Monday, March 15, 2010

தாகத்துக்கு அருந்துங்கள் இளநீர்

 http://www.alagankulam.in/images/articles/CoconutWater.jpg
இப்போது சரியான வெயில் காலமாக இருப்பதால் வெயிலின் சூட்டை தணிக்க எல்லோரும் இளநீர் குடிக்கிறார்கள் . எல்லோரும் அருந்தும் பானமாக இளநீர் உள்ளது . எல்லோரும் குடிக்கலாம் . தாகத்தை தீர்ப்பதற்க்கு மிகவும் உகந்தது . இயற்கையின் கொடை. கலப்படம் அற்றது . நோய் நொடிகளை தீர்க்க வல்லது .
 http://blog.baliwww.com/wp-content/photos/nyuhgadang.jpg
இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்க மிகவும் உகந்த பானம் .
http://www.reggaemarathon.com/blog/wp-content/uploads/2008/09/coconut-water-woman1.jpg
தினமும் ஒரு இளநீரை காலை நேரத்தில் குடித்து வர வேண்டும். கோடை காலங்களில் எத்தனை இளநீர் வேண்டுமானாலும் பருகலாம். காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும் 30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளன. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும் தசைகளுக்கும் ஒருவிதப் புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டிவிடுகின்றன. இதனால்தான் இளநீர் அருந்தியதும் நமக்குப் புதுத்தெம்பு கிடைக்கிறது. உற்சாகம் பிறக்கிறது .
http://images.wikio.com/images/p/3b5db/coconut-water-what-are-coconut-water-health-benefitsc-vitamins-and-nutrition-values-of-coconut-water-medicinal-and-health-benefits-of-coconut-water.jpeg
பொதுவாக 3 வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், இளநீரை எந்த நேரத்திலும், எந்த காலத்திலும் அருந்தலாம். அதுதான் இளநீரின் சிறப்பும் கூட .

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது. இதனால்தான் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்இ மஞ்சள் காமாலை நோயாளிகள் சூட்டால் வெளியாகும். மஞ்சள் நிற சிறுநீரை மாற்றவும் இளநீர் தவறாமல் அருந்தச் சொல்லுகிறார்கள் வைத்தியர்கள் .

நம் பாரம்பரிய பானமான இளநீர் அருந்தினால் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. புத்துணர்ச்சியும் தொடர்ந்து இருக்கும். காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள். வீட்டில் இல்லாது விட்டால் கடையில் விற்கிறார்கள் . ஒரு இளநீர் இருபது ரூபாய்க்கு . வாங்கி அருந்துங்கள் .
http://s3.amazonaws.com/readers/healthmad/2008/04/20/147053_0.jpg
காலை , மதியம் என எந்த நேரத்திலும் இளநீரை அருந்தலாம் . உங்களது தாகத்தை உடனே தீர்க்கும் . களைத்து சோர்வு அடைந்தவர்களுக்கு ஒரு உற்சாகத்தை தர வல்லது இளநீர் .
http://www.dinakaran.com/Healthnew/H_image/ht245.jpg
உங்கள் வாழ்நாள் முழுக்க அழகான தோற்றத்துடன் நலமாக நீடிக்கும் சக்தி தினசரி அருந்தும் இளநீரில் இரகசியமாக உள்ளது. இந்த இரகசியத்தை அடிக்கடி பயன்படுத்துங்கள்.பயனை பெறுங்கள்.









13 comments:

தோழி said...

நல்ல தகவல்கள்.. நன்றி

அண்ணாமலையான் said...

இளநீர் நல்லதுதான்.. ஆனால் தாகத்துக்கு தண்ணீர்தான்.. எதுவும் மாற்று இல்லை..

தங்க முகுந்தன் said...

யாழ்தேவியின் இவ்வார நட்சத்திரப் பதிவரானமைக்கு எமது வாழ்த்துக்கள்!

Anonymous said...

mmmmmmm ilaneeril ivvalavu visayam irukka..........



kopi

Anonymous said...

nalla thakaval. payanulla thakaval.


siva

ரவிசாந் said...

இளநீரைப் பற்றிய புதிய தகவல்களை அளித்ததற்கு வாழ்த்துக்கள்.

Pavi said...

நன்றி தோழி.

Pavi said...

நன்றி தங்க முகுந்தன் உங்கள் வாழ்த்துக்கு .

Pavi said...

நன்றி கோபி

Pavi said...

நன்றி சிவா

Pavi said...

நன்றி ரவிசாந்.உங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்கும்

VANJOOR said...

CLICK AND READ PLEASE


இளநீர் இனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும்

Pavi said...

நன்றி VANJOOR