குழந்தைகளுடன்
ஒன்றாக சிரித்து
விளையாட ஆசை
என் நண்பிகளுடன்
அரட்டை அடிக்க
ஆசை
வீட்டு முற்றத்து
நிழலில் உட்கார்ந்து
கதை புத்தகம்
வாசிக்க ஆசை
நிலவின் ஒளியில்
மணலில் இருந்து
கவிதை எழுத ஆசை
தூக்கத்தில் கனவு
காண ஆசை
இவை எல்லாம்
எனக்கு நிறைவேறிய
ஆசைகள் அதுதான்
ஆசை ஆசையாய் .
2 comments:
ஆசைகள் அருமை.
ம்ம்ம்ம் நன்றி குமார் .
Post a Comment