Thursday, October 7, 2010

எப்போதுமே எமக்கு ஆறுதல் சொல்லும் பாடல்


எல்லோருக்கும் துன்பமும், இன்பமும் வந்து போவதுண்டு . துன்பம் வரும் போது சோர்வதும் , இன்பம் வரும் போது குதூகலிப்பதும் தானே மனித இயல்பு . எப்போதுமே எம் மனம் சோர்வடையும் போது சில பாடல்களை கேட்டால் எமக்கு ஏதோ ஒரு புது தென்பு வந்தது போல் இருக்கும் . அப்படியான பாடல்களில் ஒன்று தான் இந்த பாட்டும் .மனதை வருடிய பாடல் .
சிறப்பான வரிகள் , சிறந்த இசையமைப்பு , சிறப்பாக இந்த பாடலை பாடி உள்ளனர் சரணும் , கல்பனாவும் . மாயாவி படத்தின் பாடலில் இதுவும் ஒரு பாடல் . 

எது  வரை  வாழ்க்கை  அழைக்கிறதோ
அது  வரை  நாமும்  சென்றிடுவோம்
விடைபெறும்  நேரம்  வரும்  போதும்
சிரிப்பினில்  நன்றி  சொல்லிடுவோம்...........சூப்பர் ...........பிடித்து இருக்கிறது . எனக்கு இந்த வரிகள் . இப்படி இந்த வரிகள் அனைத்துமே பிடித்து இருக்கிறது . 

பெண்:  கடவுள்  தந்த  அழகிய  வாழ்வு
உலகம்  முழுதும்  அவனது  வீடு
கண்கள்  மூடியே  வாழ்த்து  பாடு

கருணை  பொங்கும்  உள்ளங்கள்  உண்டு
கண்ணீர்   துடைக்கும்  கைகளும்  உண்டு
இன்னும்  வாழனும்  நூறு  ஆண்டு

எதை  நாம்  இங்கு  கொண்டுவந்தோம்
எதை  நாம்  அங்கு  கொண்டு  செல்வோம்
அழகே   பூமியின்  வாழ்கையை  அன்பில்  வாழ்ந்து  விடைபெறுவோம் 
கடவுள்  தந்த  அழகிய  வாழ்வு
உலகம்  முழுதும்  அவனது  வீடு
கண்கள்  மூடியே  வாழ்த்து  பாடு

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்……….
  எனக்கொன்றும் குறைகள் கிடையாது
  எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..உக்க்.. ஒக்க்.

ஆண்:  எது  வரை  வாழ்க்கை  அழைக்கிறதோ
அது  வரை  நாமும்  சென்றிடுவோம்
விடைபெறும்  நேரம்  வரும்  போதும்
சிரிப்பினில்  நன்றி  சொல்லிடுவோம்

பரவசம்  இந்த  பரவசம்
எந்நாளும்  நெஞ்சில்  தீராமல்  இங்கே  வாழுமே

கடவுள்  தந்த  அழகிய  வாழ்வு
உலகம்  முழுதும்  அவனது  வீடு
கண்கள்  மூடியே  வாழ்த்து  பாடு

நாம்  எல்லாம்  சுவாசித்து
தனி  தனி  காற்று  கிடையாது
மயக்கங்கள்  மயக்கங்கள்
இடங்கள்  பார்த்து  பொழியாது

ஓடையில்  இன்று  இலையுதிரும்
வசந்தங்கள்  நாளை  திரும்பி  வரும்
வசந்தங்கள்  மீண்டும்  வந்துவிட்டால்
குயில்களின்  பாட்டு காற்றில்  வரும்

முடிவதும் ..பின்பு  தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே..
…. கேளடி…… 

கடவுள்  தந்த  அழகிய  வாழ்வு
உலகம்  முழுதும்  அவனது  வீடு
கண்கள்  மூடியே  வாழ்த்து  பாடு


4 comments:

santhanakrishnan said...

மனதை உருக்குகிறது.

Anonymous said...

super song........


mano

Pavi said...

உண்மைதான் . நன்றி கிருஷ்ணன்

Pavi said...

நன்றி மனோ