Thursday, January 12, 2012

நண்பனா ? வேட்டையா ?


http://reviews.in.88db.com/images/nanban-latest-still/vijay-srikanth-jeeva-nanban-movie-latest-photo.jpghttp://m3chennai.com/wp-content/uploads/2012/01/620x408xVettai_Movie-aarya-madhavan-photos.jpg.pagespeed.ic.RFkk4QHIuN.jpg
 இம்முறை பொங்கலுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் அது நண்பனும் , வேட்டையும் தான் . அதுவும் இரண்டு படங்களும் ஒரு நடிகர் நடித்த படங்கள் அல்ல . இரண்டு, மூன்று நடிகர்கள் சேர்ந்து நடித்து இருக்கும் படங்கள் . 
http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_vertical/article-images/06NANBAN-NEW-PICCUT_OUT.jpg.crop_display.jpg
நண்பன் படத்தில் விஜய், ஜீவா , ஸ்ரீகாந்த் சேர்ந்து நடித்து இருக்கிறார்கள் . வேட்டை படத்தில் ஆர்யா , மாதவன் இருவரும் முன்னணி நடிகைகளான அமலாபால் , சமீரா ரெட்டி ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள் . 
 http://3.bp.blogspot.com/-BjF_U4YI3ik/TfTvp5P5CaI/AAAAAAAAKYY/OiGZc-VGNqQ/s1600/arya_madhavan_vettai+_tamil_movie_stills_photos_8.jpg
இம்முறை பொங்கலுக்கு ஜெயிக்கப் போவது யார் என்று எல்லா ரசிகர்களும் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள் . விஜய் வேலாயுதம் வெற்றிக்கு பிறகு பெரிதும் நண்பனை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார் . மூன்று நாயகர்கள் சேர்ந்து நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வாறு வரவேற்பு இருக்கும் என்று இந்த படத்தில் ஒரு முன்னோட்டமாக இருக்கும் . படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து ஏனைய நடிகர்களும் இரண்டு , மூன்று நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்க வாய்ப்புகள் உண்டு .
http://cinefundas2.cinefundas.netdna-cdn.com/wp-content/uploads/2011/09/Nanban1.jpg?d9c344
இந்திப் படங்களில் முன்னணி நடிகர்கள் பலர் சேர்ந்து நடிப்பார்கள் . படங்களும் வெற்றிகரமாக ஓடும் . வசூலும் நன்றாக இருக்கும் . ரன் , பையா படங்களை இயக்கிய லிங்குசாமி வேட்டை படத்தை இயக்கி உள்ளார் . பாடல்களும் நன்றாக வந்துள்ளது . 

இதேபோல் பிரமாண்டம் என்று சொன்னால் சங்கர் தான் . சங்கர் இயக்கி வெளியாக இருக்கும் படம் நண்பன் . இப்படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு . பாடல்கள் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது . 
http://images.news.pluzmedia.com/slide/big_UK_Theatre_lists_for_Vettai-20ba6a0f4c80759d0ec6c6114fef3e78.jpg
பொறுத்திருந்து பார்ப்போம் . எந்த படம் வெற்றி பெறுகிறது ? எந்த படம் வசூலில் சாதனை படைக்கிறது என்று ? இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு உண்டு . எனினும் ரசிகர்களின் தீர்மானம் , ரசிகர்களுக்கு படங்கள் பிடித்து இருக்கணுமே ? பார்ப்போம் என்ன நடக்கிறது என்று .......




No comments: