Monday, August 5, 2013

உறவுகள் அனைவரும் அன்புடன் இருக்க வேண்டும்



முன்னைய    காலங்களில் எல்லாம் உறவுகள் ஒன்றோடொன்று சந்தோசமாகவும் , அன்பாகவும் , ஒற்றுமையுடனும் இருந்தார்கள் . பின்பு போகப்போக அவை அனைத்தும் குறைந்து போய் உறவுகள் குறைந்து நண்பர்கள் , அயலவர்கள் தான் அவசரத்துக்கு உதவும் துணையாக மாறி விட்டனர் .

அவசர உலகில் இன்று யாருடைய உறவினர் இவர் என்று கேட்கும் நிலைமை தான் உள்ளது . அண்ணனை தம்பியின் மகளுக்கு தெரியாது . மாமியை மருமகளுக்கு தெரியாது , தம்பிக்கு அக்காவின் கணவரை தெரியாது . இப்படி இருக்கிறது உலகம் . 

ஒவ்வொரு உறவினரும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறார்கள் . ஒருவருடன் பேசி , சந்தோசமான தருணங்களான கல்யாணம் , பிறந்தநாள் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு போய் வந்தால் தான் அவர்களுக்கு உறவுகளின் அன்பு, பாசம் புரியும் . 

சிறு சிறு விடயங்களுக்காக உறவுகள் சண்டை போட்டு கொண்டு பிரிவது சகயமாகி விட்டது . அத்துடன் ஒருவருக்கொருவர் பொறாமைபடுவதும் அதிகமாகி விட்டது . என்னை விட அவன் சந்தோசமாக , நல்லா இருக்கிறான் என்று பொறாமைப்படுவது கூடாது . குழந்தைகள் தவறு செய்தால் அந்தந்த பெற்றோர்கள் அதை உடனுக்குடன் கண்டித்து சரி செய்ய வேணும், இதனால் பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்ந்து ஒருவரை ஒருவர் சரிசமமாகக் கருதி வளருவார்கள்.

குடும்பம் என்றால் சண்டை, சச்சரவுகள் வரத்தான் செய்யும் . அவற்றை தீர்த்து வைப்பவர்கள் உறவுகள் தான் . அவர்களை சமாதானப்படுத்தி , பிரச்சனைகளை தீர்த்து வைப்பது உறவுகளின் கடமை. விட்டுகொடுப்பு மிகவும் அவசியம் .

உறவுகள் பலர் ஒன்றுகூடி சுற்றுலா சென்று வந்தால் உறவுகள் வலுப்படும் . உணவகங்களில் ஒன்றாக கூடி விருந்து உண்பது போன்ற விடயங்களில் ஈடுபடும் போது ஒருவருக்கொருவர் பேசி ஒவ்வொருவருடைய இன்ப துன்பங்களில் கலந்து கொள்ளும் போது மகிழ்ச்சி உண்டாகிறது . நமது சொந்தங்கள் விட்டு போகாது தொடரும் . 




2 comments:

'பரிவை' சே.குமார் said...

உறவுகள் ஒன்று கூடி இருந்தால் கிடைக்கும் சந்தோஷமே தனிதான்... இன்றைய நிலையில் எல்லாக்குடும்பங்களுமே தனிமைப்பட்டுத்தான் நிற்கின்றன..

Pavi said...

வாழ்த்துக்கு நன்றி குமார்.
உங்கள் தொடர் பதிவை எழுதிகிறேன் . நன்றி