அதாவது எமது நண்பருக்கோ , சகோதரருக்கோ , அப்பா , அம்மா போன்ற உறவுகளுக்கோ , உங்களது அன்புக்குரியவருக்கோ பிறந்தநாள் என்றால் நீங்கள் வாழ்த்து மடல் ஒன்றை அவரது பிறந்த நாளுக்கு அனுப்புங்கள் . நீங்கள் ஏதாவது பரிசுப்பொருள் வாங்கி கொடுத்தீர்கள் என்றால் அதனை கொஞ்சநாள் தான் நினைவாக வைத்திருப்பார்கள் . ஆனால், நீங்கள் வாழ்த்துமடல் அனுப்பினீர்கள் என்றால் அவர் எப்போதும் தன்னுடன் வைத்திருக்க ஆசைப்படுவார் .
கேக் வாங்கி கொடுத்தோமானால் உடனே சாப்பிட்டு முடிந்து விடும் . பணமாக கொடுத்தோம் என்றால் உடனே செலவழித்து முடிந்து விடும் . உங்களது அன்புக்குரியவருக்கு உங்கள் கையெழுத்தை அதில் பதித்து உங்கள் அன்பான வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .
No comments:
Post a Comment