Tuesday, November 17, 2009

சந்தோசமான வாழ்வு




எல்லோருக்கும் சந்தோசமான வாழ்க்கை கிடைப்பதில்லை . ஏதாவது பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும் . சந்தோசமும் , துக்கமும் வாழ்வின் ஒரு பகுதி . எல்லாவற்றையும் தாங்கும் மனப்பக்குவம் நம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் . 


நாம் எல்லோரிடமும் அன்பாகவும் , சந்தோசமாகவும் பலகை வேண்டும் . நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் . மற்றவர்களை பற்றி பேசுவது , திட்டுவது என்பன கூடாத செயலாகும் . அதிகமாக கோபப்படவும் கூடாது . அப்பிடி கோபப்பட்டால் டென்சன் நமக்குத்தான் .
  

கணவன் மனைவியிடம் மனைவி கணவரிடம் விட்டுக்கொடுக்கும் மன  நிலை மாறி அன்பு காதல் மறக்கப்பட்டு இருவருக்குள் போட்டி போடும் நிலைதான் இன்றைய சமுதாயத்தின் சீர்கேடான வாழ்க்கையின் போக்கு ஆக மாறி விட்டது .

ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து  போனாலே போதும் அந்த வீட்டில் சந்தோசம் நிலவ .  சில தம்பதிகள் இன்றும் சந்தோசமாக வாழ்கின்றார்கள் . அதுக்கு ஒரே ஒரு காரணம் அவர்களின்
  புரிந்துணர்வும் விட்டுக்கொடுத்தலும் தான் .அசைக்கமுடியாத தன் நம்பிக்கை இருக்க வேண்டும் .

பிரச்சனைகளை சமாளித்து தியாகம் செய்து வாழ பழகுங்கள் . 
 

சந்தோசமான வாழ்க்கை அமைப்பது  கஸ்ரம்தான் இருந்தும் திருமண பந்தங்களுக்குள் புகுந்து கொண்டால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கணவரிடம் அன்பையும் காதலையும் கொடுத்து அவனின் நிலை அறிந்து உரையாடி பிரச்சனைகளை சமாளித்து வாழ வேண்டும் .

 

அதே போல் கணவனும் மனைவியை  துன்புறுத்தாமல் வேறுபாடு காட்டாமல் கோபத்தை கூட சமாளித்து அவளின் சரியான கடமைகளை கண்டு வியந்து பிழை இருந்தால் அன்பாக எடுத்து கூற வேண்டும் .

 


No comments: