploads/20_6_orig.jpg
தாமே தமது உயிரை வருத்தி சாவது என்பது எவ்வளவு துன்பமான காரியம் . ஐயோ நினைத்து பார்க்கவே முடியவில்லை . பிரச்சனைகள் பலவிதங்களில் வரலாம். அது தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி, ‎தீராத நோய், திருமண வாழ்வில் விரக்தி அடைதல், கடன் மற்றும் வியாபாரத்தில் ‎நஷ்டம் என அடுக்கிக் கொண்டே போகலாம். பெரும்பாலான தற்கொலைகளும் ‎இவைகளால்தான் பெரிதும் நிகழ்கின்றன. பெற்றோர் திட்டுவதால் கூட இந்த ‎காலத்தில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.‎ இதெல்லாம் தீர்த்து வைக்க வேண்டிய பிரச்சனை . இவற்றுக்கு எல்லாம் தற்கொலைதான் தீர்வா ? இல்லையே . சில விடயங்களை பேசி தீர்த்து கொள்ளலாம் . சில விடயங்களுக்கு காலம் பதில் சொல்லும் , சில விடயங்களுக்கு பொறுமை அவசியம் . 

தற்கொலை என்பது தனிப்பட்ட ஒருவரது மனநிலையைப் பொறுத்தது. மன இறுக்கம், பிரச்சினை, தோல்வி, நம்பிக்கையின்மை, ஏமாற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்காக தற்கொலைகள் நடக்கின்றன.ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏதேனும் ஒன்று தவறாக நடக்கும்போது மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கிறான். தற்கொலைக்கு வயது, பொறுப்புகள், ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்ற பேதமெல்லாம் இல்லை. மனநிலை ஒன்று மட்டுமே காரணமாகிறது.
http://image.lyricspond.com/image/s/artist-suicide/album-suicide-first-album/cd-cover.jpg
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் ‎உட்பட்டவனாகவே வாழ்கின்றனர். இன்னும் சோகங்களையும், கஷ்டங்களையும், ‎ஏக்கங்களையும், ஆசைகளையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு உதட்டில் ‎புன்னகை சிந்தும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆக, ‎பிரச்சினை என்பது தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல, ஊர் முழவதும், நாடு ‎முழவதும் ஏன்! உலகம் முழவதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.‎இதெல்லாம் மனித வாழ்வில் சகாயமான விடயம் . இவற்றுக்கு எல்லாம் தற்கொலைதான் தீர்வா ? அப்படியானால் எவ்வளவு பேர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் இந்த உலகில் ? இதெல்லாம் மடத்தனம் . 
http://www.ftlauderdaleinjurylawyerblog.com/Motorcycle-Accident-Intersection1.jpg
தற்கொலை செய்வதால் இவர்களின் பிரச்னை தீரப் போகிறதா. இல்லை அவர்கள் ‎அதிலிருந்து தப்பித்து கொள்ளலாமென்று நினைக்கிறார்களோ தெரியவில்லை. ‎ஆனால் ஒன்று மட்டும் உறுதி. ஒருவன் தற்கொலை செய்துகொள்வது மன்னிக்க ‎முடியாத பாவம். பிறப்பு எவ்வாறு இறைவனின் நாட்டத்தை கொண்டு ‎இயற்கையாக நிகழ்கிறதோ அதுபோல ஒருவருடைய இறப்பும் அது இறைவனின் ‎நாட்டத்தை கொண்டே இயற்கையாகவே நிகழ வேண்டும். உயிரை நம்மிடமிருந்து ‎பறிப்பதற்கு இறைவன் ஒருவனுக்கே அதிகாரம் இருக்கிறது. அவனுடைய ‎அதிகாரத்தில் நாம் கைவைத்தால் அது மன்னிக்க முடியாத பாவமே. 
http://cdn.wn.com/pd/98/bb/2324b30eb7539e9f477ee2ba6c43_grande.jpg
அடுத்து மனித உயிர்கள் வாகன விபத்துகளால் அளிக்கப்படுகின்றன . அதிகமாக குடி போதையில் வாகனத்தை செலுத்துவது , அவசரமாகவும் , வேகமாகவும் வாகனத்தை செலுத்துவது , வாகனம் ஒட்டி அனுபவம் இல்லாமை போன்ற காரணங்களால் வக்கன விபத்துகள் கூடுதலாக இடம்பெறுகின்றன . மனிதர்களை தட்டி விட்டு வாகன சாரதிகள் உடனே தமது வாகனத்தை அவசரமாக எடுத்து சென்று விடுகிறார்கள் . இது தான் இப்போது எல்லாம் நடக்கிறது .
வாகனம் ஒன்றுடன் இன்னொரு வாகனம் ஏட்டிக்கு போட்டியாக ஓடுவது அதிகமாகி விட்டது . இதனால் வீதி போக்குவரத்தை கூட மீறுகிறார்கள் . அவர்கள் மனித உயிரை தூசாக நினைக்கிறார்கள் . இவை எல்லாம் நாம் தினம் தினம் பத்திரிகைகளில் எல்லாம் இந்த மரண ஓலங்களை படிக்கும் பொது நெஞ்சம் பதை பதைக்கிறது அல்லவா ? 

எல்லோரினதும் சிந்தனைக்கு ..................
1 comment:

சந்ரு said...

நல்ல பதிவு அவசியமான பதிவும்கூட...

விழிப்புணர்வு அவசியம்