Wednesday, July 7, 2010

நெதர்லாந்து அணி அசத்தல் வெற்றி

 
The Dutch rush into the World Cup finals
உலகக்கிண்ண கால்ப்பந்தாட்டம் சூடி பிடித்து கொண்டு இருக்கிறது . பரபரப்பான போட்டிகள் . எல்லோரும் ஆவலாய் எந்த அணி கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம் . தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலககிண்ண  கால்பந்து தொடரின் இறுதி போட்டிக்கு  முன்னேறி அசத்தியது நெதர்லாந்து அணி. நேற்று நடந்த அரையிறுதியில் உருகுவே அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

 

அரையிறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கின முதல் அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் உருகுவே அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. காலிறுதிப் போட்டிகளில் பிரேசிலை வெற்றிகொண்ட உற்சாகத்தில் களமிறங்கிய நெதர்லாந்து  அணியும், அதிஷ்டம் காரணமாக கானாவை வீழ்த்திய உருகுவே அணியும் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதின.

Arjen Robben, Khalid Boulahrouz and Dirk Kuyt of the Netherlands 
celebrate


 ஆட்டத்தின் தொடக்கம்  முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாகப் போராடின. ஆட்டத்தின் 18 வது நிமிடத்தில் நெதர்லாந்து  அணித்தலைவர் புரோன்கார்ஸ்ட் 90 அடி தூரத்திலிருந்து மின்னல் வேகத்தில் சூப்பர் கோலடித்து அசத்தினார். சற்றும் எதிர்பாராத உருகுவே கோல் கீப்பர் மஸ்லரா அதிர்ச்சி அடைந்தார். 

ஆட்டத்தின் 28 வது நிமிடத்தில் பந்தை "கிக்' செய்ய முற்பட்ட உருகுவே வீரர், கேசரஸ், நெதர்லாந்து வீரர் டி ஜீவின் முகத்தை பதம் பார்த்தார். இதனையடுத்து இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர். . ஆட்டத்தின் 41 வது நிமிடத்தில், நெதர்லாந்தின் தடைகளை தாண்டி, "பீல்டு' கோலடித்து அசத்தினார் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் போர்லான். இதனையடுத்து முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. 

 இரண்டாவது பாதியிலும் நெதர்லாந்து மிரட்டியது. ஆட்டத்தின் 70 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஸ்னைஜ்டர், கோலடித்தார். இதனையடுத்து 73 வது நிமிடத்தில் தலையால் முட்டி ராபன் ஒரு கோலடிக்க, நெதர்லாந்து அணி, வெற்றியை நோக்கி முன்னேறியது. கூடுதல் நேரத்தில் உருகுவே வீரர் பெரைரா ஒரு கோலடிக்க (92 வது நிமிடம்), கடைசி கட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று  இறுதி போட்டிக்கு  முன்னேறியது .

உலகக்கிண்ண  அரங்கில் 32 ஆண்டுகளுக்குப் பின் இறுதி போட்டிக்கு  முன்னேறி அசத்தியுள்ளது நெதர்லாந்து அணி. இதற்கு முன் கடந்த 1978 ம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த உலககிண்ண  தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தது நெதர்லாந்து. 

இறுதி போட்டியில் நெதர்லாந்து அணியுடன் மோதும் மற்றைய அணி எது என்று இன்றைய போட்டியின் முடிவில் தங்கியுள்ளது . ஜேர்மன் அணியா ஸ்பெயின் அணியா என்று . இன்றும் போட்டிகள் விறுவிறுப்பாகத்தான் இருக்கும் . வெற்றி பெரும் அணி இறுதி போட்டியில் நெதர்லாந்து அணியுடன் விளையாடும் . பொறுத்திருந்து பார்ப்போமே . என்ன நடக்கிறது ? எந்த அணி கிண்ணத்தை வெல்ல காத்து இருக்கிறது என்று ............



1 comment:

Anonymous said...

pooddikal viru viruppaaka irunthana.

mano