காய்கறிகள் அதிகமான சத்துகளும், விட்டமின்களும் நிறைந்தவை என்பது நமக்கு எல்லோருக்கும் தெரிந்ததே . காய்கறி வகைகளில் ஒன்றான கரட் எல்லோரும் சாப்பிடுவதுண்டு. பச்சையாகவும் சாப்பிடுவர். மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் காணப்படும் . கரட்டை எல்லோரும் சாப்பிடலாம் . எந்த வகை நோயாளர்களுக்கும் உகந்தது .
இது ஒரு கிழங்கு வகையாகும் . மஞ்சள் முள்ளங்கி என்றும் கரட்டை அழைப்பர் . தென்மேற்கு ஆசியா, ஐரோப்பாவில் காணப்பட்டக் காட்டுக் கரட்டிலிருந்தே மஞ்சள் முள்ளங்கி தோன்றியது என்கிறார்கள் . கரட்டை பச்சையாகவும் உண்ணலாம் . கரட்டை சம்பல் போட்டும் உண்ணலாம் . வறை வறுத்தும் சாப்பிடலாம் . கோவாவுடன் சேர்த்து கரட்டை வெள்ளை கறியாக சமைத்தும் உண்ணலாம் .
ஒவ்வொரு நாளும் எமது உணவில் சேர்த்து கொள்ளலாம் . விட்டமின் A சத்து கரட்டில் இருக்கிறது . கரட்டை சாறாக அடித்தும் குடிக்கலாம் . சத்துள்ள பானமாகும் . கரட் நீளமான கூம்பு வடிவில் மெல்லியதாக , குண்டாக இருக்கும் . கிழங்கு போல் வேரில் பருத்து குண்டாக வளரும் . சிறிய கரட்டுகள் சத்தானவை . கரட்டில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. கரட் சாறு எல்லோருக்கும் அரு மருந்தாக காணப்படுகிறது . சிறியவர்கள் , பெரியவர்கள் என எல்லோரும் அருந்தலாம் .
கண்பார்வை குறைந்தவர்கள் , கண்பார்வை மேம்படவும் , கண் பிரச்சனைகளுக்கும் மிகவும் நல்லது கரட் . புற்று நோய்களையும் தடுக்கும் உணவுகளில் ஒன்றாகவும் கரட் பயன்படுகிறது .
6 comments:
USEFULL ONE.. NICE
மிகவும் உபயோகமான தகவல்கள். நன்றி.
உபயோகமான தகவல் நன்றி
நன்றி பிரபு
நன்றி லக்ஸ்மி அம்மா
நன்றி சரவணன்
Post a Comment