Thursday, September 15, 2011

அதிக மன அழுத்தம் என்றால் .......

http://www.blogcdn.com/www.bvonlove.com/media/2009/07/man-tension-450ms070609.jpg
இன்றைய இயந்திர வாழ்வில் நிம்மதி இல்லை , சந்தோசம் இல்லை , தூக்கம் இல்லை, இப்படி நீண்டுகொண்டே போகிறது . ஒரு மனிதனுக்கு என்னதான் அதிக வேலை இருந்தாலும் நிம்மதியான தூக்கம் முக்கியம் . உடம்புக்கு ஓய்வு தேவை . ஓய்வில்லாமல் உழைத்தாலோ, அல்லது நித்திரை வராமல் தவித்தாலோ உங்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் வந்து விட ஆரம்பித்து விடும் .

மன அழுத்தத்தால் பலரும் தூக்கம் வராமல் தவிக்கிறார்கள் . இதில் ஆண்களும் சரி , பெண்களும் சரி மன அழுத்தத்தால் இருவரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் . நிம்மதியான உறக்கத்துக்கு மன அழுத்தத்தை குறைத்தல் நல்லது . 

நாம் மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும் . கொஞ்ச நேரம் சிரமம் பாராமல் உடல் பயிற்சி செய்யுங்கள் . உடம்பும் தென்பாகும். களைப்பு நீங்கும் . அப்போது உடம்பு அசதியாகும் . பின்பு போய் உறங்க செல்லுங்கள் . நித்திரை வரும் . 
http://www.featurepics.com/FI/Thumb300/20101031/Man-Tension-1692332.jpg
ஒரு சிந்தனை குறிப்புகள் , வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்த புத்தகங்களை எடுத்து வாசியுங்கள் . அதன் பின்பு நித்திரைக்கு செல்லுங்கள் . மனதை அமைதிப்படுத்துங்கள் . அதிகமாக யோசிக்காதீர்கள் . 

மனதை ஒருநிலைப்படுத்துங்கள். தியானம் செய்யுங்கள் , யோக பயிற்சி செய்யுங்கள் . நித்திரைக்கு செல்லுங்கள் . மனம் அமைதியாக இருக்கும் போது எமக்கு தூக்கம் உடனே வந்துவிடும் .
http://lightinthedarknessoflife.files.wordpress.com/2010/11/1111.jpg
நித்திரைக்கு செல்லும் முன் ஒருகப் பால் அருந்தி விட்டு நித்திரைக்கு செல்லுங்கள் . சத்தான உணவுகளை உண்ணுங்கள் . இரவில் தினம் ஒரு அப்பிள் சாப்பிடுங்கள் . இரவில் அளவுக்கு அதிகமான உணவுகளை உண்ணாமல் சமிபாடு அடையக் கூடிய இலேசான உணவுகளை உண்ணுங்கள் . 

உங்களுக்கு பிடித்த மெலடியான இசையுடன் கூடிய பாடல்களை கேட்டுக் கொண்டு நித்திரை செய்யுங்கள் . தூக்கம் உங்கள் கண்களை வருடும் . மனதும் தெம்பாக இருக்கும் . இவை எல்லாம் நாம் மன அழுத்தத்தை குறைக்கும் வழி முறைகள் . 
http://us.cdn4.123rf.com/168nwm/gvictoria/gvictoria1012/gvictoria101200002/8370314-woman-holds-head-with-tension-pain-showing-on-her-face-due-to-a-headache-or-a-migraine.jpg
மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள் நம்மிடமே உண்டு . இதுக்கு எல்லாம் வைத்தியரை நாடி மருந்து குடித்து தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை . சில வழிமுறைகளை நாம் பின்பற்றி பார்க்கலாம் . அது சரிவரவில்லை என்றால் தகுந்த வைத்தியரை நாடலாம் . 

எல்லோரும் நிம்மதியுடனும் , மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு சந்தோசமாக வாழ வேண்டும் என்பதே எனது கருத்தும் .

3 comments:

பாலா said...

இன்றைய நிலையில் பெரும்பாலானோருக்கு உள்ள பிரச்சனை இந்த மன அழுத்த்ம் தான். நல்ல ஆலோசனைகள். நன்றி

Anonymous said...

நல்ல ஆலோசனை
பகிர்வுக்கு நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Pavi said...

நன்றி நண்பரே