இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் மகேந்திர சிங் தோனி, தனது பள்ளித் தோழியான சக்ஷி சிங் ரவாத் என்பவரை இன்று திருமணம் செய்துகொண்டார். டேராடூன் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஷமிலி என்ற இடத்தில் உள்ள டிஏவி பள்ளியில் தோனி படித்தார். அதே பள்ளியில் சிறு வயது முதல் அவருடன் ஒரே வகுப்பில் படித்து வந்த சாக்சிசிங் ராவத், தோனிக்கு மிகவும் நெருக்கமான நண்பரானார். இருவரின் தந்தையரும் அவுரங்காபாதில் மெக்கான் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, ஒரேசமயத்தில் ராஞ்சிக்கு குடிபெயர்ந்தனர். சாக்சியின் தந்தை ஓய்வுக்குப் பிறகு டேராடூனுக்கு சென்றுவிட்டார். தோனி குடும்பத்தார் ராஞ்சியில் தங்கிவிட்டனர்.
இன்று 7ஆம் திகதி மும்பையில் திருமண வரவேற்பு நடைபெறவிருக்கிறது. இதற்கு முக்கிய பிரமுகர்கள் அனைவரும் வரவிருக்கிறார்கள்.
புதுமாப்பிள்ளை தோனிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. பாடகி ஆஷா போன்ஸ்லே, நடிகைகள் ஷில்பாஷெட்டி, பிபாசா பாசு, கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் உள்ளிட்டோ ர் `டிவிட்டர்` இணையதளத்தில் தோனி-சாக்ஷி தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர், ஷேவாக் உள்ளிட்டோ ர் தோனியின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
தோனியின் ரசிகர்கள் நேற்று ராஞ்சியில் தோனியின் திருமணத்தைக் கொண்டாடினர். வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
4 comments:
புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்த்துக்களுடன் எங்கள் வாழ்த்தும் கலக்கட்டும்.
புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி குமார்
நன்றி கார்த்திக்
Post a Comment