காவலன் , சிறுத்தை ஆகிய இரு படங்களும் வசூலில் ஏட்டிக்கு போட்டியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது . பல படங்களில் சொதப்பிய விஜய் காவலன் படத்தில் வெற்றியை ருசித்து உள்ளார் . பையா, பருத்திவீரன் படங்கள் மூலம் வெற்றியை ருசித்த கார்த்தி சிறுத்தையிலும் வெற்றி கொடி நாட்டி உள்ளார் . ஆடுகளம் படமும் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது .
காவலன் , சிறுத்தை என படங்கள் எல்லாவரினதும் விமர்சனங்களை எல்லோரும் எழுதி இருப்பார்கள் . இரண்டு படங்களும் வெற்றி படங்கள் தான் . அதில் ஒருவித சந்தேகங்களும் இல்லை . வித்தியாசமான கதையில் விஜய்க்கு உரிய பாணியில் வந்துள்ளது காவலன் படம் . விஜய் ரசிகர்களுக்கு ஏற்ற படம் . எல்லோரும் பார்க்க கூடிய படம் . அதேபோல் கார்த்தி இரு வேடங்களில் கலக்கிய படம் சிறுத்தை .
பையா படத்தில் நாம் பார்த்த பையனா இது என்று வியக்கும் அளவுக்கு சிறுத்தையில், டிஸ்பி மற்றும் திருடன் என இரட்டை வேடங்களில் பிரமாதப்படுத்தியுள்ளார் கார்த்தி. முந்தைய படங்களில் டான்ஸில் சொதப்பிய கார்த்தி, இப்படத்தில் டபுள் புரமோஷன் வாங்குகிறார். நடனத்தில் கவனம் செலுத்தி உள்ளார் . ஆக்ஷன் படமாக இருந்தாலும் படத்தில் கார்த்திக்கு பன்ச் டயலாக் இல்லை. இதற்காகவே டைரக்டரை ஒருமுறை வாயார பாராட்டலாம். சிங்கமாக வந்து மிரட்டினார் சூர்யா , சிறுத்தையாக வந்து மிரட்டி இருக்கிறார் கார்த்தி . டான்சில் எப்போதுமே பின்னி எடுக்கும் விஜய் காவலனிலும் அழகாக நடித்தும் , டான்ஸிலும் கலக்கி இருக்கிறார் . ஒவ்வொரு நடன தோற்றமும் அசைவுகளும் பிரமாதம் .
இப்போது விடயத்துக்கு வருவோம் . பொங்கலுக்கு வந்த படங்களில் பாக்ஸ் ஆபீசில் வசூலில் சாதனை படைத்தது எந்த படம் . தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று அனைவரையும் மனம் குளிர வைத்திருக்கின்ற படம் எது என்று கணக்கு வழக்கு பார்த்து முடித்து இருக்கிறார்கள் . எல்லோரையும் மனம் குளிர வைத்துள்ள படம் காவலன் தான் . சிறுத்தையை பின்னுக்கு தள்ளி காவலன் முன்னேறி விட்டான் . இதுவரையில் கணக்கு பார்த்ததில் நிலவரம் காவலன் 21 கோடி வசூல் . சிறுத்தை 16 கோடி வசூல் .
எனினும் கார்த்தியின் முன்னேற்றத்தை பாராட்ட வேண்டும் உண்மையில் . ஏனெனில் விஜய் ஐம்பது படத்துக்கு மேல் பண்ணி விட்டார் . கார்த்தியோ ஐந்து படங்கள் தான் முடித்து உள்ளார் . ஒரு முன்னணி நடிகர்களுடன் போட்டி போடும் அளவுக்கு தலை நிமிர்ந்துள்ளார் என்றால் அவரின் வளர்ச்சி அபரிதம் தானே . கார்த்தியின் வேகம் பாராட்டத்தக்கது .
பாப்போம் இனிவரும் காலங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று ???
3 comments:
i am first
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா...
வருகைக்கு நன்றி
அதுவும் முதல் வருகைக்கும் நன்றி
நன்றி சரவணன்
Post a Comment