Wednesday, August 7, 2013

மகிழ்வான தருணங்கள் (தொடர் பதிவு )




நாம் பிறந்ததில் இருந்து இறக்கும் வரைக்கும் எமக்கு பல புதிய விடயங்கள் , சந்தோசங்கள் துக்கங்கள் வந்து போகின்றன அப்படி பல மகிழ்வான தருணங்கள் பல எல்லோர் வாழ்க்கையிலும் வந்து போகின்றன. இன்னும் பல மகிழ்வான தருணங்கள் எல்லோருக்கும் , என் வாழ்விலும் இனியும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டு விடயத்துக்கு வருகிறேன். 

 நண்பர்  குமார் ஒரு தொடர் பதிவாக "மகிழ்வான தருணங்கள் " எனும் தலைப்பில் என்னையும் ஒருவராக இணைத்து உள்ளார் அவருக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் .எல்லோருக்கும் இப்போதெல்லாம் வீட்டு விலாசம் இருக்கோ இல்லையோ பேஸ்புக் விலாசம் கட்டாயம் இருக்க வேண்டும். சக நண்பர்களோடு பேசினாலோ , பழகினாலோ முதலில் உன்னுடைய பேஸ்புக் ஐடி என்ன என்று தானே கேட்கிறார்கள் .அப்படி இல்லாவிட்டால் உன்னிடம் பேஸ்புக் இல்லையா ? என்று கேட்டு ஏளனமாக சிரிக்கிறார்கள் காலம் மாறிப் போச்சு தானே. நாமும் மாறித்தான் ஆக வேண்டும். 

நான் பேஸ்புக் ஆரம்பித்ததில் எனக்கும் பல நண்பர்கள் கிடைத்தார்கள் . அவர்கள் என்னுடன் படித்த பழகிய நண்பர்கள், உறவினர்கள்  என பலர் இருக்கிறார்கள் . எனது பிறந்தநாள் என்றதும் வாழ்த்துக்கள் வந்து குவிந்து இருக்கும் . அப்போது அது ஒரு சந்தோசமாக இருக்கும். எல்லோருக்கும் பொறுமையாக இருந்து நன்றி தெரிவிப்பேன் .

பத்து வருடம் கழித்து எனது நண்பி எப்படி இருக்கிறாள் என்று பேஸ்புக் இருக்கிற படியால் கண்டு பிடிக்க முடிகிறது. அவர்களுடன் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. பழைய யாபகங்களை மீட்டி பார்ப்பது என பல சந்தோசமான சம்பவங்கள் நடைபெற்றன .

பல மகிழ்வான தருணங்கள் இருந்தாலும் வலைப்பூவில் நமது சந்தோசத்தில் அதற்க்கும் பங்கு உண்டு தானே. அதனால் அந்த தருணங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .எனக்கு யாருமே வலைப்பூவில் இப்படி எழுதணும், எழுதக்கொடாது என்று யாருமே சொல்லித்தரவுமில்லை யாரிடமும் கேட்டதும் இல்லை. சிலரின் வலைப்பூவை பார்த்து இவர்கள் எப்படி எழுதுகிறார்கள் , எப்படி ஆரம்பிப்பது என்றெல்லாம் நினைத்தேன் . பின்பு வலைப்பூ எப்படி ஆரம்பிப்பது, எழுதுவது என்பது பற்றி தேடி ஆறைந்து பல விடயங்களை வாசித்து அறிந்தேன் அதன் பின்பு நானாகவே உடனே வலைப்பூ  ஒன்றை ஆரம்பித்து உடனே ஒரு பெயரை "இது பவியின்  தளம் துளிகள்" என்று ஆரம்பித்து முதலில் சின்ன சின்ன கவிதைகள் எழுதினேன். நண்பர்கள் நன்றாக இருக்கிறது தொடருங்கள் என்று ஊக்கம் அளித்தார்கள் .

அதன் பின்பு நான் கவிதை என்ற வட்டத்தில் நிக்காமல் பல விடயங்கள் , பல தலைப்புகளில் கட்டுரைகள், கவிதைகள் , பிடித்தபாடல் வரிகள் , நான் ரசித்தவை போன்ற விடயங்களை எழுதி பலரும் வாசித்து பயனடைய வேண்டும் என்று பல பதிவுகளை எழுதினேன். பல விடயங்களை வாசித்து அறிந்து அவற்றை எல்லோருக்கும் புரியும்படியும் விளங்கும்படியும் பதிவுகளை எழுதுவேன். 

பல நண்பர்கள் என் தளத்துக்கு வந்து செல்வார்கள். கருத்துகளையும் கூறுவார்கள் . சிலர் எனக்கு ஆலோசனைகளையும் கூறுவார்கள் . அவற்றை செவிமடுத்து குறைகள் வராமல் எழுத எண்ணி எழுதிக் கொண்டு இருந்தேன் முன்னைய ஆண்டுகள் போல் இப்போதெல்லாம் பதிவுகள் நான் இடுவது குறைவாகி விட்டது. நேரமின்மை தான் காரணம். எனினும் கிடைக்கும் நேரங்களை வீணடிக்காமல் ஏதாவது ஒரு பதிவாயினும் போடா வேண்டும் என நினைத்து எழுதுவதும் உண்டு. அப்போது தான் மனதுக்கு திருப்தி உண்டாகிறது . 

பலரது வலைப்பூ சென்று அவர்களது பதிவுகளை வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் நேரமின்மை காரணமாக நான் செல்வதில்லை. இருந்தும் நண்பர்கள் எனது தளம் வந்து எனது பதிவுகளையும் வாசித்து கருத்துகள் இடும் நண்பர்களுக்கு எனது நன்றிகளை இந்த தருணத்தில் கூற விரும்புகிறேன் .எனது பதிவு பத்திரிகையில் ஒரு நாள் வந்த போது எனக்கு பெரிய சந்தோசமாக இருந்தது எனது நண்பிகள் பலர் அதனை வாசித்து மகிழ்ந்து பாராட்டினார்கள் .

சுயமாக முன்னேறி , தன்னம்பிக்கையுடன் இவ்வளவு பதிவுகளை இட்டதை இட்டு நான் பெரிதும் சந்தோசப்படுகிறேன் . மகிழ்வான தருணங்களில் என் வாழ்வில் வலைப்பூவுக்கும் ஒரு பங்குண்டு . 

உங்களுக்கும் "மகிழ்வான தருணங்கள் " என்ற தலைப்பில் எழுத விரும்பினால் உங்களுடைய வலைப்பூவில் எழுதுங்கள் நண்பர்களே . 

6 comments:

'பரிவை' சே.குமார் said...

அழைப்பினை ஏற்று தொடர்பதிவை எழுதியமைக்கு நன்றி.

அழகான தருணங்களை எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

சுயமாக முன்னேறி , தன்னம்பிக்கையுடன் இவ்வளவு பதிவுகளை இட்டதை இட்டு நான் பெரிதும் சந்தோசப்படுகிறேன்

வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

சுயமாக முன்னேறி , தன்னம்பிக்கையுடன் இவ்வளவு பதிவுகளை இட்டதை இட்டு நான் பெரிதும் சந்தோசப்படுகிறேன் . மகிழ்வான தருணங்களில் என் வாழ்வில் வலைப்பூவுக்கும் ஒரு பங்குண்டு .


வாழ்த்துகள்..!

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி ஈஸ்வரி அவர்களே