வாங்கோ வந்து உட்காருங்கள் , தேநீர் குடியுங்கள் , ஜூஸ் குடியுங்கள் என்று கேட்க வேண்டும் . அதுதான் மனித பண்பு . இந்த பழக்கம் எல்லோரிடத்திலும் இருப்பதில்லை . நான் சொல்வது உங்களுக்கு தெரிந்த நபர்களை மாத்திரம் தான் இப்படி கூப்பிட சொல்கிறேன் . வீட்டுக்கு இப்போதெல்லாம் தெரியாத நபர்கள் எல்லாம் கதவை தட்டுவார்கள் . அவர்களை உள்ளே விடாதீர்கள் . அவர்கள் திருட்டு ஆசாமிகள் .
பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு தமது சொந்தக்காரர் , நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை உபசரிக்க வேண்டும் , வரவேற்க வேண்டும் என தமது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் . இப்போதைய பிள்ளைகள் வீட்டில் கதிரையை போட்டு உட்காந்து கொண்டு இருக்கிறார்கள் . வீட்டுக்குள் உறவினர் வருவதே தெரியாமல் படம், நாடகங்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .. இதுதான் தற்போதைய நடப்பாக உள்ளது .
சில வீடுகளில் நல்ல பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள் . அது எல்லாம் ஒவ்வொரு பெற்றோரின் வளர்ப்பு முறைகளில் தான் தங்கி உள்ளது . நமது பண்பாடை கட்டி காக்கும் பொறுப்பு இளைய தலை முறையினரின் கையில் தான் உள்ளது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் .
4 comments:
உண்மைங்க! நம்ம வீட்டுக்கு தேடி வந்தவங்களை நல்லா உபசரிக்க நம்ம குழந்தைகளை விட்டே coffee, cool drink கொடுக்க சொன்னால் அவர்களுக்கும் அந்த பழக்கம் வரும்!
வரவேற்க வேண்டிய விசயம்தான்
ம்ம்ம்ம்ம்ம் . இப்படித்தான் எல்லோரும் இருக்கணும்
நன்றி
நன்றி கார்த்திக்
Post a Comment