Wednesday, July 20, 2011

விக்ரமின் வித்தியாசமான நடிப்பு திறன்

http://vikram.bizhat.com/wp-content/uploads/2010/12/actor-vikarm.jpg

தமிழ் திரை உலகில் பல நடிகர்கள் இருக்கிறார்கள் . சிலர் நன்றாக நடிக்கின்றனர் . சிலர் வந்த வேகத்திலே திரும்பி விடுகிறார்கள் . சிலர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கிறார்கள் . சிலர் கஷ்டப்பட்டு சினிமாவுக்குள் நுழைந்து சாதனைகளை புரிகிறார்கள் . இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் .
http://cdn.wn.com/pd/6f/55/67fabb1daf40f442538288f398dd_grande.jpg
தமிழ் திரை உலகில் சில  நடிகர்கள் ஹிட் படங்களை கொடுத்தாலும் அதில் விக்ரம் ஒரு தனித்திறமை வாய்ந்தவர் . ஹிட் படம் என்றால் இப்போதெல்லாம் கொஞ்ச மசாலாவாக இருந்தால் சரி . நகைச்சுவை , சென்டிமென்ட் , குத்தாட்டம் இப்படி இருந்தால் படம் ஓடும் என்ற நிலைமை இருக்கிறது . ஆனால், விக்ரம் படத்துக்கு படம் வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர் .
http://icdn1.indiaglitz.com/tamil/news/vikram060506_1.jpg

http://en.600024.com/images/profile/movie/1999/sethu.jpg
சேது படத்தில் அவரின் நடிப்பு பிரமாதமாக இருந்தது . விக்ரமா இது ? இப்படியான நடிகர் இவ்வளவு நாளும் எங்கு இருந்தார் என யோசிக்க வைத்தது . பின்பு ஜெமினி , தூள் , சாமி என கொமர்சியலாக நடித்து இருந்தார் . தன்னை படத்துக்கு படம் வருத்தி படத்துடன் ஒன்றி நடிக்கும் ஆற்றல் பெற்றவர் விக்ரம் .
http://www.dgjonesandpartners.com/2.bp.blogspot.com/_PWrGdTZVICA/SdlxgJCS7PI/AAAAAAAAAQQ/kPcVE8vG0Y4/s320/kandasamy.jpg
படத்தின் கதைக்கு ஏற்ப தன்னை பக்குவப்படுத்தி நடிக்கின்றார் . சில நடிகர்கள் ஏனடா நமக்கு இந்த வீண்வம்பு என ஒதுங்கி நிற்கும் பாத்திரங்களில் விக்ரம் துணிந்து நடிப்பார் . அது அவருக்கு உரித்தான சிறப்பியல்பு . பிதாமகனில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிக்காடிய விக்ரம் அந்நியனில் மூன்று வேடங்களில் நடித்து பிரமாதப்படுத்தினார் . 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimocxgK7NYR-hFAjKuBAjTzXUQivRCNQjGBQybureQzXiYV37z1v5wuC_UetHw6vZP2e7NY63kCRa3kVOhejh_n4ttILdcv0jbYNU900j_jjE4XfwHzbkKIq9PHtWc22CUrlaBN90Tdzs/s320/Deiva+Thirumagal+Very+Sensitive+Story+-+Vikram.jpghttp://moviegalleri.net/wp-content/uploads/2011/07/vikram_baby_sara.jpg
இப்போது விக்ரம் வித்தியாசமான வேடத்தில் நடித்து இருக்கும் படம் தெய்வத்திருமகள். இயக்குனர் விஜய் இயக்கி இருக்கிறார் . அனுஷ்கா , அமலாபால் நடித்து இருக்கின்றனர் . இந்தப் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்துள்ளார் விக்ரம் . படம் இப்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது . கதைகளுக்கு ஏற்றாற்போல் தன்னை பக்குவப்படுத்தி நடிப்பது எல்லோராலும் முடியாது . 

http://www4.pictures.zimbio.com/gi/Vikram+Kennedy+Raavanan+Photocall+67th+Venice+9vlmygNZZpzl.jpg
இத்தாலிய பல்கலைக் கழகம் இவருக்கு நடிப்புத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக, அண்மையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது . விஜய் தொலைக்காட்சியில் சிறந்த நடிகராக விக்ரம் தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பது அறிந்ததே . தெய்வத்திருமகள் படத்துக்கு பின்பு விக்ரம் நடிக்கும் படம் ராஜபாட்டை. சுசீந்திரன் இயக்குகிறார். கதாநாயகியாக தீக்ஷாசேத் நடிக்கிறார். இது குறித்து விக்ரம் கூறுகையில் ; ரொம்பநாளைக்கு பிறகு கமர்ஷியல் மசாலாவுடன் தயாராகும், ராஜபாட்டை படத்தில் நடிக்கிறேன். இந்த படம் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. தில், தூள், சாமி மாதிரி கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. ராஜபாட்டை படத்தில் அது நிறைவேறியுள்ளது.திறமையான டெக்னீசியன்கள் இப்படத்தில் உள்ளனர். எனவே சிறப்பாக உருவாகும் என குறிப்பிட்டு உள்ளார் . 
 






 .


No comments: