Monday, September 5, 2011

மனிதா.......... மனிதா ............

காட்டை அளிக்கிறாய் 
இயற்கையின் சமநிலையை 
குழப்பி மரங்களை அளித்து 
வீடு கட்டி சௌக்கியமாக 
வாழ்கிறாய் மனிதா 

ஏன் இந்த அழிவுகளும் 
காட்டு தீ பரவுவதும் 
வெள்ள அனர்த்தங்களும் 
சூறாவளிகளும் வருகின்றன 
என்று தெரிகிறதல்லவா 
மனிதா மனிதா 
http://cubsindia.com/cubs/wp-content/uploads/2011/05/The-Lazy-Man.png
பணக்காரன் சொகுசாக 
வாழ்ந்து கொண்டிருக்கிறான் 
ஏழை இன்னும் தாழ்ந்து 
வரியா நிலைக்கு சென்று 
கொண்டு இருக்கிறான் 

பணத்துக்காக கொலைகூட 
செய்ய துணிகிறான் மனிதன் 
இதனால் குற்றங்கள் பெருகி 
குற்ற செயல்கள் அதிகரிக்கின்றன 

சொந்தங்களுடன் அன்பாக 
இருக்காமல் பகைமையுடன் 
வாழ்வை களிக்கிறான் 
நான் பெரிது நீ பெரிது 
என்று சண்டை இடுகிறான் 
எல்லாம் இந்த பணம் செய்யும் 
வேலை மனிதா 

இறக்கும் போது கூட உனக்கு 
உன் பணம் பின்னால் வராது 
உனக்கு சொந்தம் என்று சொல்லி 
கொள்ளும் உறவுகள் தான் 
மனிதா சுகமாய் வாழடா 
சோகமாய் வாழாதேடா

ஆசைகள் எல்லாவற்றையும் 
துறந்து மரணப்படுக்கையில் 
கிடக்கையில் உனக்கு உன் 
உறவுகளும், சொந்தங்களும் 
தான் உன்னை கவனிப்பார்கள் 
மனிதா ..................மனிதா ...............
இனியாவது திருந்தி நடக்க 
முயற்ச்சி செய்யடா ........................


1 comment:

குறையொன்றுமில்லை. said...

மிகவும் நல்ல கவிதை வாழ்த்துக்கள்.