நாம் நோயின்றி நீண்டகாலம் வாழ வேண்டும் , சத்தான உணவுகளை உண்ண வேண்டும் . ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் . சத்தான உணவுகளை உண்டால் தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் . யாரை பார்த்தாலும் இப்போது ஒவ்வொரு நோயுடன் தான் இருக்கிறார்கள் .
10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.
நாம் சத்தான காய்கறிகளையும் , பொன்னாங்காணி, கீரை , அகத்தி, வல்லாரை போன்ற இலை வகைகளையும் உண்ண வேண்டும் . எமக்கு நோய்கள் வருவதற்க்கு காரணம் நாம் தான் . நாம் எமது உடம்பை கவனிப்பதில்லை , கண்ட நேரத்துக்கு சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் பட்டினி கிடப்பது , எந்த நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது என எமக்கு ஒரு வரையறையே இல்லை .
இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம். மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும் இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்
எம் முன்னோர்களை பார்த்தோமானால் அவர்கள் இயற்கை உணவுகளை தயாரித்து உண்டார்கள் . அதிகம் இலைவகைகளை உண்டார்கள் . தாமே தமது கையால் உணவுகளை செய்து தாமே உண்டு ஆரோக்கியத்துடன் இருந்தார்கள் . ஆனால், நாம் இப்போது அப்படியா இருக்கிறோம் . இல்லையே . அதுதான் நோய்களையும் , மரணத்தையும் சிறிய வயதிலேயே அனுபவிக்கின்றோம் .
காய்கறி வகைகளின் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சத்துகள் நிறைந்தவை . பாகற்காயில் விட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கல்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். வாழைப்பூவில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.
வெண்டிகாயில்போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும். பீட்ரூட் கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.
கரட்டில் உடலுக்கு உறுதியைக் கொடுக்கும் தன்மை , இரத்தத்தை சுத்தப்படுத்தும். இப்படி பல காய்கறிகள் உண்டு . ஒவ்வொன்றும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்தவை.
இலை வகைகளும் விட்டமின் , கல்சியம் போன்ற சத்துக்களை எமக்கு அளிக்கின்றன. தினம் ஒரு இலைவகை உணவில் சேர்த்துக் கொண்டால் எமது உடல் நலத்துக்கு நன்மை அளிக்கும் .
4 comments:
thanks for this article pavi
நமது உணவு கலர் புல்லாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். அப்படி இருந்தால் நோயே வராது. நல்ல பதிவு பவி.
நன்றி சரவணன்
nice article. Thanks to you
Post a Comment