Wednesday, July 7, 2010

இந்திய அணியின் நட்ச்சத்திரம் தோனி

http://cache.daylife.com/imageserve/01F73uB7NMesf/340x.jpg
இந்திய அணியின் கப்டனும் , சிறந்த துடுப்பாட்ட வீரர் மகேந்திரசிங் தோனி இன்று தனது 29 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார் . அவருக்கு ரசிகர்கள் சார்பாக நானும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி அவரின் சிறுவயதுப் பள்ளித் தோழியான சாக்ஷியை மணம் முடித்தார்..  இன்று தோனி திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும், பிறந்த நாளையும் சேர்த்து மிக விமர்சியாக கொண்டாடுகிறார். இந்த இரு கொண்டாட்டத்தின் காரணமாக மும்பை நகரமே களைகட்டுகிறது. இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் தோனிக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
http://worldinspiration.files.wordpress.com/2009/03/12_dhoni_fans_2304_430xx.jpg
  இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் மகேந்திர சிங் தோனி, தனது பள்ளித் தோழியான சக்ஷி சிங் ரவாத் என்பவரை இன்று  திருமணம் செய்துகொண்டார். டேராடூன் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது.
http://livinggallery.oneindia.in/d/30800-2/m-s-dhoni.jpg
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஷமிலி என்ற இடத்தில் உள்ள டிஏவி பள்ளியில் தோனி படித்தார். அதே பள்ளியில் சிறு வயது முதல் அவருடன் ஒரே வகுப்பில் படித்து வந்த சாக்சிசிங் ராவத், தோனிக்கு மிகவும் நெருக்கமான நண்பரானார். இருவரின் தந்தையரும் அவுரங்காபாதில் மெக்கான் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, ஒரேசமயத்தில் ராஞ்சிக்கு குடிபெயர்ந்தனர். சாக்சியின் தந்தை ஓய்வுக்குப் பிறகு டேராடூனுக்கு சென்றுவிட்டார். தோனி குடும்பத்தார் ராஞ்சியில் தங்கிவிட்டனர்.
http://images.indiainfo.com/web2images/sports.indiainfo.com/2009/06/23/images/dhoni_03.jpg
 இன்று  7ஆம் திகதி  மும்பையில் திருமண வரவேற்பு நடைபெறவிருக்கிறது.   இதற்கு முக்கிய பிரமுகர்கள் அனைவரும் வரவிருக்கிறார்கள்.

புதுமாப்பிள்ளை தோனிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. பாடகி ஆஷா போன்ஸ்லே, நடிகைகள் ஷில்பாஷெட்டி, பிபாசா பாசு, கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் உள்ளிட்டோ ர் `டிவிட்டர்` இணையதளத்தில் தோனி-சாக்ஷி தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர், ஷேவாக் உள்ளிட்டோ ர் தோனியின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. 
 http://media1.santabanta.com/full1/Cricket/Mahendra%20Singh%20Dhoni/mahendra-singh-dhoni-25a.jpg தோனியின் ரசிகர்கள் நேற்று ராஞ்சியில் தோனியின் திருமணத்தைக் கொண்டாடினர். வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.





4 comments:

'பரிவை' சே.குமார் said...

புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்த்துக்களுடன் எங்கள் வாழ்த்தும் கலக்கட்டும்.

Karthick Chidambaram said...

புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி கார்த்திக்