அறிமுகம் ஆகும்போது வருடத்துக்கு மூன்று , ஐந்து படங்களில் நடிப்பார்கள் . பின்பு புதிய நாயகிகள் வந்து , வந்து போக இவர்களை காணக் கிடைக்காது . ஆனால் த்ரிஷா நீண்ட நாளைக்கு தாக்கு பிடிக்கிறார் . சிம்ரன், ஜோதிகாவுக்குப் பின்பு அவர்களின் இடத்தை பிடித்தவர் த்ரிஷா. ஆனாலும், த்ரிஷாவால் ஜோதிகா, சிம்ரனின் இடத்தை பிடிக்க முடியவில்லை .
பல நடிகைகள் சினிமாவுக்கு நடிக்க வருகிறார்கள் . சிலர் வந்த வேகத்தில் திரும்பி விடுகிறார்கள் . சிலர் தமது நடிப்பாற்றல் மூலம் நின்று பிடிக்கிறார்கள் . தெலுங்கில் 'கங்கா' என்ற படமும், தமிழில் ஒரு படத்திலும் இப்போது நடித்துக் கொண்டு இருக்கிறார் . ரசிகர்கள் தொடர்ந்து என் படங்களை ரசிக்கிறார்கள். திறமை இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும். நான் என்னுடைய திறமையை நம்பிதான் வந்தேன். சினிமாவில் பத்து வருடத்துக்கு மேலாக இருக்கிறேன் என்று கூறுகிறார் த்ரிஷா.
விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி , ஆதி போன்ற படங்களிலும் , அஜித்துடன் கிரீடம் , ஜி , மங்காத்தா படத்திலும் , சிம்பு, சூர்யா , விக்ரம் போன்ற நடிகர்களுடன் ஐம்பது படத்துக்கு மேல் நடித்து இருக்கிறார் . இப்போது அஜித்துடன் நடித்த மங்காத்தா படம் சக்கை போடு போடுகிறது . த்ரிஷா பெரிதும் சந்தோசத்துடன் உள்ளார் . சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கு முக்கியத்துவம் தருவதாக இருந்ததால் தான், தான் அதில் நடித்ததாக கூறுகிறார் த்ரிஷா.
த்ரிஷாவிடம் விஜய் பற்றி கூறுங்கள் என்று கேட்டால் ரொம்ப ஸ்டைலான நடிகர் என்று கூறுகிறார் . அஜித் பற்றி கூறுகையில் ;அவர் ஸ்ட்ரெய்ட் பார்வர்ட். நேரடியாக எதையும் பேசக் கூடியவர், யாரையும் முன்னால் விட்டு பின்னால் பேச மாட்டார். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேரே பேசி விடுவார் என்று கூறி உள்ளார் .
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்கள் என்றால் நடிகைகள் தமது திறமையான நடிப்பை காட்டலாம் . அபியும் நானும் , தெய்வத்திருமகள் போன்ற படங்களில் நடிகைகளுக்கு கனமான பாத்திரம் இருந்தால் நல்லது . நடிகைகளுக்கும் பேர் வாங்கித்தரும் படங்கள் இன்னும் பல வர வேண்டும் . சும்மா படங்களில் நான்கு பாடலுக்கு ஆடி விட்டு , நடிகருடன் காதல் வயப்படுவது , வந்து போவது என்று பார்த்து பார்த்து அலுத்து போய் விடுகிறது . படத்தை நடிகருடன் சேர்ந்து தூக்கி நிறுத்தும் பங்கு நடிகைகளுக்கும் உண்டு . அதுக்கான கதைகள் அமைந்தால் படம் வெற்றி பெறுகிறது .
பார்ப்போம் த்ரிஷா இன்னும் எவ்வளவு காலத்துக்கு நின்று பிடிக்கிறார் என்று ........
No comments:
Post a Comment