ஏன் இந்த வாழ்க்கை
என்ன வாழ்க்கை
என்று வெறுப்பாக
இருக்கிறது - ஏனெனில்
பணக்காரர் இன்னும்
சொத்துகளை சேர்க்கிறார்கள்
வறியவர்களோ இன்னும்
அதள பாதாளம்
செல்கிறார்கள் ஏன்
இந்த நிலைமை ?
ஒரு வேளை சாப்பிட
உணவின்றி , உறைவிடம் இன்றி
தவிக்கிறார்கள் குளிரிலும்
வெயிலிலும் காய்கிறார்கள்
குப்பை மேடுகளிலும் , கூடாரங்களிலும்
வாழ்ந்து வாழ்வை நடத்துகிறார்கள்
என்ன கொடுமையப்பா ?
என எண்ண தோன்றுகிறது
உதவும் மனம் படைத்தவர்கள்
உதவுகிறார்கள் இல்லை
மனிதர்கள் எல்லோரும்
தத்தம் சுயநலம் கருதி
வாழ்கிறார்கள் - கல்
நெஞ்சம் படைத்தவர்களாக
மாறி விட்டார்கள்
எல்லோரும் உணர்ந்து
சேவை செய்யும் மனப்பாங்கு
வர வேண்டும் - எல்லோருக்கும்
உதவி செய்ய வேண்டும்
எல்லோரும் சந்தோசமாக வாழ
வேண்டும் - இருக்கும் போது
மற்றவர்களுக்கும் கொடுத்து
உதவ வேண்டும்
நெஞ்சம் பொறுக்குதில்லை சாமி ..........
3 comments:
சிறுமை கண்டு பொங்குகிறீர்கள்!! உங்கள் உணர்வுகள் புரிகின்றது!!
நன்றி தேவன்
எல்லோருக்கும் இந்த உணர்விருந்தால் இந்த உலமே சொர்க்கமாக மாறிவிடும். ஆனால் பணமில்லாமலிருக்கும்போது இருக்கும் உதவும் மனப்பான்மை பணம் சேரும்போது மறைந்துவிடுவதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.இந்த நேரத்தில் சந்திரபாபுவின் பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. மனமிருக்கும் மனிதனிடம் பணமிருப்பதில்லை. பணமிருக்கும் மனிதனிடம் மனமிருப்பதில்லை.
மா.மணி
(வயது 64)
Post a Comment