Wednesday, August 4, 2010

ஜாக்கிரதை

 http://www.students.sgul.ac.uk/images/Thief.jpeg

இப்போது எல்லாம் வீதிகளில் நகை அணிந்து செல்லவே பயமாக இருக்கிறது . மோசடிகள் , திருட்டு சம்பவங்கள் அதிகரித்து விட்டன . இது எந்த பிரதேசம், எந்த நாடு என்றில்லாமல் வறிய, கஷ்டப்பட்ட இடங்களில் எல்லாம் இந்த திருட்டு சம்பவங்கள் சர்வ சாதரணமாக நடைபெறுகின்றது .

அதனால் தான் சில பெண்கள் கவரின் நகைகளை அணிந்து செல்கிறார்கள் . திருடர்கள் அந்த நகைகளை திருடி கொண்டு போய் நகைக்கடைகளில் விற்க சென்றால் தான் அவர்களுக்கு தெரியும் தாங்கள் திருடியது கவரின் நகைகளை என்று . இது உண்மையாக நடந்த சம்பவம் ஒன்று . இது போல் எத்தனை சம்பவங்கள் தினம் தினம் நடக்கின்றன . நடந்து கொண்டு இருக்கின்றன .

இவற்றுக்கு எல்லாம் பல காரணங்கள் உண்டு . அதிகரித்து விட்ட விலைவாசிகள் , அதிகரித்து விட்ட வேலை இல்லா பிரச்சனை , வாட்டும் வறுமை ,  சனத்தொகை பெருக்கம் இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம் .
http://images1.wikia.nocookie.net/thief/images/4/43/Garrettsketchthief4concya0.jpg
தற்காலத்தில் பொருட்களின் விலைகள் எல்லாம் ஏறி விட்டன . மூன்று வேளையும் வடிவாக சாப்பிட இயலாது எல்லா மக்களுக்கும் . சனத்தொகை அதிகரித்து விட்டதனால் எல்லோருக்கும் வேலை கிடைப்பதே கஷ்டம் . படித்து பட்டம் பெற்றவர்களுக்கே வேலை இல்லை எனும் போது சாதாரண நபருக்கு என்ன வேலை கிடைக்கும் ? கூலி வேலையும் ஒவ்வொரு நாளும் கிடைப்பதில்லை . வறுமையால் எத்தனை நாட்களுக்கு வாடுவது ?
http://www.penn-olson.com/wp-content/uploads/2009/12/thief.jpg
இப்படி எல்லாம் யோசித்து விட்டுதான் ஒருவரின் மனதில் களவு எடுத்தால் என்ன ? திருடினால் என்ன ? என மனம் யோசிக்க வைக்கிறது . ஒரு நாள் திருடி அதில் ருசி கண்டவன் பல நாட்களுக்கும் திருட அவனுக்கு தென்பு வந்து விடுக்கிறது . அதன் பின் நடக்கும் , நடக்க இருக்கும் விபரீதங்களை அவன் யோசிப்பதில்லை .

ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளிலும் , தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளி வருகின்றன . திருடர்களின் வழிப்பறியில் பணப்பை மாயம் , காப்பு அணிந்த பெண்ணின் காப்பை அபகரிப்பதட்க்கு அவரின் கையை வெட்டிய திருடர்கள் , இரவு வேளையில் வீட்டில் துணிகர திருட்டு . இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் .

இப்படி நடந்து பொலிசாரினால் பிடிபட்டு இருக்கும் திருட்டு கும்பல்கள் சிறைவாசம் அனுபவிப்பவர்களும் உண்டு . அதில் திருந்தி வாழ்பவர்களும் உண்டு , திருந்தாத பேர்வழிகளும் உண்டு . திருடாவிட்டால் நாம் வாழ முடியாதா ?

முடியும் . உங்களுக்கு என்று சிறு தொழிலை ஆரம்பியுங்கள் .பாய்க்குகள் ஒட்டுதல் , காகித உறை செய்தல் , கிடுகு பின்னுதல் , பாய் இளைத்தல் , துணிகளை சுத்தம் செய்தல் , முடி வெட்டுதல் , துணிகளை அயன் பண்ணுதல் , ஆடைகள் தைத்து கொடுத்தல் , வீட்டு வேலைகள் செய்து கொடுத்தல் , இப்படி பல வேலைகள் உண்டு . இப்படி சின்ன சின்ன வேளைகளில் ஈடுபட்டு தான் பின்பு பெரிய முதலாளி ஆவது . சற்று சிந்தியுங்கள் . சிறு தொகை பணம் கொஞ்ச  நாளைக்கு வரும். படிப்படியாக பின்பு உயர்வடையும் . சிறு துளிகள் தான் பின்பு பெரு வெள்ளம் ஆவது . அது போலத்தான் .

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது இது தான் உண்மை . நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் திருடன் திருடி விட்டு போகும் சந்தர்ப்பங்கள் தான் நடக்கின்றன . ம்ம்ம்ம் .


3 comments:

Anonymous said...

thirudarkal thaan ippo romba sampaathikkiraanka......



mano

Anonymous said...

thirudarkal thaan ippo romba sampaathikkiraanka......



mano

Pavi said...

நன்றி மனோ