நாம் facebook பயன்படுத்துவது வழமை . அதில் இப்போது அனைவரையும் கவர்ந்திழுத்த விளையாட்டுகளில் ஒன்று தான் இந்த Barn Buddy. எல்லோரும் வயது பேதம் இன்றி இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள். நாம் இந்த கேமில் விளையாட எங்களுடைய நண்பர்களுக்கு அழைப்பு விட்டு அவர்களும் இந்த விளையாட்டை விளையாடலாம். அதில் இன்னொரு நன்மை உண்டு. நாம் அழைப்புவிடும் நண்பர்கள் இந்த கேமை விளையாடினால் எனக்கு ஒரு நன்மை உண்டு. அதாவது பத்து நண்பர்களை நான் இந்த விளையாட்டில் இணைத்து கொண்டேன் என்றால் நான் ஒரு நாய் வாங்கலாம். நாய் வாங்கினால் என்னுடைய அதாவது நான் பயிரிடும் காய்கறிகளை யாரும் களவு எடுக்க ஏலாது. களவு எடுப்பது குறைபடும் . அப்பிடி எடுத்தால் அவர்களுக்கு பத்து coines குறைக்கப்படும்.
கோழி வாங்கலாம். பார்ம் ஒன்று வாங்கி என்னுடைய பெயர் கொடுக்கலாம். இது விளையாடுவதன் மூலம் ஒரு உணர்வு . அதாவது நாம் ஒரு தோட்டம் வைத்து வளர்ப்பது போலவும், நீர் பாச்சி, களை பிடுங்கி , பூச்சி மருந்து தெளித்து எம்முடைய தோட்டத்தை பராமரித்து அவை செழித்து வளர்ந்ததும் காய்கறிகள் பறிக்கும் போது மனதில் பெரிய சந்தோசம் ஏற்படுகிறது . மனம் ஒரு மகிழ்ச்சி அடைகிறது.
காய்கறிகள் என்றால் புடோல், பூசணி , தக்காளி,மிளகாய், உருளை , கரட் போன்ற காய்கறிகளும் , திராச்சை, ஆப்பிள் , தோடை, என பல பழ வகைகளும் சந்தைக்கு போய் வாங்கி coins கொடுத்து நமது நிலத்தில் பயிரிடலாம். மட்டவர்களுடைய தோட்டத்தில் போய் களவு எடுத்து coins அதிகரிக்கலாம். அதைவிட நாம் பயிரிட்ட பயிர்கள் வளர்ந்து காய்த்தவுடன் அதனையும் விற்று பணம் சம்பாதிக்கலாம் .இப்படி பல சுவாரிசயங்கள்.
நான் பெரிதாக இந்த விளையாட்டுகள் விளையாடுவதில்லை. ஏதோ இந்த விளையாட்டு விளையாட வேண்டும் என்று தோன்றிச்சு விளையாடினேன் . நல்லாகத்தான் இருக்கு .இதைவிட இன்னும் ஒன்று நாம் விளையாட விளையாட level 1,2,3 என அதிகரிக்கும். நாம் நல்ல காசு சம்பாதித்தோம் என்றால் நிலம் வாங்கலாம் . நிலம் வாங்கி அதிலும் காய்கறிகள் பயிரிடலாம்.
எனக்கு இப்போது பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக மாறி விட்டுது இந்த barn buddy விளையாட்டு. நான் இப்போது நாய் வாங்கி விட்டேன் . சிறிய farm ஒன்று வாங்கி விட்டேன் . level 6 வந்து விட்டேன். இன்னும் நான் முன்னேற வேண்டும். என்னுடைய அல்லது என்னுடைய நண்பர்களின் தோட்டத்தில் பூச்சி , களைகளை யாராவது பிடுங்கியோ, பூச்சியை மருந்து அடித்து அழித்தாலோ அவர்களுக்கு அடுத்த level போவதுக்கு 2 புள்ளிகள் கூடும். எனக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாகி விட்ட இந்த barn buddy விளையாட்டு சூப்பர்.
No comments:
Post a Comment