Tuesday, April 20, 2010

படித்ததில் பிடித்தது

நான் படித்து ரசித்த கவிதைகளை எனது நண்பர்களுடன் பகிந்து கொள்வது வழமை . நீங்களும் வாசித்து பாருங்கள் . வித்தியாசமான கவிதைகள் . நான் இந்த கவிதையை எழுதியவர்களின் பெயரையும் குறிப்பிட்டு உள்ளேன் . அவர்களுக்கு நன்றிகள் . 


http://www.baguiocity.com/ext_fotos/fisherman.jpg

மனசு

ரூபிணி
 
மீன் சாப்பிடக்கூடாது என்றிருந்தேன்
இப்போது சாப்பிடுகிறேன்
மீனவன் சாப்பிடுவதற்காக

http://www.womansday.com/var/ezflow_site/storage/images/wd2/content/family-lifestyle/relationships/what-to-say-when-a-friend-is-ill/328576-1-eng-US/What-to-Say-When-a-Friend-Is-Ill_full_article_vertical.jpg

மரணப்பார்வை..!

ஜே.டோனி
 
ஏய் மரணமே!
நீ என்னை
தீண்டும் முன்
தாண்டிவிடுவேன் என்
வாழ்க்கைக்கான
வெற்றியின் தூரத்தை!
இருப்பினும்
உன்னை நான்
அதிகமாய் நேசிக்கிறேன்,
இப்பூமியின் மாந்தர்கள்
அனைவரையும் நீ
ஒன்றாய் கருதுவதால்...

http://www.heavensfamilymedia.org/updates/2008_03/widow1.jpg

விதவை

ராம்பிரசாத்
 
இதழ் இழந்த
மலராய் - மலர்
இழந்த மங்கை நான்.....

துக்கத்தை உணர்த்துவது
கறுப்பெனில் - வாழ்க்கையை
தொலைத்ததன் அடையாளம்
வெள்ளையா.....

தேடினேன் விடியலை
இருளில் - ஏற்ற விரும்பிய
விளக்கை அணைத்து அணைக்கவே
ஆர்வம் கொண்டனர் அனைவரும்.....

வேண்டாத ஆறுதலை,
ஆதரவை தருவதாய் - வெந்த
புண்ணில் வேல் பாய்ச்சினர்
வீட்டினர் கூட.....

மேகம்போல் வந்து
மேகமாய் மறைந்த மணாளன்
மின்னலாய் வந்து உயிர்
எடுத்தவன் எமன்.....
வானவில்லின் ஆயுளைப்போல்
வாழ்க்கையின் வசந்தங்கள்
மழை நின்ற வானமாய்
என் வாழ்க்கை.....


மேகம்போல் வந்து  மேகமாய் மறைந்த மணாளன் எவ்வளவு  யதார்த்தமாக இருக்கிறது .ராம்பிரசாத் அருமையாக குறிப்பிட்டு உள்ளார் .

 http://weblogs.cltv.com/news/local/chicago/Money%20stacks.jpg

பணம்

வித்யாசாகர்
 
பெட்டியில்
பூட்டி பூட்டி வைத்ததில்
காகிதமும் பணமும்
ஒரே ஜாதியெனப் புரிந்தது!

http://dpad.gotfrag.com/files/upload/xander_xero_kh4.jpg

நான்

திலகபாமா
 
நட்சத்திரக் கூட்டத்திடையே
ஒற்றை நிலவாய்
என்றும் தனிமையில்

உணர்வில் நேச நெருக்கம்
நேர்ந்திட
நதி நீரில்
"நான்" தொலைந்து நீயாகியிருக்க
உனக்கு தெரியாமல் போன
என் முகம்

உன்னால் தொலைத்து விடமுடியாத
"நான்"கள்
நீர் பிடித்து தூக்கித்
தாகம் தீர்த்த
பச்சை மண் பானைகளோடு
கரைத்துப் போனது
என்
கனவுகளையும் சேர்த்து

வனைய முடியாமல் போனதற்காய்
வாளேந்தும் பரசு ராமர்கள்

காதலில்
களைந்து விடும் "நான்"கள்
சாத்தியமாக
மண்ணிலென்ன
கண்களறியா காற்றில் கூட
நீர் பிடித்து வருதல்
கை கூடிவரும்
உனக்கும் எனக்கும்

http://www.amitbhawani.com/blog/Images/S/Suicide-Death.jpg

மனிதா ஏனிந்த மனமாற்றம்

கி.குணசேகரன்
 
காதல் என்பது தெய்வீகம்
சாகத் துணிந்தால் பரலோகம்
ஆவி சுற்றும் நரகத்தில்
பேயாய் பிசாசாய் அலையவரும்
காதல் பரிசா? தற்கொலைகள்? - அல்ல
கோழைகள் செய்யும் விளையாட்டா?
மனிதா ஏனிந்த மனமாற்றம்?
எதனால் இந்த தடுமாற்றம்?
மறந்து வேண்டாம் தற்கொலைகள்.

கடனால் தொல்லையும், காதல் தோல்வியும்
தற்கொலையாலே தீர்ந்திடுமா?
வயிற்று வலியும் வறுமைவாழ்வும்
தற்கொலையாலே போய்விடுமா?
கணவன் மாமி கொடுமைகள்
தீயில் எரிந்தால் ஓய்ந்திடுமா?

தோல்வியெல்லாம் வெற்றிப்படியாய்
கொள்வாயானால் துயர் எதற்கு?
பிணியைப் போக்க மருத்துவர்கள்
தினமும் அரசில் பணியாற்ற
ஆயிரமாயிரம் மருந்துக்கடை
ஓயாபணியில் காவலர்கள் எல்லாம்
உனக்காய் இருக்கையிலே பூச்சிமருந்தை
குடிப்பாயோ? கோழையாக இருப்பாயோ?

நிம்மதி தேடி தற்கொலையை?
நிம்மதியாக நீ செய்தால்
நிம்மதி வருமோ உனக்கேதான்?
நிம்மதியின்றி அழுவார்கள்
நிம்மதி இழந்த உன் குடும்பம்
தெருவினில் நின்றே தடுமாறும்
ஊரார் உறவார் பழித்திடுவார்
நண்பர் சுற்றமும் இகழ்ந்திடுவார்
பொன்னும் பொருளும் இழந்திட்டால்
பேணி நாளும் மீட்டிடலாம்
இறைவன் கொடுத்த உயிரல்லவா!
மறைகள் போற்றும் கொடையல்லவா
மனிதா ஏன் இந்த மனமாற்றம்?
எதனால் இந்த தடுமாற்றம்?
மறந்தும் வேண்டாம் தற்கொலைகள்
வெறுப்போம் ஒழிப்போம் தற்கொலையை.



கடனால் தொல்லையும், காதல் தோல்வியும், தற்கொலையாலே தீர்ந்திடுமா? வயிற்று வலியும் வறுமைவாழ்வும் தற்கொலையாலே போய்விடுமா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தற்கொலைகள் அதிகமாகி விட்டன . சிறப்பாக இருக்கிறது வரிகள் . குணசேகரனின் கவிதை அருமையாக இருக்கிறது .

8 comments:

S Maharajan said...

கவிதையை மட்டுமல்லாது அதை எழுதிவர்களின் பெயரையும் போட்டு உங்கள் நன்றியை தெரிவித்த விதம் "நேர்மையான அழகு" வாழ்த்துக்கள் பவி...

Anonymous said...

கவிதைகள் அருமை

sutha

Anonymous said...

mmmmm super......



vino

Anonymous said...

பிடிச்சிருக்கு


மனோ

Pavi said...

நன்றி மகாராஜன்

Pavi said...

நன்றி சுதா

Pavi said...

நன்றி வினோ

Pavi said...

நன்றி மனோ