Wednesday, December 2, 2009

கல்யாண பொருத்தம்




எமது தமிழ் கலாசார முறைப்படி திருமண பொருத்தம் என்பது எல்லோரும் பார்ப்பது தான் . அதாவது ஆணின் குறிப்பையும் பெண்ணின் குறிப்பையும் சேர்த்து பொருத்தம் பார்த்து முக்கியமான பொருத்தங்கள் இருவருக்கும் பொருந்தி 60% மேல் பொருந்தி இருந்தால் இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்று சோதிடர்கள் எழுதி தருகிறார்கள் . 



நாம் நினைக்கலாம் காதலிக்கும் எல்லோரும் இந்த பொருத்தங்கள் பார்த்து தானா காதலிக்கிறார்கள் . அவர்கள் என்ன பொருத்தம் பார்க்கிறார்கள் . ம்ம்ம்ம்ம்ம் அதுவும் உண்மை தான் . அவர்களது இரு மனங்களும் ஒன்று சேர்க்கிறது . அவர்களுக்கு மன பொருத்தம் சரியாக அமைந்தது என்று சொல்கிறோம் . எனினும் அவர்கள் இருவரும் சந்தோசமாக இருக்கும் போது ஒருவரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் . 



அவர்களுக்குள் பிரச்சனைகளும் , நோய் நொடிகளும் வந்து ஒரே சண்டை சச்சரவுகள் வந்து கொண்டு இருக்கும் ஆயின் அவர்கள் இருவரும் தமது குறிப்பை கொண்டு சோதிடர்களிடம் செல்வார்கள் . இது தான் இப்போது எல்லா இடங்களிலும் நடக்கிறது .





சோதிடர்களிடம் கொண்டு சென்றால் செவ்வாய் பிரச்சனைகளோ அல்லது லக்கின பிரச்சனையோ ஏதாவது ஒன்று இருக்ககூடும் . பின்பு அவற்றுக்கான பரிகாரங்கள் என்ன என்று கேட்டு அதற்கான பரிகாரங்களை செய்கிறார்கள் . சிலருக்கு பிரச்சனை தீர்கிறது . சிலருக்கு பிரச்சனை தீர்வதாக இல்லை .

சரி என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறார்கள் சோதிடர்கள் என்று பாப்போம் :
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருத்தங்கள் இரண்டும் பொருந்தினால் உத்தமம் என்றும் பொருந்தாவிட்டால் மத்திமம் என்றும் சொல்வார்கள் .உத்தமம் கூடுதலாக இருக்க வேண்டும் . அப்போது தான் முக்கிய பொருத்தங்களும் பொருந்தி பொருத்த வீதமும் கூட இருந்தால் கல்யாணம் செய்யலாம் .



1. கிரக பொருத்தம்
2.நட்ச்சத்திர பொருத்தம் - -  நோய் , பிணி இன்றி வாழல், ஆயுள் விருத்தி .
3. கண பொருத்தம் -அன்பு , இணக்கமாக இருத்தல் .
4. மகேந்திரம் - புத்திர விருத்தி
5. ஸ்திரி தீர்க்கம் - தீர்க்க சுமங்கலியாக இருத்தல் .
6. யோனிப் பொருத்தம் - அன்னியோன்னியமாக , இன்பமாக வாழ்க்கையில் இருத்தல் .
7. இராசி பொருத்தம் - வம்சா விருத்தி , நீடித்த ஆயுள் .
8. இராசியதிபதி - மன ஒற்றுமை
9. வசிய பொருத்தம் - இணை பிரியா சுகமான வாழ்வு , மகிழ்ச்சியாக இருத்தல் .
10இரச்சு பொருத்தம் - மாங்கல்ய விருத்தி
11. வேதை - கஷ்டங்களை தாங்கி மகிழ்வான வாழ்வு .
12. விருஷம் - வம்சா விருத்தி .
13. ஆயுள் - நீடித்த ஆயுள் வாழ்க்கை .
14. புத்திரர்-  புத்திர விருத்தி .
15. நாடி - சுக வாழ்வு .
16. கிரக பாவம் - பாவங்கள் .



இவை அனைத்தும் பார்க்கப்படும் .
இப்படி எல்லாம் விடயங்கள் இருக்குதப்பா . கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிரல்லவா ????





2 comments:

Anonymous said...

super pavi.............
so super................

Anonymous said...

kalyaana poruththankal ivvalavu undaa pavi......

naan seithathu love marriege thaan. problems vanthathukku appuram thaan chart parthen pavi.
neenka solvathu correct pavi.........