Thursday, January 8, 2015

என்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......




நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இருந்து புன்சிரிப்பு ஒன்றை கொடுக்கும் போது அந்த சந்திப்பு ஒரு சந்தோசமான சந்திப்பாக அமைகிறது .

எப்போதும் நமது முகத்தை கோபக்காரர் போலே வைத்து இருக்காமல் சந்தோசமாக வைத்து இருக்க வேண்டும் . எந்த நேரமும் புன்னகை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் , தேவையான நேரங்களில், சந்தர்ப்பங்களில் உங்களது புன்னகையை தவள விடுங்கள் . அப்போது தான் உங்களுக்கு அந்த புன்னகையின் மதிப்பு தெரியும் .

நாம் புன்னகை சிந்துவதால் எப்போதும் நமது மனதில் ஒரு தைரியம் ஏற்படுகிறது . நமக்கு எதிரிகளை விட நண்பர் கூட்டம் அதிகம் இருக்கும். அன்பாலே சேர்ந்த கூட்டமாக இருக்கும். எல்லோருடனும் சந்தோசமாக நாம் இருக்கும் போது நாமும் சந்தோசமாகவும், மற்றவர்களும் சந்தோசமாகவும் இருப்பார்கள் . அது எல்லோராலும் முடியாது . சிலரால் மட்டுமே முடியும்.


நாம் சந்தோசமாக இருக்கும் போது நமது இதயத்துடிப்பு சீராகிறது . மனதில் எமக்கு அழுத்தங்கள் குறைகின்றது . ஒரு நம்பிக்கை உண்டாகிறது . தன்னபிக்கை எமக்கு ஏற்படுகிறது . நாம் சந்தோசமாக இருக்கும் போது எமது முகமும் இளமை தோற்றத்துடன் காணப்படுகிறது . எமது உடலுக்கும் ஒரு ரிலாக்ஸ் கிடைக்கிறது . அது மட்டுமா சந்தோசமாக புன்னகை சிந்துபவர்களுக்கு ஆயுள் காலமும் அதிகம். இவ்வளவு இருக்கிறது நாம் எமது முகத்தில் புன்னகை சிந்துவதால் .

எப்போதும் சந்தோசமாக இருப்போம் . புன்னகை சிந்துவோம் .



2015 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி .........



2014 ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து 2015 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம் . உலகெங்கிலும் அனைத்து மக்களும் சந்தோசமாக புதிய ஆண்டை வரவேற்றுள்ளோம் . உலகில் இயற்கை அனர்த்தங்களும், சண்டைகள், சச்சரவுகள் என்று மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது . எப்படி இருப்பினும் ஒவ்வொரு ஆண்டையும் நாம் அனைவரும் சந்தோசமாக வரவேற்கின்றோம் .

ஒவ்வொரு ஆண்டும் எல்லோரும் பல திட்டங்கள், யோசனைகளை மனதில் தீட்டி வைத்து இருப்பார்கள் . எல்லோருடைய எண்ணங்களும் ஈடேற வேண்டும். எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் எண்ணம் .

இறை பிரார்த்தனை எல்லோருக்கும் மிக முக்கியம் . அடுத்து மனதை ஒரு நிலைப்படுத்தல் . அதாவது யோகா அல்லது தியானம் . உடல்பயிற்ச்சி . நாம் சாப்பிடுகின்ற உணவுகள் சீரான இடைவெளியில் இருக்க வேண்டும். அவை சமிபாடு அடைய வேண்டும். துரித உணவுகளை உண்டு பலவித நோய்களை நாம் தேடி கொள்கின்றோம். கூடுமானவரை இயற்கை உணவுகள் உண்பது நல்லது. காய்கறி வகைகள் உடம்புக்கு நல்லது . நமது உடல்நிலையும் ஒவ்வொரு வருடமும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்டு ஒன்று போகும் போது வயது ஒன்றும் போகும் தானே .

எல்லோருக்கும் இனிய ஆண்டாக , சந்தோசமான ஆண்டாக 2015 ஆம் ஆண்டு அமையட்டும் .

Monday, May 19, 2014

நம் கவலைகள் அழும்போது தீர்கின்றன




எல்லோர் மனதிலும் ஏதாவது ஒன்றை பற்றிய கவலைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் இருக்கும் . மனிதன் சந்தோசம் வரும் போது சிரிக்கின்றான், கவலை வரும் போது அழுகிறான் . 

ஒரு கவலை முடிய இன்னொரு கவலை வரும் . கவலைகள் தீர்வதில்லை . மாறாக துன்பங்களையே தந்து கொண்டு இருக்கின்றன . எதையுமே மனம் விட்டு பேச வேண்டும். நாம் அடக்கி அடக்கி வைத்து நம் கவலைகளை நமக்குள்ளே வைத்து புதைத்து வைத்து இருந்தோமானால் நாம் நோயாளியாகி , மன நோயாளியாகி கூட போகும் நிலைமை வந்து விடுகின்றது .

துன்பங்கள் வரும் போது மனது சஞ்சலம் அடைகின்றது . மனதை திடம் படுத்துகின்றோம் . முடியவில்லை . நான்கு பேரிடம் சொல்கின்றோம் முடியவில்லை . நம் கவலைகளை இன்னொருவருடன் சொல்லி அழும்போது நமது மனமும் இலேசாகின்றது . கவலையும் குறைகின்றது . 
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகின்றது . அது போல் மனதில் உள்ள பாரத்தை குறைக்க மனம் விட்டு பேசி அழுங்கள் , துன்பம் குறையும் . மனதும் இலேசாகும் . 

எனக்கு பிடித்த பாடல்



மனதை கவரும் வரிகள், இதமான ரகுமானின் இசை , கபிலனின் பாடல் வரிகளில் , விஜய் பிரகாஷ் , சுவேதா ஆகியோர் இணைந்து மரியான் படத்துக்காக பாடிய பாடல் .எல்லோருக்கும் பிடித்த பாடலும் கூட . 




இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இபோ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இபோ மழை போல நீ வந்த கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

 இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வளைய விட்டு வளைய விட்டு வலயவிட்டாய
 நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல
வந்த உன் கையுல மாட்டிக்குவேன் வலையல போல
உன் கன்னுகேத்த அழகு வர காத்திருட கொஞ்சம்
உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நேரையுமே
இந்த மீன் உடம்பு வாசனை
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நீ என் கண்ணு போல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும்.

Tuesday, January 21, 2014

எனக்கு பிடித்த பாடல்

எனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடித்து இருக்கிறது. அழகான மனதை மயக்கும் குரல்கள் , வரிகள், இசை .
  
Singers: Chinmayi, Nivas, Abhay Jodhpurkar
Movie: Naveena Saraswathi Sabatham
Music: Prem Kumar
Lyrics: Vairamuthu

பெண் : காத்திருந்தாய்   அன்பே 
எந்தன்  காதல்  நீதானே .
ஒரு  லட்சம்  விண்மீன்  மழையாய் பொழிகிறதே .

காத்திருந்தாய்  அன்பே
எந்தன்  காதல்  நீதானே .
ஒரு  லட்சம்  விண்மீன்  மழையாய் பொழிகிறதே .


உன்   விழியால்  அன்பே  என்னை 
உருக  செய்தாயே 
என்  சீனிக்  கண்ணீர்  உன்மேல் விழுகிறதே .

கடலோடு   சேரும்  வான்  மழைத்துளி  போல் 
உன்  கண்ணோடு  மணியாக  கலந்திருப்பேன் .
உடலோடு  ஒட்டி  செல்லும்  நிழல்களை  போல் 
நான்  உன்னோடு  பின்னோடு  தொடர்ந்திருப்பேன் .

ஆண்: உன்னாலே    அடி நெஞ்சில்  , அடி  பூகம்பம் 

பெண் :பூக்களை திறக்குது  காற்று 
புலன்களை  திறக்குது  காதல் 
முடிந்ததும்  மறையுது  ஊடல் 

காதல்   செய்வோம் ,
ஒருமுறை  மலர்வது  காதல் .
இருவரும்  கலந்தபின்  தேடல் 
முதலது  முடிவது  காதல் .

காதல்  செய்வோம் 
காத்திருந்தாய்  அன்பே 
நான்  பூத்திருந்தேன்  முன்பே  (2)

காத்திருந்தாய்  அன்பே 
எந்தன்  காதல்  நீதானே .
ஒரு  லட்சம்  விண்மீன்  மழையாய் பொழிகிறதே .

நீ  சொல்லிய  மெல்லிய   சொல்லில் 
என்  தலை  சொர்க்கத்தை முட்டுதடி 
நீ  சம்மதம்  சொல்லிய  நொடியினில்  ஆண்டுகள் 
மொத்தமும்  அழியுதடி.

என்  ஆவலை  வாழவைத்தாய்
என்  ஆயுளை  நீள  வைத்தாய் 
நீ இதயத்தை  எடுத்துகொண்டாய்
உன்  புன்னகை  தேசத்தை  பரிசளித்தாய் .

காதலனே  உன்னை  துடிக்கவிட்டேன்,
கண்களை  வாங்கிகொண்டு  உறங்கவிட்டேன்.
என்  உயிரே , உன்  அன்பு  மெய்  என்று உணர்ந்துவிட்டேன் 

அடி  பெண்ணே  உன் வலியெல்லாம் நான்   இருந்தேன் 
இனி  நீ  போகின்ற  வழியாக  நான்  இருப்பேன் 
சம்மதித்தேன்   உன்  அன்பில் சங்கமித்தேன்

உன்னாலே அடினெஞ்சில்  அடி  பூகம்பம் 

ஹே   செங்குயிலே  சிறுவெயிலே
சிற்றகலெ ஐ   லவ் யு .
ஹே  பொற்பதமே , அற்புதமே 
சொப்பனமே  ஐ லவ் யு 

காத்திருந்தாய் அன்பே 
எந்தன்  காதல்  நீதானே .
ஒரு  லட்சம்  விண்மீன் மழையாய்  பொழிகிறதே .

உன்   விழியால்  அன்பே  என்னை 
உருக  செய்தாயே 
என்  சீனிக்  கண்ணீர்  உன்மேல் விழுகிறதே .

கடலோடு   சேரும்  வான்  மழைத்துளி  போல் 
உன்  கண்ணோடு  மணியாக  கலந்திருப்பேன் .
உடலோடு  ஒட்டி  செல்லும்  நிழல்களை  போல் 
நான்  உன்னோடு  பின்னோடு  தொடர்ந்திருப்பேன் .

உன்னாலே அடினெஞ்சில்  அடி  பூகம்பம் 

பூக்களை   திறக்குது  காற்று 
புலன்களை  திறக்குது  காதல் 
முடிந்ததும்  மறையுது  ஊடல் 


காதல்   செய்வோம் ,
ஒருமுறை  மலர்வது  காதல் .
இருவரும்  கலந்தபின்  தேடல் 
முதலது  முடிவது  காதல் .
காதல்  செய்வோம் 

காத்திருந்தாய்  அன்பே 
நான்  பூத்திருந்தேன்  முன்பே  (2)

Wednesday, January 8, 2014

சென்ற வருடத்தை விட இவ்வருடம் உங்களது திட்டங்கள் என்ன ?



ஒவ்வொரு வருடங்களிலும் நாம் சாதித்தவை, சாதிக்க இருப்பவை என பட்டியல் இடுகின்றோம். அவற்றில் சில நடக்கிறது . பல நடக்காமல் மற்றைய வருடத்தில் பார்த்து கொள்ளலாம் என எம் மனம் நினைக்கிறது .
நாம் ஒவ்வொரு திட்டங்களை வகுக்கிறோம். சில எளிதில் நடைபெறுகிறது. சில விடயங்களுக்கு அதிக சிரத்தை எடுக்க வேண்டி இருக்கிறது . எதிலும் திட்டமிடல் அவசியம். அதனை திட்டமிட்டால் மட்டும் போதாது . அவற்றை செயல்படுத்தும் திறனுமிருக்க வேண்டியது அவசியம் .

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் , பேச்சும் , எழுத்தும் எவ்வளவோ முக்கியமானது. நாம் எப்போதும் எமது வளர்ச்சி பாதையில் முன்னோக்கி செல்லல் வேண்டுமே தவிர பின்னோக்கி செல்ல கூடாது . எமது பேச்சு, செயல் என்பன ஒவ்வொரு வருடங்களும் முன்னேற்றம் இருக்க வேண்டும். 

இந்த வருடம் எமது சேமிப்பு, வாழ்க்கை , பொருளாதாரம் மேம்பட வேண்டும் என எண்ணுகிறோம். அவற்றை நடைமுறை படுத்த திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். எண்ணிய கருமங்கள் நடக்க வேண்டும் என இறைபிரார்த்தனை முக்கியம். 

நல்ல வேலை கிடைக்க வேண்டும். சந்தோசமாக இருக்க வேண்டும், மற்றையவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், உறவினர்கள் , நண்பர்களோடு சந்தோசமாக இருக்க வேண்டும். வீணான பேச்சுகளை குறைக்க வேண்டும். அடுத்தவர் மனம் புண்படும் படியாக பேச கூடாது என்று பல பல எண்ணங்கள் நம் மனதில் தோன்றும் . அவற்றை எல்லாம்  நாம்  செயல்படுத்த வேண்டும். 


இவ்வருடம் எல்லோருக்கும் இனிமையான, சந்தோசம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திப்போமாக!

Thursday, August 8, 2013

ஆசை இருக்கலாம் , பேராசை கூடாது


 

மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கும் . ஆசைகள் வேறுபட்டு காணப்படும் . ஒருவருக்கு கார் வாங்க பிடிக்கும், இன்னொருவருக்கு மோட்டார்சைக்கிள் வாங்க பிடிக்கும் . நமது ஆசை ஒன்று நிறைவேறி விட்டால் மனம் இன்னொரு ஆசைக்கு ஏங்கும் . அதுதான் மனிதனது சுபாவம் . 

ஆசைகள் இருக்கத்தான் வேண்டும் . அதுவே நமக்கு இயலாத , நடக்காத விடயங்களுக்காக ஆசைப்பட கூடாது . அவன் பெரிய பங்களா கட்டுகிறான் . அவனைப்போல நானும் கட்ட வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டால் அது நம்மால் முடியுமா ? என சற்று ஜோசிக்க வேண்டும் . அவனிடம் அவ்வளவு பணம் இருக்கிறது செலவழிக்கிறான் . நம்மால் முடியுமா ? நமக்கு ,ஏற்ற  நமது தகுதிக்கு ஏற்ற, சாத்தியமானவற்றுக்கு ஆசைப்படலாம் . நமது விரலுக்கு ஏற்ற வீக்கம் . அதுபோல தான் நாமும் வாழ பழக வேண்டும். 

பெண்களுக்கு பெண்கள் ஆசைபடுவது கூடுதலாக நகை, உடை விடயத்தில் தான் . அது பேராசையாகவும் மாறுகிறது . சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுகிறோம் . நாம் 5 பவுண் சங்கிலிக்கு ஆசைப்படலாமா ?இல்லை . அவள் என்ன அழகான சாறி கட்டி இருக்கிறா பாருங்க . ஐயோ அது எவ்வளவு விலையா இருக்கும் என மனம் முனுமுனுக்கும் . நாம் பார்த்து ரசிக்கலாம் . ஆனால் வீட்டுக்கு சென்று அன்றாடம் தொழில் செய்யும் ஒருவரிடம் அந்த சாறி வாங்கி தர சொன்னால் அவரால் அது முடியுமா ? சற்று பெண்கள் சிந்திக்க வேண்டும். உடனே நான் கேட்டது வாங்கி தர மாட்டீங்க என சண்டை தொடங்கி  விடுகிறது. 

கட்டிய வீட்டிலும், உடுத்தும் உடைகளிலும், வாழ்கின்ற வாழ்விலும் சரி, இருப்பதை வைத்து நாம் திருப்தி அடைவதில்லை . இல்லாத ஒன்றுக்காக ஆசைப்படுகிறோம் . அதுதான் பேராசைபடுகிறோம் . மற்றவர்களிடம் இருக்கும் , அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள் மீது மனம் ஆசைப்படுகிறது . ஏனையோரிடம் நாம் நம்மை ஒப்புடுகிறோம் . அவர்களது ஆடம்பரமான வாழ்க்கை எம்மையும் அதில் ஈடுபட வைக்கிறது .

நாம் எப்போதுமே நமக்கு மேல் வர்க்கத்தில் இருப்பவர்களுடன் ஒப்புடுவதை விட்டு விட்டு நமக்கு கீழே இருக்கும் வர்க்கத்தை நினைத்து பார்க்க வேண்டும் . நாம் இப்படியாவது இருக்கிறோமே . கடவுள் நம்மை அன்றாட சாப்பாட்டுக்கு , நமது தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு எம்மை வைத்திருக்கிறாரே என நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டுமே தவிர மேல்தட்டு வர்க்கத்தினரை பார்த்து பேராசைபடவோ , பொறாமைபடவோ கூடாது . 

எனவே எமக்கு ஆசை இருக்க வேண்டும். அதுவே பேராசையாக இருக்க கூடாது . 

Wednesday, August 7, 2013

மகிழ்வான தருணங்கள் (தொடர் பதிவு )




நாம் பிறந்ததில் இருந்து இறக்கும் வரைக்கும் எமக்கு பல புதிய விடயங்கள் , சந்தோசங்கள் துக்கங்கள் வந்து போகின்றன அப்படி பல மகிழ்வான தருணங்கள் பல எல்லோர் வாழ்க்கையிலும் வந்து போகின்றன. இன்னும் பல மகிழ்வான தருணங்கள் எல்லோருக்கும் , என் வாழ்விலும் இனியும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டு விடயத்துக்கு வருகிறேன். 

 நண்பர்  குமார் ஒரு தொடர் பதிவாக "மகிழ்வான தருணங்கள் " எனும் தலைப்பில் என்னையும் ஒருவராக இணைத்து உள்ளார் அவருக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் .எல்லோருக்கும் இப்போதெல்லாம் வீட்டு விலாசம் இருக்கோ இல்லையோ பேஸ்புக் விலாசம் கட்டாயம் இருக்க வேண்டும். சக நண்பர்களோடு பேசினாலோ , பழகினாலோ முதலில் உன்னுடைய பேஸ்புக் ஐடி என்ன என்று தானே கேட்கிறார்கள் .அப்படி இல்லாவிட்டால் உன்னிடம் பேஸ்புக் இல்லையா ? என்று கேட்டு ஏளனமாக சிரிக்கிறார்கள் காலம் மாறிப் போச்சு தானே. நாமும் மாறித்தான் ஆக வேண்டும். 

நான் பேஸ்புக் ஆரம்பித்ததில் எனக்கும் பல நண்பர்கள் கிடைத்தார்கள் . அவர்கள் என்னுடன் படித்த பழகிய நண்பர்கள், உறவினர்கள்  என பலர் இருக்கிறார்கள் . எனது பிறந்தநாள் என்றதும் வாழ்த்துக்கள் வந்து குவிந்து இருக்கும் . அப்போது அது ஒரு சந்தோசமாக இருக்கும். எல்லோருக்கும் பொறுமையாக இருந்து நன்றி தெரிவிப்பேன் .

பத்து வருடம் கழித்து எனது நண்பி எப்படி இருக்கிறாள் என்று பேஸ்புக் இருக்கிற படியால் கண்டு பிடிக்க முடிகிறது. அவர்களுடன் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. பழைய யாபகங்களை மீட்டி பார்ப்பது என பல சந்தோசமான சம்பவங்கள் நடைபெற்றன .

பல மகிழ்வான தருணங்கள் இருந்தாலும் வலைப்பூவில் நமது சந்தோசத்தில் அதற்க்கும் பங்கு உண்டு தானே. அதனால் அந்த தருணங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .எனக்கு யாருமே வலைப்பூவில் இப்படி எழுதணும், எழுதக்கொடாது என்று யாருமே சொல்லித்தரவுமில்லை யாரிடமும் கேட்டதும் இல்லை. சிலரின் வலைப்பூவை பார்த்து இவர்கள் எப்படி எழுதுகிறார்கள் , எப்படி ஆரம்பிப்பது என்றெல்லாம் நினைத்தேன் . பின்பு வலைப்பூ எப்படி ஆரம்பிப்பது, எழுதுவது என்பது பற்றி தேடி ஆறைந்து பல விடயங்களை வாசித்து அறிந்தேன் அதன் பின்பு நானாகவே உடனே வலைப்பூ  ஒன்றை ஆரம்பித்து உடனே ஒரு பெயரை "இது பவியின்  தளம் துளிகள்" என்று ஆரம்பித்து முதலில் சின்ன சின்ன கவிதைகள் எழுதினேன். நண்பர்கள் நன்றாக இருக்கிறது தொடருங்கள் என்று ஊக்கம் அளித்தார்கள் .

அதன் பின்பு நான் கவிதை என்ற வட்டத்தில் நிக்காமல் பல விடயங்கள் , பல தலைப்புகளில் கட்டுரைகள், கவிதைகள் , பிடித்தபாடல் வரிகள் , நான் ரசித்தவை போன்ற விடயங்களை எழுதி பலரும் வாசித்து பயனடைய வேண்டும் என்று பல பதிவுகளை எழுதினேன். பல விடயங்களை வாசித்து அறிந்து அவற்றை எல்லோருக்கும் புரியும்படியும் விளங்கும்படியும் பதிவுகளை எழுதுவேன். 

பல நண்பர்கள் என் தளத்துக்கு வந்து செல்வார்கள். கருத்துகளையும் கூறுவார்கள் . சிலர் எனக்கு ஆலோசனைகளையும் கூறுவார்கள் . அவற்றை செவிமடுத்து குறைகள் வராமல் எழுத எண்ணி எழுதிக் கொண்டு இருந்தேன் முன்னைய ஆண்டுகள் போல் இப்போதெல்லாம் பதிவுகள் நான் இடுவது குறைவாகி விட்டது. நேரமின்மை தான் காரணம். எனினும் கிடைக்கும் நேரங்களை வீணடிக்காமல் ஏதாவது ஒரு பதிவாயினும் போடா வேண்டும் என நினைத்து எழுதுவதும் உண்டு. அப்போது தான் மனதுக்கு திருப்தி உண்டாகிறது . 

பலரது வலைப்பூ சென்று அவர்களது பதிவுகளை வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் நேரமின்மை காரணமாக நான் செல்வதில்லை. இருந்தும் நண்பர்கள் எனது தளம் வந்து எனது பதிவுகளையும் வாசித்து கருத்துகள் இடும் நண்பர்களுக்கு எனது நன்றிகளை இந்த தருணத்தில் கூற விரும்புகிறேன் .எனது பதிவு பத்திரிகையில் ஒரு நாள் வந்த போது எனக்கு பெரிய சந்தோசமாக இருந்தது எனது நண்பிகள் பலர் அதனை வாசித்து மகிழ்ந்து பாராட்டினார்கள் .

சுயமாக முன்னேறி , தன்னம்பிக்கையுடன் இவ்வளவு பதிவுகளை இட்டதை இட்டு நான் பெரிதும் சந்தோசப்படுகிறேன் . மகிழ்வான தருணங்களில் என் வாழ்வில் வலைப்பூவுக்கும் ஒரு பங்குண்டு . 

உங்களுக்கும் "மகிழ்வான தருணங்கள் " என்ற தலைப்பில் எழுத விரும்பினால் உங்களுடைய வலைப்பூவில் எழுதுங்கள் நண்பர்களே . 

Monday, August 5, 2013

உறவுகள் அனைவரும் அன்புடன் இருக்க வேண்டும்



முன்னைய    காலங்களில் எல்லாம் உறவுகள் ஒன்றோடொன்று சந்தோசமாகவும் , அன்பாகவும் , ஒற்றுமையுடனும் இருந்தார்கள் . பின்பு போகப்போக அவை அனைத்தும் குறைந்து போய் உறவுகள் குறைந்து நண்பர்கள் , அயலவர்கள் தான் அவசரத்துக்கு உதவும் துணையாக மாறி விட்டனர் .

அவசர உலகில் இன்று யாருடைய உறவினர் இவர் என்று கேட்கும் நிலைமை தான் உள்ளது . அண்ணனை தம்பியின் மகளுக்கு தெரியாது . மாமியை மருமகளுக்கு தெரியாது , தம்பிக்கு அக்காவின் கணவரை தெரியாது . இப்படி இருக்கிறது உலகம் . 

ஒவ்வொரு உறவினரும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறார்கள் . ஒருவருடன் பேசி , சந்தோசமான தருணங்களான கல்யாணம் , பிறந்தநாள் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு போய் வந்தால் தான் அவர்களுக்கு உறவுகளின் அன்பு, பாசம் புரியும் . 

சிறு சிறு விடயங்களுக்காக உறவுகள் சண்டை போட்டு கொண்டு பிரிவது சகயமாகி விட்டது . அத்துடன் ஒருவருக்கொருவர் பொறாமைபடுவதும் அதிகமாகி விட்டது . என்னை விட அவன் சந்தோசமாக , நல்லா இருக்கிறான் என்று பொறாமைப்படுவது கூடாது . குழந்தைகள் தவறு செய்தால் அந்தந்த பெற்றோர்கள் அதை உடனுக்குடன் கண்டித்து சரி செய்ய வேணும், இதனால் பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்ந்து ஒருவரை ஒருவர் சரிசமமாகக் கருதி வளருவார்கள்.

குடும்பம் என்றால் சண்டை, சச்சரவுகள் வரத்தான் செய்யும் . அவற்றை தீர்த்து வைப்பவர்கள் உறவுகள் தான் . அவர்களை சமாதானப்படுத்தி , பிரச்சனைகளை தீர்த்து வைப்பது உறவுகளின் கடமை. விட்டுகொடுப்பு மிகவும் அவசியம் .

உறவுகள் பலர் ஒன்றுகூடி சுற்றுலா சென்று வந்தால் உறவுகள் வலுப்படும் . உணவகங்களில் ஒன்றாக கூடி விருந்து உண்பது போன்ற விடயங்களில் ஈடுபடும் போது ஒருவருக்கொருவர் பேசி ஒவ்வொருவருடைய இன்ப துன்பங்களில் கலந்து கொள்ளும் போது மகிழ்ச்சி உண்டாகிறது . நமது சொந்தங்கள் விட்டு போகாது தொடரும் . 




Wednesday, July 31, 2013

எனக்கு பிடித்த பாடல்


"எங்கே எனது கவிதை" என்ற படத்தில் இருந்து உன்னிகிருஷ்ணன் பாடிய "இருமனம் சேர்ந்து ஒருமனம்" பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் . அழகான வரிகள் . 


இருமனம் சேர்ந்து ஒருமனம் ஆகும் திருமணம் இன்று 
இரு உயிர் சேர்ந்து ஓருயிர் ஆகும் ஒத்திகை இன்று 
உனக்கென ஒரு சொந்தம் இன்று தான் ஆரம்பம் 
உனக்கதில் ஆனந்தம் அதுவே  என்னின்பம் 
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ 
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ 
ஓ .....இறைவன் போடும் கட்டளை இதுதான் 
வாழ்க்கை எனும் புத்தகம் இதுதான் 
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ 
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ 

யாருக்கு யார் என்று எழுதியதை
 இன்றுதான் உலகம் அறிந்துகொள்ளும் 
பாதியில் வந்த சொந்தம் ஒன்றே
உயிர்விடும் வரையில்   கூட வரும்  
உறவுகளின் மத்தியில் நின்று 
புது உறவு பூப்பதைக் கண்டு 
நாணமது  கண்களில் கண்டு 
கரைகிறது காதலாய் இன்று 
வாழைமரம் தோரணம் கட்ட 
வாழ்த்துக்களை வார்த்தையாய் கொட்ட 
வண்ண மலர் மாலைகள் கட்ட 
வசந்தம் வரும் வாசலை தட்ட 
ஆனந்த திருநாள் ஆரம்பம் இன்று 
வாழ்க வாழ்க வாழ்கவே  (இருமனம் )

ஆயிரம் கனவுகள்  இதயத்திலே 
அலைபாயும் சுகம் தான் தெரியுதடா 
தூரத்தில் இருந்த காதலியே 
மணவறை  வந்தால் மகிழ்ச்சியடா 
அன்னைக்கொரு மாற்று என்று 
மனைவிக்கொரு பேரும்  உண்டு 
உனக்கும் அது பொருந்தும் இன்று
 உன்னைகொடு அவளுக்கென்று 
உறவுகளின் உற்ச்சவம் இன்று 
உலகம் அதை  வாழ்த்திடும் இன்று 
அன்பு எனும் அர்ச்சனை கொண்டு
 வாழ்த்துகிறேன்  நானும் இன்று 
ஆயுளை கூட பருசாய் தருவேன் 
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ (இருமனம் )