Tuesday, October 27, 2009

அழகான சுவிஸ்



எதனை பற்றி எழுதுவது என்று   யோசித்து கொண்டு  இருக்கும்  போது அப்பத்தான் என்னுடைய நண்பி ஒருவர் சுவிஸ் போய் வந்து அங்குள்ள புதினங்கள் , சுவிஸ் நாட்டின் அருமை , பெருமைகளை சொன்னார். எனக்கு அவர் சொன்னத கேட்டு அப்பிடியா ? என்று கேட்டேன் . எனக்கும் போகணும் போல இருக்கு . எனது நண்பி  தந்த  தகவல்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் .



உலகில் மிகவும் புகழ்பூத்த , அமைதியான நாடாக சுவிஸ் விளங்குகிறது . சுவிசின் இயற்கை எழிலையும் , அமைதியையும் , அழகையும் விரும்பாத எந்த மனிதனும் இருக்க முடியாது .


சுவிட்சர்லாந்து    ஆல்ப்ஸ் மலையால் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு. வடக்கில் ஜேர்மன், மேற்கில் பிரான்ஸ்  தெற்கில் இத்தாலி, கிழக்கில் ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள் சுவிஸின் எல்லைகளாக உள்ளன. சுவிஸ் வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.


உலகில் சுத்தம் என்றால் சுவிஸை முதலாம் இடத்திலும் சிங்கப்பூரை இரண்டாவது இடத்திலும் சொல்லலாம் . பசுமை நிறைந்த புல்வெளி, பூஞ்செடிகள் பூங்காக்கள் ,  ஒழுங்கு வரிசையில் ஊன்றப்பட்ட  பெரு மரங்கள் , மின்னிடும் பனி படர்ந்த தொடர் மலைகள் என அழகோ அழகு .

 
உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடாக சுவிஸ்  விளங்குகிறது. இங்கு அரசமொழிகளாக ஜேர்மன், பிரெஞ்சு,இத்தாலியம், ஆகிய மொழிகள் உள்ளன. சூரிச் , பேர்ன் , ஜெனீவா , லிஎச்டல், சயன்,  என பல நகரங்கள் உண்டு .

 

தற்போது சுவிஸ் 26 மாநிலங்களை தன்னகத்தே கொண்ட நாடாகவும் உள்ளது .ஆகஸ்டு 1ம்  திகதியை  தேசிய விடுமுறையாக கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது . இவ்வருடமும் தனது 718 ஆவது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடியது .



உலகில் நிலத்தினால் சூழப்பட்ட 43 நாடுகளில் சுவிஸும் ஒன்றாகும். இதன் தலைநகரம் பேர்ண்.  இங்கு தான் சுவிஸ் நாடாளுமன்றம் அமைந்துள்ளது . நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 200  ஆகும் . மிகப்பெரிய நகர் சூரிச் ஆகும். பேர்ண் சமஷ்டி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் சூரிச் வர்த்த உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன.



அனைத்துலகத் தொண்டு நிறுவனமான உலக செஞ்சிலுவை சங்கம், உலக வர்த்தக அமைப்பு, ஐக்கிய நாடுகளின் காரியாலயம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

கைத்தொழில் முன்னேற்றம்  கண்ட நாடு . பால் உற்பத்தி , பட்டர் , சொக்லேட் , மணிக்கூடு , பாடசாலை உபகரணங்கள் என பல பொருட்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது . மணிக்கூடுகள் எல்லாம் நல்ல மணிக்கூடுகள் இங்கு வாங்கலாம் . நான் கட்டுவது சுவிஸ் மணிக்கூடு தான் . நீண்ட காலம் பாவிக்கலாம் .  சொக்லேட் நல்ல ருசி . ம்ம்ம் பிரமாதம் .



கோடை, மாரி காலங்களில்  எல்லோரும் தமது விடுமுறைகளை அமைதியாகவும், சந்தோசமாகவும் கழிக்க சுவிசுக்கு தான் வருகின்றார்கள் . நீர்வீழ்ச்சிகள் , ஆறுகள் என இயற்கை நிறைந்த எழில் மிக்க அழகு கொஞ்சும் இடமாகவும் சுவிஸ் விளங்குகிறது .


சுவிஸ் நாட்டின் பண அழகு பிராங்க். எல்லா ஐரோப்பிய நாடுகளும் யூரோவுக்கு மாற சுவிஸ் தன்னுடைய பண அலகை மாற்றாமல் இருந்து வருகிறது .

எனது நண்பி தந்த தகவல்களை பகிர்ந்து கொண்டேன் . எனக்கு நியூசிலாந்து பற்றி அறிய ஆர்வம் தான் . பார்போம் . இந்த அழகு இடங்களை எல்லாம் நாம் எப்போது காண்பது? பார்ப்போம் . காலம் வரும் வரை காத்து இருப்போம் .





2 comments:

தங்க முகுந்தன் said...

நன்றி! அருமையான கட்டுரை!

Kabilan said...

நான் வாழும் நாட்டை பற்றி படிக்கும் போது ஒரு சிரிப்பு தான். எதுவுமே பக்கத்திலிருக்கும்போது அதன் அருமை தெரியாது என்பார்கள்.
சுவிசில் மொத்தம் 4 அரச மொழிகள் உள்ளன. Rätoromanisch என்று ஒரு அரசமொழியும் உண்டு.