Saturday, October 31, 2009

எனக்கு பிடித்த வரிகள் -3


கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை



குங்கும வாசனைகள் ஹைய்யோ
சந்தன வாசனைகள் ஐய்யோ
என்னிடம் உன் வாசனை ஹைய்யோ ஐயய்யோ








தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கனவம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா



கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தாள் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் ஆ..
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தாள் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்
பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் முகம் வாடாலாமோ
வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்


ஏதும் இல்லை வண்ணம் என்று நானும் வாடினேன் - நீ
ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாற்றினாய்
தாயும் இல்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ
தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய்
கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன்
மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள்
உன் நிழல் கொடுத்த தைரியத்தால் உண்மை அறிகிறேன்



 பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்...
பின்பு பார்வை போதும் என நான்...
நினைத்தே நகர்வேன்;
ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே


தூங்கும் போதும் யோசிப்பேன்
தூங்காது உனை நான் நேசிப்பேன்
உண்ணும் போதும் உன்னையே
உண்ணவே நான் யாசிப்பேன்
போகும் இடமெல்லாம் உந்தன் கைகளை
பிடித்தபடியே நான் நடக்கிறேன்
என்னக் கோபமோ கண்ணை கட்டி நீ
உன்னைத் தேடவே சொல்கிறாய்
காதலே நான் ஒரு காதலின் தூதுவன்
நீ எனை காதலி காதலே வாழுவாய்...


 திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
இன்னும் நீ திருடத்தானே ஆசை அறிந்தேன்
 என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்


வீர சைவர்கள் முன்னால் - எங்கள்
வீர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி - என்றும்
மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலஷ்மி நாகர் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்


கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவென பூத்த மேலாக்கு நீ
தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ
வளவளவென பேசும் புல்லாக்கு நீ
அய்யாவே அய்யாவே அழகியப் பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தக் காரிங்க


 அண்ணனோ தம்பியோ எல்லாரும்
இங்கே வந்தா டப்பாங்குத்து தானே
ஓவரா ஆச்சுதின்னா வெட்டு குத்து தானே
எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல
எங்களுக்கு ஜாதி மதம் ரெண்டுமில்ல
கட்சிக்கார மச்சி.. என்ன ஆச்சி..
வேட்டி அவுந்து போச்சு..


நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி
நீ அறியா சேதி இல்லை எங்கள் கிருஷ்ண சுவாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கை தீர்ப்பாய்
உன் ஞானம் போற்றிடாத விஞ்ஞானம் ஏது
அறியாதார் கதை போலே அஞ்ஞானம் ஏது
அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை
உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை
வாராது போவாயோ வாசுதேவனே
வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே


ஓ... உன்னுடைய பூ முகத்தை பாத்துக்கொண்டே நான் இருப்பேன்
உன்னுடைய ஞாபகத்தை விட்டுவிட்டால் நான் இறப்பேன்
உன்னுடைய நினைவுகைள உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன்
என்னிடத்தில் எதுவுமில்லை உயிர்மட்டும் பாக்கிவைத்தேன்
உயிரே... உயிரே... உனக்காய் வாழ்கிறேன்....


ஆனால் என்னை விட்டுப் போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன் கோபக் குயிலே
பித்துப் பித்துக் கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடிப்போனேன்
நீயில்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே
ஐந்து புலன்களின் அழகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா


நீ இல்லையென்றால் என்வாழ்வே தனிமை
மரணத்தை விளையும் அந்த நொடி தானே கொடுமை
உதிரமே மையாக சதைகளே ஏடாக
கதிதங்கள் செதுக்கிடுவேன் நரம்புகள் உயிராக
நான்கு உயகங்கள் இந்த பூமி வாழ்கிறது
அதையும் தாண்டி நம் காதல் வாழுமே
கூடும் உயிரும் உன்னை தேடுதே


நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலை கோதி..
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

7 comments:

V.N.Thangamani said...

அற்புதமான வரிகளை தேடித்தேடி பிடித்திருக்கிறீர்கள் பவித்ரா. இதய்த்தை வருடும்... துளைத்தெடுக்கும் வரிகள். . . வாழ்க வளமுடன்.
வி.என்.தங்கமணி www.vnthangamani.blogspot.com

Anonymous said...

mmmmmmmm it's true. thankamani sir.

Pavi said...

நன்றி தங்கமணி சார்

V.N.Thangamani said...

நன்றி பவித்ரா எனது " மதம் " கவிதை படித்து பார்த்து கருது கூறுங்கள்.
அன்புடன் வி.என்.தங்கமணி www.vnthangamani.blogspot.com

V.N.Thangamani said...

நன்றி பவித்ரா எனது " மதம் " கவிதை படித்து பார்த்து கருது கூறுங்கள்.
அன்புடன் வி.என்.தங்கமணி www.vnthangamani.blogspot.com

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க.

Pavi said...

ரொம்ப நன்றி