சிலர் பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்கிறார்கள் . சிலர் காதலித்து வீட்டுக்கு சொல்லாமல் ஓடி போய் கல்யாணம் செய்கிறார்கள் . சிலர் பெற்றோர் சம்மதம் தேவையில்லை என்று பெற்றோரை உதறித்தள்ளி விட்டு விட்டு இருவரும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள் . ஏதாவது பிரச்சனை என்றால் கடைசியில் பெற்றோரிடம் தஞ்சம் அடைகிறார்கள் .
காதலில் தோல்வி அடைகிறார்கள் இந்தக் காலத்தில் பலர் . அதில் ஆண்களும் , பெண்களும் இருவரும் தான் . முதலில் நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்றால் முதலில் அவனோ, அவளோ அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளுங்கள் . எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது . உனக்கு என்னை பிடித்து இருக்கிறதா என்று கேட்டு விட்டு நீங்கள் காதலில் இறங்கலாம் . ஆனால், இதை முதலில் சொல்லாமல் அவள் பின்னால் திரிந்து செருப்பு தேய்ந்தவுடன் நீங்கள் உங்களது காதலை சொல்லும் வேளை அவள் தனது கணவரிடம் வெளிநாடு போகப் போகிறாள் என்ற செய்தி உங்கள் காதில் விழும் . இது தேவையா ?
ஒருவருக்கு உங்களை பிடிக்கிறது என்றால் உங்களது நடத்தை , பேச்சு , உங்களது வசீகரம் , உங்கள் அழகு , உங்களது பெருந்தன்மை , மற்றவர்களுடன் பேசிப்பழகும் விதம் , உங்களது குடும்பத்தின் ஒற்றுமை இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம் . உங்களை பிடிக்க ஆயிரம் காரணம் இருக்கு என்று சிலர் சொல்வார்கள் .
முதலில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து , உங்களை முழு விபரத்தையும் அவரிடம் கூறலாம் . பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளுவார் . இப்போதெல்லாம் பல்கலைகழகங்களில் எல்லாம் ஒருவரோடு பேசி பழகும்போது அவரது குணாதிசயங்கள் உங்களுக்கு பிடித்து போகும் போது நான் இவரை கல்யாணம் செய்தால் நல்லம் . என தங்களது மனதில் உள்ளதை தெரிவித்து கொள்கிறார்கள் . இருவரும் படித்தவர்கள் . தமது எதிர்காலத்தை யோசித்து , சிந்தித்து முடிவு எடுக்கிறார்கள் .
சிலர் சினிமாவில் காட்டுவது போல் தாமும் நிஜ வாழ்வில் நடந்து கொள்ள நினைக்கிறார்கள் . காதலில் தோல்வி என்று போதைக்கு அடிமை ஆகுதல் , சிகரட் பிடித்தல் போன்ற தீய நடத்தைகளில் ஈடுபட்டு உங்களது உடம்பை நீங்களே வருத்தி கொள்கிறீர்கள் . அது தவறு . நீங்கள் ஒருதடவை காதலில் தோல்வி உற்றால் உங்களது பெற்றோர் பேசி செய்து வைக்கும் பெண்ணையோ \ ஆணையோ திருமணம் செய்யுங்கள் .
யாரும் இந்த உலகில் நல்லவர்களும் இல்லை , கெட்டவர்களும் இல்லை . சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் ஒருவரை நல்லவர்களாகவும் , கெட்டவர்களாகவும் மாற்றுகின்றன . ஒருவர் சொல்கிறார் எனக்கு "குடிப்பவர்கள் எல்லோரும் தீயவர்கள் இல்லை , நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று " எனக்கு தெரியாதப்பா ?
2 comments:
நல்ல விளக்கம்... காதல் ஜெயிக்கும்.
நன்றி நண்பா...!
நன்றி நிரோஷ்
Post a Comment