நாம் எல்லோரும் சுத்தமாக இருக்க வேண்டும் . அப்படி இருந்தால் தான் நோய்களில், கிருமி தொற்றுக்களில் இருந்து விடுபட்டு பாதுகாப்பாக அதாவது சுகமாக இருக்க முடியும் . காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம். இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் தடுக்க கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமானது.
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை எல்லோரும் சுத்தமாக இருக்க பழகி கொள்ள வேண்டும் . சிறு வயதில் பழகும் பழக்கம் தான் கடைசி வரைக்கும் நிலைக்கும். எனவே சிறியோர்களுக்கு நீங்கள் பழக்கும் பழக்கம் தான் அவனுக்கு எதிர்காலம் மட்டும் உதவும் .
உடல் கோளாறுகளை அண்ட விடாமல் இருக்க, கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிக, மிக அவசியம்.
தண்ணீரில் கைகளை கழுவி, சோப்பு போட்டு சுத்தம் செய் தால் தான் இடுக்குகளில் உள்ள கிருமிகள் நீங்கும். கைகளும் சுத்தமாகும். குறிப்பாக, ஆன்டி பாக்டீரியல் லோஷன்களை விட, சோப்பு போட்டு கழுவுவதுதான் மிக வும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாம் வெளியில் எங்கேனும் போய் களைத்து வந்ததும் பசிக்குது என்று சோற்றுக்குள் கைவைத்து சாப்பிட வெளிக்கிடுகின்றோம் . அது மிகவும் தவறு . கைகள், முகம், கால்களை கழுவி துடைத்து விட்டு தான் உணவு உன்ன வெளிக்கிட வேண்டும் . தொற்று கிருமிகள் எங்கே இருந்தாலும் தொற்றுவது இப்படியான சூழலில் தான் .
நீங்கள் இருக்கும் சூழலையும் , வீட்டையும் , குடிக்கும் நீரையும் , நீங்கள் உடுக்கும் உடைகளையும் சுத்தமான உடைகளை அணியுங்கள் . அதோடு வெளியில் சென்று வந்தால் முகம், கை, கால்களையும் கழுவி சுத்தமாக இருங்கள் .
உலக அரங்கில் சுகாதாரத்தை முன்னிறுத்தி சொல்லப்படும் விஷயங்களில் கை கழுவும் முறைதான் முதன்மையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் திகதி உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது. இதிலிருந்து தெரிகிறது அல்லவா கைகழுவுவது எவ்வளவு சால சிறந்தது என்று நமக்கு .
குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும். · கைகளை அவசர அவசரமாக 2-3 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அழுக்குகள் போகும் . கிருமிகள் சாகும் .
குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும், கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன. இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே அழிக்க முடியும்.பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே ஆகும் . இதனை பெற்றோர் அவதானித்து பாடசாலை விட்டு வந்ததும் பிள்ளையை குளிப்பாட்டி சுத்தம் செய்து விட்டு உணவு சாப்பிட கொடுக்க வேண்டும் .
எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது. வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவுதல் நல்லது. · அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது. · கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.சுத்தமான வாழ்க்கையில் தான் எமது ஆரோக்கியமும் தங்கி உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் .
10 comments:
மிகவும் பயனுள்ள தகவல் பகிர்வு..!
ஒவ்வொரு குழந்தைக்கும்
போய்ச்சேர வேண்டிய செய்தி
இது பவி.
மிகவம் பிரயோசனமான தகவல்கள்.. நன்றி சகோதரி..
nalla thakaval........
ellorum vaasikka vendum intha pathivai.
mano
நன்றி பிரவின்குமார்
நன்றி கார்த்திக்
நன்றி குமார்
உண்மைதான் . எல்லோரும் வாசித்து பயன் பெறுங்கள்
நன்றி கிருஷ்ணன்
எல்லோருக்கும் பயன்பட வேண்டும் எனது தகவல்கள் என்பதே எனது நோக்கம் .
நன்றி சுதா
நன்றி மனோ
Post a Comment