Tuesday, May 10, 2011

கோ , வானம் , மாப்பிள்ளை , எங்கேயும் காதல் எந்த படம் பார்க்க போறீங்க ???


கே. வி .ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கோ . தொடர்ந்தும் ஜனத்திரள் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது கோ படம் . ஒரு சாதரண பத்திரிகை புகைப்படக்காரர் தலையில நாட்டை யார் ஆள வேண்டும் என்ற பொறுப்பு வந்தால் என்ன செய்வான் என்பதுதான் இந்த படத்தின் கதை. 
http://way2online.com/wp-content/uploads/2011/04/Ko_Censored-300x225.jpg
கோ படத்தில் ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல், பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாசராவ், போஸ் வெங்கட், ஜெகன், சோனா போன்றோர் நடித்து உள்ளனர் . ஜீவாவுக்கு இது ஒரு வெற்றி படம் . மற்றைய வெற்றிகளை விட இந்த படம் ஜீவாவுக்கு இப்படம் பிரமிக்க வைத்த வெற்றி ஆகும் . 
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/07/vaanam-header.jpg
சிம்பு , பரத் , அனுஷ்கா நடித்து வெளிவந்து திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் வானம் . தெலுங்கில் அல்லு அரவிந்த் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிய 'வேதம்' படத்தின் தமிழ் ரீ-மேக்தான் இந்த 'வானம். தீவிரவாதம், பகட்டு, அதிகார வெறி, சுயநலம், அறியாமை, இயலாமை போன்று இந்த உலகத்தில் ஊடுறிவிப்போன விஷயங்களை நன்றாக சொல்லி இருக்கிறார். தற்கால சினிமாவில் ஒரு சிறிய விஷயத்தை எடுத்து அதை மையப்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்படும். ஆனால் மனித முதிர்ச்சிக்கு இதுவரை கிட்டாத விஷயங்களை நன்றாக கையாண்டுள்ளார் இயக்குநர்.. அதை நெஞ்சுருகும் விதத்தில் கொடுத்தும் உள்ளார்.

சிம்பு, பரத். பிரகாஷ்ராஜ், சரண்யா, அனுஷ்கா என்று எல்லாரும் கதைக்குள்ள ஒன்ற வைத்துவிட்டனர். தமிழ் சினிமாவின் மசாலா பாணி பல இடங்களில் தெரிந்தாலும், அது நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது. வானம் படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது . சிம்புவுக்கு இதுவும் ஒரு வெற்றி படம் தான் .
http://blog.tamilmp3songslyrics.com/image.axd?picture=2011%2F4%2FDhanush+Mappillai+Movie+Stills_1.jpg
இருபது வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக் தான் இந்த மாப்பிள்ளை. அதில் ரஜனியின் நடிப்பு பிரமாதம் . அது தனுசுக்கு பொருந்துகிறதா என்பதுதான் அடுத்த விடயம் . தனுஷ் மீது கோடீஸ்வரி மனிஷாவின் மகள் ஹன்சிகாவிற்கு காதல் வருகிறது. ஏற்கனவே மனிஷாவின் மகனுக்கும் தனுஷின் தங்கைக்கும் காதல்- கர்ப்பம் என்று சைடில் இன்னொரு கதையும் ஓடுகிறது.  
http://mimg.sulekha.com/tamil/engeyum-kadhal/stills/engeyum-kadhal-movie-stills055.jpg
ஜெயம் ரவி , ஹன்சிகா நடித்து வெளிவந்திருக்கும் படம் எங்கேயும் காதல் . நடிகர், இயக்குனர் பிரபுதேவா இயக்கி உள்ளார் . வாழ்க்கையில் எங்கேயும் எப்போதும் கமிட்டாகாமல் ஜாலியாய் இருப்பேன் என்ற முடிவோடு இருக்கும் ஒருவனுக்கும், பாரிஸிலேயே பிறந்து வளர்ந்து இந்திய கலாச்சாரங்களில் ஊறியவள் என்று சொல்லப்படுகிறவளுக்கும் இடையே ஆன காதல் தான் கதை. பிரான்ஸ் நாட்டில் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன . படத்தை பார்த்தால் பிரான்ஸ் போய் வந்த சந்தோசம் ஏற்படும் . பாடல்கள் எல்லாம் அருமை . கேட்கும்படியாக இருக்கிறது .

சரி நீங்க எந்த படம் பார்க்க போறீங்க ?
1. நான்கு படங்களும் 
2. வானம் 
3 கோ 
4 மாப்பிள்ளை 
5 எங்கேயும் காதல் 
6. ஒன்றும் இல்லை 

4 comments:

r.v.saravanan said...

கோ படம் பார்த்து விட்டேன் வானம் பார்க்க போகிறேன்

பாலா said...

மூன்று பார்த்தாகி விட்டது. எங்கேயும் காதல் பார்க்கும் ஐடியா இப்போதைக்கு இல்லை.

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் பாருங்க
நன்றி சரவணன்

Pavi said...

ஓகே . நன்றி பாலா