Monday, September 5, 2011

அஜித்தின் மங்காத்தா ஆட்டம்

http://filmnews.bizhat.com/wp-content/uploads/2011/04/01109.jpg
 அஜித்தின் மங்காத்தா படம் சூப்பர் ஹிட் படமாக திரை அரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது . ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது . அஜித்தின் திரை பயணத்தில் ஒரு திருப்புமுனையான படம் இந்த மங்காத்தா . 'மங்காத்தா' படத்திற்கு வந்த முதல் நாள் கூட்டம், ஒட்டுமொத்த எல்லா இடங்களையும்  பிரமிக்க வைத்திருக்கிறது. ரஜினி படங்களுக்கு வருகிற அதே கூட்டம் அஜித் படத்திற்கும் வந்தது என்றால் பாருங்களேன் .

எல்லா அஜித் ரசிகர்களும் மங்காத்தா படத்தின் திரை விமர்சனத்தை எழுதி விட்டார்கள் . நானும் மங்காத்தா படம் பார்த்தேன் . எனக்கும் படம் பிடித்து இருந்தது . ஒரு சிறிய கதைகருவை வைத்து எப்படி படம் எடுக்கலாம் என்று யோசித்து இந்த மங்காத்தா ஆட்டத்தை ஆடி இருக்கிறார்கள் . படம் விறுவிறுப்பாக இருக்கிறது .
Mankatha
ஒரு அரைத்த மாவை அரைத்த கதைகளை பார்த்து , பார்த்து அலுத்து போய் விட்டது ரசிகர்கள் எல்லோருக்கும் . கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து இப்படியான படங்களை எடுக்கும் போது படங்களும் வெற்றி பெறுகின்றன . ரசிகர்கள் சந்தோசம் அடைகிறார்கள் . தியேட்டர்காரர்களுக்கு மனம் குளிர்கிறது . அவர்களும் இலாபம் அடைகிறார்கள் . படம் நன்றாக ஓடும் போது எல்லோரினதும் மனங்களும் குளிர்கின்றது அல்லவா ? எல்லோரும் கையை சுட்டுக் கொள்ளாமல் இலாபம் உழைக்கிறார்கள் அல்லவா ? 
Mankatha
அஜித்தின் தீவிர ரசிகர் நடிகர் சிம்பு. இதை அவரே பல முறை தெரிவித்து உள்ளார். அஜித் படங்களை முதல் நாளிலேயே தியேட்டரில் சென்று பார்ப்பது வழக்கம். 'மங்காத்தா' படத்தையும் அது போல் பார்க்க ஆசைப்பட்டார் சிம்பு . அஜித்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். விசில் அடித்தேன். அவர் பஞ்ச் வசனங்களை கேட்டு துள்ளி குதித்தேன் என்கிறார் சிம்பு .
Mankatha
இப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் அஜித் நடிப்பை பாராட்டியதோடு தனது 50வது படமாக இந்த படத்தை தேர்ந்தெடுத்த அஜித்தை பாராட்ட வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.  ஏனெனில் தமிழ் சினிமா ஹீரோக்கள் இதையெல்லாம் பண்ணக்கூடாது என இலக்கணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் அந்த இலக்கணங்களை கடைப்பிடிப்பது அவசியம். கதாநாயகியை ஏமாற்றாதது, கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது, உண்மையான வயதை மறைப்பது என மாஸ் ஹீரோக்களுக்குண்டான அத்தனை இலக்கண விதிகளையும் துணிச்சலாக உடைத்து மங்காத்தா விளையாடி இருக்கிறார் அஜித். அப்ப அஜித்தை பாராட்டாமல் இருக்க முடியுமா ?
Mankatha
அதுவும் வில்லன் வேடம் ஏற்று அஜித் பாட்டை கிளப்பி இருக்கிறார் . தனது முக்கியமான 50வது படத்தில் பிற நடிகர்களுக்கு முக்கிய தோற்றங்கள் கொடுத்து, கதைக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருக்கும் அஜித்தின் பெருந்தன்மை பாராட்டுதலுக்குரியது. அதிலும் தனக்குண்டான மாஸ் ஓபனிங், ரசிகர்கள், இமேஜ் என எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒரு பக்கா நெகடிவ் கதாபாத்திரத்தை செய்திருப்பது அஜித் மேல் உள்ள மரியாதையை ரசிகர்களுக்கு நிச்சயம் அதிகரிக்கும்.

மகாகவி பாரதியாரின் பேரனான நிரஞ்சன் பாரதி எழுதிய 'கண்ணாடி நீ... கண்ஜாடை நான்...' பாடலுக்கு வைபவ்-அஞ்சலி ஜோடியும், அர்ஜுன்-ஆன்ட்ரியா ஜோடியும் ஆடிப் பாடுகிறார்கள். "புத்தி என்பது சக்தி என்பதை கற்றுக்கொள்ள்டா என்  நண்பா, பக்தி என்பதை தொழிலில் வைத்துவா  நித்தம் வெற்றிதான் என் நண்பா "இது மங்காத்தா படத்தில் வரும் பாடல் வரி ஒன்று . 
Mankatha
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..

பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் பாடல்கள் . காட்சி அமைப்புகள் சிறப்பாக உள்ளது . மொத்தத்தில் மங்காத்தா "தூள் மச்சி ".

11 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

மங்காத்தா எல்லா தரப்பிலும் பாராட்டப்படும் படம்

Nirosh said...

ம்ம் உண்மைதான். அஜித்தின் திரை வரலாற்றில் இது ஒரு மைல்கல்.. நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்.!

Anonymous said...

பிளக்கில இன்னும் எத்தின பேரு இந்த மங்கத்த வா பற்றியும் அஜீத்த பற்றியும் எழுதி சவடிக்க போறான்கள் தெரியேலையே

பாலா said...

திரும்ப திரும்ப பார்க்க தூண்டியது இந்த படம்...

Pavi said...

நல்ல படங்களை பாரட்ட வேண்டும் . நன்றி சௌந்தர் ஜி

Pavi said...

நன்றி நிரோஷ் ஜி

Pavi said...

நண்பா எவ்வளவு எழுத முடியுமோ அவ்வளவு எழுதட்டும் . நல்ல படங்களை பற்றி .

Pavi said...

நன்றி பாலா ஜி

r.v.saravanan said...

நான் படம் பார்த்து விட்டேன் பவி எனக்கு அஜித் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது

r.v.saravanan said...

என் தளத்திற்கு அவ்வபோது வருகை தாருங்கள்

Pavi said...

நன்றி சரவணன் .
உங்கள் தளம் வருகிறேன்