Monday, April 26, 2010

சென்னை அணி வெற்றி கிண்ணத்தை சுவீகரித்தது

 Chennai Super Kings clinched the Indian Premier League title after
 beating Mumbai Indians by 22 runs in the final played at DY Patil 
Stadium in Mumbai on April 25, 2010. Photo: K.R. Deepak

நான் எதிர்பார்த்த அணி , வெற்றி பெறும் என நினைத்த அணி , எனக்கு பிடித்த அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று ஐ.பி.எல் வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது . சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினருக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
Chennai Super Kings

 நேற்றைய  போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன்மூலம், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன்முறையாக ஐ.பி.எல்., கிண்ணத்தை  வென்று சாதித்தது. 

கடந்த 2008 ல் நடந்த  இறுதி போட்டியில் சென்னை அணி, ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து ஏமாற்றியது. கடந்த 2007ல் இந்திய அணிக்கு "டுவென்டி-20 உலக கோப்பை பெற்றுத்தந்த தோனி, நேற்று சென்னை அணிக்கு ஐ.பி.எல்., கோப்பை பெற்றுத்தந்து, ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
 http://4.bp.blogspot.com/_zkp6_xoBxfY/S6u_3w-LcxI/AAAAAAAAE30/oiEMrE5XiTc/s1600/MI-vs-CSK-IPL3-Photos-1.jpg
நேற்றைய  இறுதி போட்டியில்  சென்னை அணி வெற்றி பெற்றதன்மூலம், ஐ.பி.எல்., கோப்பை வென்ற முதல் இந்திய கப்டன் ,  என்ற பெருமையை தோனி பெற்றார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் வார்ன் (2008, ராஜஸ்தான்), கில்கிறிஸ்ட் (2009, டெக்கான்) கோப்பை வென்றனர்.
 Chennai Super Kings celebrating after lifting the coveted IPL 
trophy. Photo: K.R. Deepak
நேற்றைய இறுதி போட்டியில்  சுரேஷ் ரெய்னாவின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க சென்னை அணி கிண்ணம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் . சச்சின் களமிறங்கியும் 22  ஓட்டங்கள்  வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாம் இடம் பெற்று ஆறுதல் தேடியது.
Chennai Super Kings wins the IPL 2010 Season 3, IPL Final Score
சென்னை அணிக்கு ஹைடன், முரளி விஜய் இணைந்து மந்தமான  தொடக்கம்   கொடுத்தனர் . ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் ஹைடன் திணற, 4  ஓட்டம்  தான் எடுக்க முடிந்தது. அடுத்த ஓவரில் மலிங்கா 2  ஓட்டம்  தான் கொடுத்தார். பின் ஹர்பஜன் பந்தில் ஹைடன் ஒரு சிக்சர் அடித்து நிம்மதி தேடினார். 
Bollinger celebrating the dismissal of Shikhar Dhawan. Photo: K.R.
 Deepak
மறுபக்கம் ஜாகிர் பந்தில் முரளி விஜய் ஒரு சிக்சர் அடித்தார். பெர்ணான்டோ வேகத்தில் விஜய்(26) அவுட்டானார். சிறிது நேரத்தில் போலார்டு பந்தில் ஹைடன்(17) வீழ்ந்தார். பெர்ணான்டோ பந்தில் பத்ரிநாத்தும்(14) அவுட்டாக, சென்னை அணி 11.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 67 ஓட்டங்கள்  எடுத்து இருந்தது .
Man-of-the-match Suresh Raina, made a breezy 35-ball 57. Photo: 
K.R. Deepak


பின்னர் வந்த தோனியும் , ரெய்னாவும் அணியை மீட்டனர் .நேற்றைய ஆட்டத்தின் சிறப்பம்சமே சுரேஷ் ரெய்னாதான். மும்பை பந்து வீச்சாளர்களைப் பதம் பார்த்த ரெய்னா 35 பந்துகளில் 57 ஓட்டங்களை  குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.  இரண்டு தடவைகள் ரெய்னாவின் பிடிஎடுப்பை கொட்டை விட்டனர் மும்பை இந்தியன்ஸ் அணியினர் . இதுவே போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. 

ஜாகிர் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். பின் போலார்டு ஓவரில் 2 சூப்பர் சிக்சர் விளாசிய இவர், ஐ.பி.எல்., அரங்கில் 9வது அரைசதம் அடித்தார். 24 பந்துகளில் 50 ரன்களை எடுத்த இவர், ஐ.பி.எல்.,  இறுதி போட்டியில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
Chennai though had to spend some anxious moments towards the close
 of Mumbai run chase with Kieron Pollard threatening to almost 
single-handedly win the match before he was out in the penultimate over 
for a 10-ball 27. Photo: K.R. Deepak
  இறுதியில் சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களை  பெற்றது . 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்து ஆடிய மும்பை அணி  அஸ்வின் வீசிய முதல் ஓவரில் யாரும்  ஓட்டம்  எடுக்கவில்லை. இரண்டாவது ஓவரில் தவாண் ஓட்டம்  ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.
 Sachin Tendulkar, the top run-getter in the IPL-III was honoured 
with the orange cap. Photo: K.R. Deepak
பின்னர் டெண்டுல்கரும், அபிஷேக் நய்யாரும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் ஜோடி சேர்ந்து 67 ஓட்டங்களை  எடுத்தனர். நய்யார் 27 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே ஒரு ஓட்டம்  எடுத்திருந்த ஹர்பஜன் அவுட்டானார். 
 Mumbai Indians celebrating the fall of Hayden during the IPL final
 against Chennai Super Kings. Photo: K.R. Deepak
பின்னர் சச்சினும் ராயுடுவும் ஜோடி சேர்ந்து 26 ஓட்டங்களை  சேர்த்தனர். ஜகதி வீசிய பந்தை சச்சின் தூக்கியடிக்க பந்து விஜய் கையில் சிக்கியது. இதனால் 48 ஓட்டங்கள்  எடுத்திருந்த சச்சின் அவுட்டானார். இதன் பிறகே ஆட்டத்தின் போக்கு மாறியது. அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே அடுத்தடுத்து அவுட்டாயினர். பொல்லார்டு 10 பந்துகளில் 27  ஓட்டங்களை  எடுத்தார். சென்னை தரப்பில் ஜகதி 2 விக்கெட்டுகள் எடுத்தார். போலிங்கர், மோர்கெல், ரெய்னா, முரளிதரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
http://www.pics4news.com/Event_Gallery/2010-03-23/IPL_2010_Match_between_RCB_and_Chennai_Super_Kings/Medium_Images/IPL_2010_Match_between_RCB_and_Chennai_Super_Kings_27968_medium.jpg
இறுதியில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை  எடுத்து தோல்வியைத் தழுவியது.  22   ஓட்டங்கள்   வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று சென்னை அணி கிண்ணத்தை வென்றது . பந்து வீச்சு , துடுப்பாட்டம் , களத்தடுப்பு  என அனைத்திலும் கலக்கிய சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
Suresh Raina celebrates the wicket of Harbhajan Singh. Photo: K.R.
 Deepak
சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ. 6 கோடி பரிசாக கிடைத்தது. 2வது இடத்தைப் பிடித்த முமபைக்கு ரூ. 3 கோடி பரிசு கிடைத்தது.  ஐ.பி.எல் இறுதிப் போட்டி ஒன்றில் அதிகபட்ச ஸ்கோரைக் குவித்த அணி என்ற பெருமை சென்னைக்குக் கிடைத்தது. சுரேஷ் ரெய்னா எடுத்த 57  ஓட்டங்கள் தான் ஒரு ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் ஒரு தனி வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும்.
Bollywood actor Shahid Kapoor performing during the closing 
ceremony of the IPL 2010. Photo: K.R. Deepak

போட்டி தொடங்குவதற்கு முன்பு நிறைவு விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தான் இசையமைத்து பாடிய லகான் படத்திலிருந்து சலோ சலோ, வந்தே மாதரம் மற்றும் ஜெய் ஹோ ஆகிய பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

Laser lights crisscrossed the packed stadium with sounds of “Jai 
Ho” reverberating in the air as music maestro A.R. Rahman had the 
audience tapping its feet. Photo: K.R. Deepak

பாலிவுட்டைச் சேர்ந்த பிபாஷ பாசு, ஷாஹித் கபூர் ஆகியோர் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினர். அப்போது அரங்கில் சுமார் 55 ஆயிரம் பேர் குழுமியிருந்தனர். நிகழ்ச்சியில் ஐ.பி.எல் ஆணையர் லலித் மோடி பங்கேற்றார்.
Dancers performing during the closing ceremony of the IPL. Photo: 
K.R. Deepak
  ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டத்துடன் ஐ.பி.எல் கிரிக்கட் தொடர் இனிதே நிறைவு பெற்றது .  சென்னை அணிக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள் .

13 comments:

S Maharajan said...

சென்னை அணிக்கு எனது வாழ்த்துக்கள்

ஸ்ரீ.... said...

சச்சின் இன்னும் கொஞ்ச நேரம் களத்தில் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும். சென்னைக்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

Anonymous said...

super....................
kalakkireenka

mano

Madumitha said...

சென்னை ஜெயித்ததில்
சந்தோஷம். ஆனா சச்சின்
தோற்றதில் வருத்தம்.

'பரிவை' சே.குமார் said...

சென்னை ஜெயித்ததில்
சந்தோஷம்.

Pavi said...

ம்ம்ம் நன்றி மகாராஜன்

Pavi said...

நன்றி ஸ்ரீ

Pavi said...

நன்றி மனோ

Pavi said...

நன்றி மதுமிதா

Pavi said...

நன்றி குமார்

Ragavachari B said...

சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஆட்டம் நல்லா இருந்தது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணைத்து விக்கெட்டுகளையும் இழக்கவில்லை. தங்கள் பதிவும் சூப்பர்.

Pavi said...

நன்றி பரதன்

Unknown said...

சென்னை பேட்டிங்கின் நிதானத்தை மாற்றிய தோனியின் ஒற்றைக் கை சிக்ஸர் பற்றியோ போலார்டை சமயோசிதமாக மிட்-ஆஃபில் அன் - ஆர்த்தடாக்ஸாக ஹெய்டனை நிறுத்தி வீழ்த்திய தோனியின் கேபடன்சி பற்றியோ ஓரிரு வார்த்தைகள் சொல்லியிருக்கலாம்.. :))