Tuesday, May 10, 2011

தொடரட்டும் சென்னை அணியின் வெற்றி

http://www.cricexplorer.com/wp-content/uploads/Chennai-Super-Kings-Team-2011-Indian-Premier-League-4-300x180.jpg

நேற்று நடந்த ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. தலைவர் வோன் நாணய சுழற்ச்சியில் வென்று களத்தடுப்பை தேர்வு செய்தார் . சென்னை அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது . ஆரம்ப ஜோடி விஜய், ஹசி ஆகியோர் களமிறங்கினர் .  மனேரியா வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் ஹசி. பின் அமித் சிங் வீசிய போட்டியின் 5வது ஓவரில் ஹசி 2 பவுண்டரி, விஜய் ஒரு பவுண்டரி அடித்தனர். வார்ன் சுழலில் விஜய் ஒரு இமாலய சிக்சர் அடித்து அசத்தினார். போத்தா பந்தில் ஹசி(46) போல்டானார்.
http://1cric.com/wp-content/uploads/2011/04/Mumbai-Indians-v-Chennai-Super-Kings-LIVE-25th-IPL-2011-Match-22-April-2011-IPL-4-LIVE-1.jpg
எனினும் நிதானமாக ஆடிய விஜய் 53 ஓட்டங்களை அணிக்கு பெற்று கொடுத்தார் . அதன் பின்பு ரெய்னா , தோனி இருவரும் தூள் கிளப்பினார்கள் . போட்டியின் 17வது ஓவரில் தோனி ஒரு சூப்பர் சிக்சர், 2 பவுண்டரிகள் விளாச, ஒட்டுமொத்தமாக 18 ஓட்டங்கள்  கிடைத்தன. வாட்சன் வீசிய அடுத்த ஓவரில் ரெய்னா ஒரு பவுண்டரி மற்றும் தோனி தன் பங்குக்கு ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, 17 ஓட்டங்கள்  எடுக்கப்பட்டன. அமித் சிங் வேகத்தில் ரெய்னா(43) அவுட்டானார். தொடர்ந்து அமித் சிங் பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட தோனி, ஸ்கோரை மிக வேகமாக உயர்த்தினார்.
http://4.bp.blogspot.com/-X9ozrS4-E8g/TanAysxowWI/AAAAAAAAAXg/gMh0V7ph36E/s1600/131815.jpg
சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 196  ஓட்டங்களை குவித்தது.197 என்ற கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது . டிராவிட்(20) விரைவில் வெளியேறினார். அஷ்வின் பந்தை வாட்சன்(11)  ஓட்டங்களை அடித்து அவுட்டானார் .ஆல்பி மார்கல் வேகத்தில் ராஸ் டெய்லர்(6) சரணடைந்தார். மனேரியா(2) தாக்குப்பிடிக்கவில்லை. ரெய்னா வீசிய கடைசி ஓவரில் அமித் சிங்(1), வார்ன்(0) வெளியேற, ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 133 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது. 
http://www.thehindu.com/multimedia/dynamic/00619/30TH_CHENNAI_SUPER_619663f.jpg
ஆட்ட நாயகன் விருதை முரளி விஜய் தட்டிச் சென்றார்.இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணி பரிதாபமாக வீழ்ந்தது.



1 comment:

Anonymous said...

enathu support chennaikku thaan............


mano