சிங்கம் 2 படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது . வரிகளும் அருமை . விவேகாவின் வரிகளில் , சுவேதா மோகனின் குரலில், தேவி ஸ்ரீப்ரசாத் இசையில் பாடல் அழகாக இருக்கிறது .
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
உனது ஞாபகம் மறையவில்லை அதை
மறைக்க என்னிடம் திறமை இல்லை
விழியில் பார்க்கிறேன் வானவில்லை
அதை விழுந்த காரணம் தோணவில்லை
இதுபோல் இதுவரை ஆனதில்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
காலை எழுந்தவுடன் என் கனவுகள் முடிவதில்லை
மாலை மறைந்தாலும் பள்ளிக்கூடம் மறப்பதில்லை
தோழி துணையை விரும்பவில்லை
தோழன் நீயும் மாறவில்லை
பேச்சில் பழைய வேகம் இல்லை
பேச ஏதும் வார்த்தைகள் இல்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
சாரல் மழையினிலே உடல் ஈரம் உணரவில்லை
சாலை மரங்களிலே இன்று ஏனோ நிழல்கள் இல்லை
கால்கள் இரண்டும் தரையில் இல்லை
காலம் நேரம் மாறவில்லை
காற்றில் எதுவும் அசையவில்லை
காதல் போல கொடுமை இல்லை.(புரியவில்லை )
3 comments:
வரிகள் அருமை...
நன்றி...
பாடல் வரிகளைப் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.
உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்
Post a Comment