உலகக்கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் இறுதி போட்டியை எட்டி விட்ட நிலையில் இறுதி போட்டிக்கு ஸ்பெயின் அணியும் , நெதர்லாந்து அணியும் தகுதி பெற்று உள்ளன . இரு அணிகளும் ஒரு முறையும் உலக கிண்ணத்தை வென்றதில்லை . களத்தில் இறங்கி இருக்கின்றன . யார் வெல்வது , கிண்ணத்தை கைப்பற்றுவது என்று ?
எனது யூகம் , நான் வெற்றி பெரும் என்று நினைக்கும் அணி ஸ்பெயின் அணி தான் . வலுவான தற்காப்பு ஆட்டம், ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டம் போன்றவற்றால் மற்றைய அணிகளை விட முன்னேற்றத்தில் இருக்கும் அணி என்றால் அது ஸ்பெயின் அணிதான் . இதுதான் ஸ்பெயின் அணியின் பலம் என்று நான் கருதுகிறேன் .
நெதர்லாந்து அணியையும் குறைத்து மதிப்பிடுவதட்க்கில்லை . அதுவும் சிறந்த அணியாக தான் உள்ளது . வீரர்கள் அனைவரும் ஒருமித்து குழுவாக செயற்படுதல் , விறுவிறுப்பாக ஆடுதல் என நெதர்லாந்து அணியும் பலம் வாய்ந்த அணிதான் . பல திறமையான வீரர்களும் இருக்கிறார்கள் .
ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், ஒரேயொரு கோல் அடித்து ஸ்பெயின் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரேயொரு கோல்தான் என்பதால் அது ஒன்றும் பெரிய வெற்றியில்லை என்று கூறிவிட முடியாது. உண்மையில், இந்த வெற்றி ஸ்பெயினின் பிரத்யேகத் திறமைக்கும் திட்டமிடலுக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்ஜென்டினாவை 4 கோல் அடித்து வெற்றி பெற்ற அணியா இது என்று ஜெர்மனியைப் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த நாட்டு வீரர்களை முடக்கிப் போட்டது, ஸ்பெயின் வீரர்களின் ஆட்டம்.
சேவி, இனியெஸ்டா, பெட்ரோ ரொட்ரிகோ, அலோன்சோ போன்ற திறமையான வீரர்கள் ஸ்பெயின் அணியில் உள்ளனர் . பந்தை இலாபகரமாக நகர்த்தி எதிரணி வீரர்களிடம் இருந்து பந்தை மீட்பதில் வல்லவர்கள் . ஆர்ஜெண்டீனாவுடன் விளையாடி 4 கோல்கள் போட்ட ஜேர்மன் அணியையே ஒரு கோல் கூட போடவிடாமல் தடுப்பது என்றால் அவ்வளவு சுலபமான காரியமில்லை . ஸ்பெயின் அணி வீரர்களின் திறமையும் , அணி வீரர்களின் ஒருமித்த ஆக்ரோஷ ஆட்டமும் தான் காரணம் .எனது யூகம் , நான் வெற்றி பெரும் என்று நினைக்கும் அணி ஸ்பெயின் அணி தான் . வலுவான தற்காப்பு ஆட்டம், ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டம் போன்றவற்றால் மற்றைய அணிகளை விட முன்னேற்றத்தில் இருக்கும் அணி என்றால் அது ஸ்பெயின் அணிதான் . இதுதான் ஸ்பெயின் அணியின் பலம் என்று நான் கருதுகிறேன் .
நெதர்லாந்து அணியையும் குறைத்து மதிப்பிடுவதட்க்கில்லை . அதுவும் சிறந்த அணியாக தான் உள்ளது . வீரர்கள் அனைவரும் ஒருமித்து குழுவாக செயற்படுதல் , விறுவிறுப்பாக ஆடுதல் என நெதர்லாந்து அணியும் பலம் வாய்ந்த அணிதான் . பல திறமையான வீரர்களும் இருக்கிறார்கள் .
ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், ஒரேயொரு கோல் அடித்து ஸ்பெயின் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரேயொரு கோல்தான் என்பதால் அது ஒன்றும் பெரிய வெற்றியில்லை என்று கூறிவிட முடியாது. உண்மையில், இந்த வெற்றி ஸ்பெயினின் பிரத்யேகத் திறமைக்கும் திட்டமிடலுக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்ஜென்டினாவை 4 கோல் அடித்து வெற்றி பெற்ற அணியா இது என்று ஜெர்மனியைப் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த நாட்டு வீரர்களை முடக்கிப் போட்டது, ஸ்பெயின் வீரர்களின் ஆட்டம்.
உலக கிண்ணத்தை கைப்பற்றும் அணி ஸ்பெயின் தான் என்பது எனது கருத்து . சரி பொறுத்திருந்து பாப்போம் . அன்றைய போட்டியில் வீரர்களின் ஆட்ட திறன் , அதிஸ்டம் , வீரர்களின் செயல்கள் போன்றவற்றிலும் வெற்றி தங்கி உள்ளது . பொறுத்திருந்து பாப்போம் ..................
2 comments:
my vote is nedarland
siva
ம்ம்ம் நன்றி சிவா
Post a Comment