* ஒரே கதையை திருப்பி திருப்பி எடுப்பது
* ஒரே காட்சி அமைப்பு
* வேறு மொழிகளில் இருந்து மொழி மாற்றம் செய்து ஒரு மாற்றமும் இல்லாமல் வெளி இடுவது
* ஒரே அடிதடி , இரத்த களறியான படங்கள்
* நடைமுறைக்கு ஒவ்வாத சண்டைகள் , நாயகன் பறந்து பறந்து அடிப்பது போன்ற காட்சிகள்
சிகரெட் பிடிப்பதும் அதை ஸ்டைலாக பிடிப்பதும் ஹீரோயிசம் என் எண்ணுவது, பெண்களை கிண்டல் செய்தல்,கற்பழித்தல் .கொலை,கொள்ளை காட்சிகள், எளிமையை மறைத்து நடை,உடை,பாவனைகளில் பகட்டை வெளிப்படுத்தும் காட்சிகளை ரசித்தல்.திருமணம் என்றால், ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி ஆடம்பரமாக மேள தாளத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் நடத்துவதுதான் என மாயையை உருவாக்குதல்.மத ரீதியான மூடநம்பிக்கை காட்சிகள்.ஒரு ஆள் 100 பேரை அடித்தல் போன்ற இயற்கைக்கு மாறான காட்சிகள் . ஏழையான நல்லவனான கதாநாயகனை பல பெண்களோ அல்லது வசதியான வீட்டுப்பெண்ணோ காதலிப்பது இப்படி எத்தனை படங்களில் தான் பார்ப்பது இதெல்லாம் பார்த்து அலுத்து போய் விட்டது . மக்கள் எல்லோரும் புதிது புதிதாக சிந்திக்கிறார்கள் , அதுபோல் படங்களும் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் . நடிகர்கள், இயக்குனர்கள் எல்லோரும் மக்களுடன் மக்களாக இருந்து தானே உருவாகிறார்கள் .
காதலுக்கு மரியாதை படத்தில் இரு உள்ளங்களும் காதலித்து பெற்றோர் விருப்புடன் கல்யாணம் நடப்பதை பார்த்தோம் ,
பணியிடங்களில் நடக்கும் கொத்தடிமை கொடுமைகளால் தொழிலாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை 'அங்காடித்தெரு' பிரதிபலித்தது.
பெற்றோர்களின் மூடசாதிமத கௌரவத்திற்காக பலியான காதலர்களின் நிலையை 'விண்ணைத்தாண்டி வருவாயா','காதல்', பிரதிபலித்தன,
பிள்ளைகளின் உலகத்தைப் பற்றி 'பசங்க 'பிரதிபலித்தது,
எந்த சூழ்நிலையிலும் அன்பும் மனிதாபிமானமும் தேவை என்பதை 'அன்பே சிவம்' பிரதிபலித்தது. இப்படியான படங்கள் மாபெரும் வெற்றி பெறுகின்றன .
இதற்க்கு காரணம் சிறந்த கதையம்சம், நடிப்பு , சிறந்த காட்சிகள், பின்னணிகள் , எல்லோரினதும் அயராத உழைப்பு , சிறந்த பாடல்கள், இசையமைப்பு என எல்லாம் சேர்ந்து ஒன்றாக வரும் பொது வெற்றி கிடைக்கிறது . போட்ட முதலையும் விட இலாபம் எவ்வளவோ கிடைக்கிறது . ஓடாத படத்துக்கு அதிக விளம்பரம் எல்லாம் கொடுத்து என்ன பயன் . முதலில் நல்ல கதையம்சம் கொண்ட படமாக எடுங்கள் . யதார்த்தமான படங்களை எடுங்கள் . எவரும் சொல்லாத , வித்தியாசமான கதையை சொல்லுங்கள் , மக்களும் ரசனையுடன் பார்ப்பார்கள் . எல்லோரும் வந்து பார்த்து படத்தை வெற்றி படமாக மாற்றுவார்கள் .
5 comments:
நல்ல அலசல்... நல்ல படங்களும் வரத்தான் செய்கின்றன இல்லையா?
சகோ நீங்கள் சொன்ன ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள் இருந்தாலும் சுவாரசியத்தால் படத்தை வெற்றி பெற்று விட செய்து விடலாம். உதாரணம் அயன் திரைப்படம்.
ஒரு சின்ன விஷயம் அன்பே சிவம் வணிக ரீதியாக ஒரு சூப்பர் டூப்பர் தோல்வி படம். நிறைய பேர் டிவியில் தான் பார்த்தார்கள்.
ம்ம் உண்மைதான்
நன்றி குமார்
நீங்கள் சொல்வது சரிதான்
சில படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெறுகின்றன .
நன்றி பாலா
நல்ல கண்ணோட்டம்
Post a Comment