Monday, January 23, 2012

எல்லோரினதும் ஆசைகள் நிறைவேறுகின்றதா ?


http://basicindia.typepad.com/.a/6a00d8341bfed353ef0147e300ec3a970b-320wi
நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கின்றன . சிலரது ஆசைகள் நிறைவேறுகிறது . சிலரது ஆசைகள் நிறைவேறாமல் போகிறது . இந்த உலகில் ஆசைகள் இல்லாத மனிதரே இல்லை .

ஒன்றில் வீடு , காணி, பணம் , நகை , சொத்து என ஆசைகள் நீண்டு கொண்டு செல்கின்றன . ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான ஆசைகள் இருக்கும் . கூடுதலாக பணம் , சொத்து , நகை போன்றவற்றில் பெண்களுக்கு நாட்டம் இருக்கும் . 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiq6c66hex-66OG4y9fHXdHZuvsCPVdIhsp9CLzJP1o-5Q3iwV-ZPMJThv9hOKL47yZ16s1FH7GKH4TzQCta-w2Y1RE7JtTaQW7FZWt0dPfiNeISI3BM6ZJu1qI-b3K9s2Ou3_nmbBpR3o/s1600/67.jpg
நான் டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் . அது நிறைவேறியதா ? சிலருக்கு அந்த ஆசை நிறைவேறுகிறது . கடுமையாக படித்து , கஷ்டப்பட்டு தமது கனவை நனவாக்குகிறார்கள் . சிலர் இது நடக்காது என்று தெரிந்தும் அவற்றுக்கு ஆசைப்படுவார்கள் . ஏழ்மையில் படித்து , கஷ்டப்படுபவன் நல்ல நிலையை அடைகிறான் . 

நகை, பணம், சொத்து என ஆசை பேராசையாக மாறுகிறது . இதனால் , அவன் இந்த சொத்துக்களை அனுபவிக்காமலே மரணித்து விடுகிறான் . இவன் திருடிக் கொண்டு போவானோ , அவன் திருடிக் கொண்டு போவானோ என தினம் தினம் நிம்மதி இல்லாமல் செத்து பிழைக்கிறான் . ஆனால், தனக்கு தேவையானதை , தன சம்பாத்தியத்தில் உழைத்து முன்னேறுபவன் சந்தோசமாக வாழ்க்கையை களிக்கிறான் .

நமக்கு ஆசைகள் இருக்க வேண்டும் . அதுவே பேராசையாக இருக்க கூடாது . சிலர் தமது பிள்ளைகளை கல்யாணம் செய்து பேரப்பிள்ளையை நான் இருப்பதற்க்கு முன்பு காண வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் . அது சிலருக்கு அந்த ஆசை நிறைவேறுகிறது . சிலர் அந்த ஆசை நிறைவேருவதட்க்கு முன்பு மரணம் அடைந்து விடுகிறார்கள் . நமது சமூகத்தில் நடக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று .
http://jlatun.files.wordpress.com/2011/01/silence.jpg
ஆசை நூறுவகை . ஒன்று இரண்டு அல்ல . ஆசைப்பட வேண்டும் . அந்த ஆசை நிறைவேறக்கூடியதாக இருக்கவும் வேண்டும் . 

1 comment:

Athisaya said...

ஆசை நூறுவகை . ஒன்று இரண்டு அல்ல . ஆசைப்பட வேண்டும் . அந்த ஆசை நிறைவேறக்கூடியதாக இருக்கவும் வேண்டும் .