Thursday, October 29, 2009

எனக்கு பிடித்த வரிகள் -2

 
அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ
  



மரம் வளரும் கொஞ்சம் இலை உதிரும்
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே
அழகழகாய் இனி பூ மலரும்
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும் 

என் காதல் உயிர் பிழைத்துக்கொண்டது உன்னைப்பார்த்து
என் வானம் இங்கு விடியுதே
என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்
உன் விரல்கள் எனைத்தீண்டுமே.
  



நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை
இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லைஉயிரே வா... 

கன்னி உந்தன் மடி சாய வேண்டு்ம்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலைக் கோதிட வேண்டு்ம்
கண்ணோடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர்காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்...
 

பித்துப் பிடித்ததைப் போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்



என் அழகென்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்ட்டாச்சு?
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்ட்டாச்சு?
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல
சாத்திரத்தில் வழியில்லை

 







பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!
உயிர் அல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்?
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

 

கை தட்டித் தட்டித் தட்டி பூவை எழுப்பு
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு
அட என்ன நினைப்பு அதைச் சொல்லியனுப்பு
என் காலடியில் சில வீடுகள் நகருது
இதோ இதோ இதோ இதோ இங்கே...
ஆகாகா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ
அவை நத்தைக் கூடுகளோ வீடுகள் இடம் மாறுமோ


 
 
அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே...
நெஞ்சம் நீந்த துடித்ததே
 

சந்தித்தோமே கனாக்களில்
சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட




காதல் வெறும் மேகம் என்றேன்..
அடை மழையாய் வந்தாய்...
மழையோடு நனைந்திட வந்தேன்..
நீ தீயை மூடினாய்....
மொழியாக இருந்தேனே...
உன்னால் இசையாக மலர்ந்தேனே..









ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறிவிடும்
இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும்



நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு
என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு
ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா
அடடா பாவம் வாலிபம் வாடிடும்



  நிலா நிலா என்கூட வா
சலாம் சலாம் நான் போடவா
நிலவே நிலவே வெயில் கொண்டுவா
அன்னைத் தந்தையாக உன்னைக் காப்பேனம்மா
அன்பு தந்து உன்னில் என்னைப் பார்ப்பேனம்மா



பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்





புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்




அந்த வானத்துக்கு ஒரு வென்னிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்




செம்பருத்தி நெஞ்சார
சம்மதத்த கேட்பார
சாதிசனம் சேர்ந்திருக்க கைப்பிடிப்பார...




கீழ் இமை நான் மேல் இமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்துகொண்டேன் காதல் என்றே
நாம் பிரிந்த நாளின் தான்
நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான்
நம் காதல் தெரிந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே
உயிரின் தாகம் காதல் தானே

உயரத்தை குறைத்தால், இமயம் ஏது?
துயரத்தை கழித்தால், வாழ்க்கை ஏது?
மழைத்துளி எல்லாம் முத்துக்கள் ஆனால்,
மனிதர்கள் பருக குடிநீர் ஏது?


அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே
வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்
  



பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் இரங்குமோ
அது காலத்தின் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா



பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!
பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?


கடலாய்ப் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய்த் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்தக் காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே
  



அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...




 

கண்கள் தாண்டி போகதே என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே
வந்து சேர்ந்து விடு என்னை சேர விடு இல்லை சாக விடு


கண்விழித்து பார்த்தபோது
கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும்
நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம்
உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லில் எல்லாம்
உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
 
 

காதல் என்றால் அது பூவின் வடிவம்,
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்,
காதல் வந்தால் இந்த பூமி நழுவும்,
பத்தாம் கிரகம் ஒன்றில் பாதம் பரவும்,
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்,
ஒரு தட்ப வெப்ப மாற்றங்களும் நிகழும்,



நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்



என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

 
உன் முகம் பார்த்தேன் நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடன் நான் வருவேன்
புன்னகை செய்தாய் உயிர் வாழ்வேன்
புறக்கனித்தான் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மெளனத்தில் இருக்கம் எண்ண வலிகள்
காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்லும்


பகலின்றி வாழ்ந்திருந்தேன்
சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன்
வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய்
வாடவும் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா

7 comments:

Pavi said...

என்னை மிகவும் கவர்ந்த வைர வரிகள்

V.N.Thangamani said...

நீ நீ நீ நீ .................ளமான கவிதை
"நீ என்பதே இன் நான் தானே"
" உயிருக்குள் உயிர் சென்று சேரவேண்டும் "
இணையற்ற வரிகள். பதிவுக்கு நன்றி பவித்ரா.
இவன் வி.என்.தங்கமணி www.vnthangamani.blogspot.com

maruthamooran said...

////அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ////

ஆங்கில கலப்பு அதிகமென்றாலும், அண்மையில் வந்த பாடல்களில், நான் அதிகம் ரசித்தவற்றில் இதுவும் ஒன்று.

Pavi said...

நன்றி தங்கமணி சார் .

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் எனக்கும் பிடித்து இருந்தது மருதமூரான் அண்ணா.

வால்பையன் said...

எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்!

எழுத்தில் தந்தமைக்கு மிக்க நன்றி!
பாட்டில் கேட்கும் போது சில வரிகள் புரிவதில்லை!

Pavi said...

உண்மைதான் அண்ணா.
பாடல்களில் எல்லாம் நல்ல வரிகள் இருந்தும் சில வரிகள் புரிவதில்லை .
அது உண்மை தான் .