பெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழகாய் கொடுக்கிறது . அடக்கமான உடைகளில் சுடிதார்களுக்கு முக்கிய பங்கு உண்டு . சில பெண்கள் சாறிகளை விட சல்வார்களை விரும்புகின்றனர் . சுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது.
ஒவ்வொரு நாகரிகத்துக்கு ஏற்ப பல நிறங்களிலும் , பல வடிவங்களிலும் , பல டிசைன்களிலும் சுடிதார்கள் வருகின்றன . சிலர் சல்வார் தைப்பதட்க்கு தேவையான துணிகளை வாங்கி தமது அளவுக்கு ஏற்ப தைத்து கொள்கிறார்கள் . தையல்காரர்கள் அவர்களுக்கு விர்ம்பிய டிசைனில் தைத்து கொடுக்கிறார்கள் . கல்லு வைத்தது , சீக்குவின்ஸ் வைத்தது , மினுங்கல் போட்டது , வேர்க் பண்ணியது என்று பல வகைகளில் சுடிதார்கள் உண்டு .
கையில் நெட் வைத்தது , பொம்மல் கை வைத்தது , நெட் சுடிதார் வகைகளும் உண்டு .மசக்களி , ரசக்களி , பட்டியாலா என்று பல பெயர்களிலும் சுடிதார்கள் வந்த வண்ணம் உள்ளன .ஆயத்த ஆடைகளின் மோகம் மெல்ல மெல்ல குறைந்து, தற்போது சுடிதார் துணிகள் எடுக்கப்பட்டு தங்களுக்கு வேண்டிய வகையில் தைத்து அணிகின்றனர் இளம் பெண்கள் . மென்மைத்தன்மை கொண்டது. எளிதாக துவைத்து பயன்படுத்தலாம். அணிந்து கொள்பவருக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது.
திருமணமான பெண்களுக்கும், வயதான பெண்களுக்கும் ஏற்றது. வீட்டில் இருக்கும்போது அணிந்து கொள்ள, அலுவலகம் செல்லும்போது உடுத்திக் கொள்ள, விழாக்கள், திருமணம் மற்றும் பார்ட்டிகளுக்குச் செல்லும்போது அணிந்து கொள்ள என செல்ல வேண்டிய இடத்தை பொறுத்து வகைவகையான சுடிதார்கள் வந்த வண்ணமே உள்ளன . எல்லா வயதினரும் கடைகளில் விரும்பி சுடிதார்களை வாங்கி அணிகின்றனர் .
சல்வார் என்பது குர்தாவுடன் சேர்த்து அணியக்கூடிய பேண்ட் வகையாகும். இடுப்பு பகுதியில் நாடா அல்லது எலாஸ்டிக் வைக்கபட்டிருக்கும். காலுடன் ஒட்டி இறுக்கமாக இருக்கும் பாண்ட் வகைகளும் உண்டு , விரிந்த பெரிய பாண்ட் வகைகளும் உண்டு. விருப்பம் போல தெரிவு செய்யலாம் . இவற்றுடன் அணிந்து கொள்ளபடும் துப்பட்டா, ஸ்கார்ப் வகைகளுள் ஒன்றாகும். நீளமாக இருக்கும். கழுத்து அல்லது தலையில் அணிந்து கொள்ளலாம். இதை அணிந்து கொள்பவருக்கு நல்ல ஸ்டைலைத் தரும். துப்பட்டாக்கள் தற்போது ஆடைக்கு அழகு சேர்க்கும் பொருட்களுள் ஒன்றாகக் கருதபடுகின்றன.
பட்டியாலா சல்வார்கள் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தபட்டு வந்தாலும், அணிந்து கொள்பவருக்கு `மாடர்ன் லுக்’கைத் தருவதில் சிறப்பிடம் பெறுகின்றன. செமி பட்டியாலா சல்வாரில் துணியின் அளவு குறைவாக இருக்கும். பாகிஸ்தானி அல்லது பட்டானி சல்வாரை விரும்பி அணிபவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களே. ஆண்-பெண் இருபாலருமே இந்த வகையான சல்வார்களை அணிகின்றனர். இந்த சுடிதாரில் டாப் என்று அழைக்கபடும் குர்தா நீளமாக இருக்கும்.
அணிய இலகுவானதும் , மனதை கவர்ந்ததாகவும் இந்த சல்வார்கள் இருக்கின்ற படியால் இளவயதினர் சல்வார்களை விரும்பி அணிகின்றனர் . இப்போது வயது வந்தவர்களும் அணிகின்றனர் . அவர்களுக்கும் பிடித்து இருக்கிறது .
ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ப சல்வார்களும் உண்டு . ஒவ்வொரு தரத்துக்கு ஏற்ப விலைகளும் உண்டு . நமக்கு ஏற்ற விலைகளில் சல்வார்களை வாங்கி அணியலாம் . தெற்காசிய பெண்கள் அதிகம் விரும்பி அணியும் உடைகளில் ஒன்றாக இருக்கிறது இந்த சல்வார்கள் .அதற்க்கு காரணம் வீட்டில் இருக்கும்போதும், வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் சுடிதார்கள் பாதுகாப்பான உடையாக இருப்பதாக பெண்கள் கருதுகின்றனர்.
.
.
6 comments:
குறுகிய காலத்தில் தமிழகத்தில் மிக வேகமாக பரவிய ஒரு உடை. தொண்ணூறுகளின் இறுதியில்தான் தமிழகத்தில் நுழைந்தது.
present pavi
அருமை... அருமை...
எனது பதிவுலக அறிமுகத்தை தரிசிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன்
சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்
ஆம் . நன்றி பாலா
நன்றி சித்தாரா
வருகிறேன்
nalla pakirvu pavi.
Post a Comment