Friday, December 4, 2009

செவாக்கின் அதிரடி


இது எனது 100  ஆவது பதிவு . நானும் சதம் அடித்து விட்டேன்  என நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது . எனக்கு ஆதரவு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன் . எனது பதிவுகளுக்கு கருத்துரைத்தவர்களுக்கும் எனது நண்பர்களுக்கும் எனது தாழ்மையான நன்றிகள் . இன்னும் பல பதிவுகள் என்னிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கலாம் .






இந்திய அணியின் அதிரடி, தொடக்க நட்ச்சத்திரம் செவாக். அதிரடி என்றால் ஆஸ்திரேலியாவின் கில்லி என்று அழைக்கப்படும் கில்கிரிஸ்ட்க்கு அடுத்து செவாக் தான் என்று சொல்வேன் . கில்கிரிஸ்ட் ஒரு நாள் போட்டி தொடர்களில் சோபிபபார். செவாக் டெஸ்டில் அதிரடியில் சோபிபபார்.


இந்திய அணியின் தொடக்க நட்ச்சத்திரம் செவாக் 1978 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். 31 வயது ஆகும் செவாக் இன்னும் அதிரடி காட்டி பல கிரிக்கெட் ரசிகர்களை தன்னகத்தே கட்டி போட்டு உள்ளார் . அவரின் அதிரடிக்கு ஆகவே மைதானத்துக்கு ரசிகர்கள் கூட்டம் வருவதுண்டு . மட்டையை விசுக்கினால் 4 அல்லது 6 தான் பறக்கும் .


டெஸ்டில் 6000 ஓட்டங்களை கடந்து சாதனைகளை படைத்து வரும் இந்திய அணியின் சிங்கம் 16 தடவை சதம் பெற்று உள்ளார். 19 தடவை அரைச்சதம் பெற்றுள்ளார் .செவாக் நேற்று இலங்கைக்கு எதிராக பெற்று கொண்ட இரட்டை சதம் உலகிலே அதிக இரட்டை சதம் பெற்றவர்கள் வரிசையில் 4 ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். செவாக் இதுவரை 6 இரட்டை சதங்களை பெற்றுள்ளார்.  168 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டியுள்ளார் .இ​லங்​கைக்கு எதி​ராக மும்​பை​யில் நடை​பெற்று வரும் 3-வது டெஸ்​டில் ஏரா​ள​மான சாத​னை​களை வீரேந்​திர சேவாக் தன​தாக்​கிக் கொண்​டார். அதி​வே​க​மாக 6 ஆயி​ரம் ரன்​க​ளைக் குவித்த இந்​திய வீரர் என்ற பெரு​மை​யைப் பெற்​றார் அவர்.


இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 293 ஓட்டங்களை பெற்று முரளிதரனின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து சென்றார் . முச்சதத்தை 7 ஓட்டங்களால் தவற விட்டுள்ளார் . செவாககின் அதிரடியால் இப்போது இந்திய அணி 500 ஓட்டங்களை தாண்டி விளையாடி கொண்டு இருக்கிறது . இலங்கை அணிக்கு நெருக்கடி தான் . இந்த டெஸ்டிலும் வெல்வதற்க்கு.

 நிருபர்களுக்கு நேற்று விளக்கம் அளிக்கையில் செவாக் கூறியது;

2-ம் நாள் ஆட்​டத்​தில் சிறப்​பாக விளை​யா​டு​வேன் என்று எதிர்​பார்த்​தேன். அதைப் போலவே நான் விளை​யா​டி​னேன். நான் எப்​போ​தும்​போல எனது இயல்​பான ஆட்​டத்தை இன்​றும் வெளிப்​ப​டுத்​தி​னேன்.÷மு​ர​ளீ​த​ரன் பந்​து​வீச்சை அடித்து ஆடு​வதே சிறந்த தற்​காப்பு ஆட்​ட​மாக இருக்​கும் என்று நினைத்​தேன். அதைப் போலவே அடித்து விளை​யா​டி​னேன். 


அதற்கு நல்ல பலன் கிடைத்​தது.÷ஆ​டு​க​ளத்​தில் முர​ளீ​த​ரனை செட்​டி​லா​க​வி​டா​மல் அவ​ரது பந்​து​வீச்சை நொறுக்​கி​னேன். அவ​ரது பந்தை எதிர்​கொள்​வது சவா​லான விஷ​ய​மாக இருக்​கும்.    முர​ளீ​யைப் போன்ற மிகச்​சி​றந்த ஸ்பின் பெüலர்​களை எதிர்த்து ஆடும்​போது அவர்​க​ளது பந்தை அடித்து ஆட​வேண்​டும்.÷இ​தை​ய​டுத்து அவரை ஆதிக்​கம் செலுத்​த​வி​டா​மல்,​ அவ​ரது முதல் பந்தி​லி​ருந்தே நான் அவர் மீது ஆதிக்​கம் செலுத்​தி​னேன்.    ஆம​தா​பாத்,​ கான்​பூ​ரில் மிகப்​பெ​ரிய இன்​னிங்ஸ் ஆட வாய்ப்பு கிடைத்​தும் அதை நழு​வ​விட்​டேன். இந்த முறை அதை செய்ய விரும்​ப​வில்லை. இன்று என்​னு​டைய நேர​மாக இருந்​தது என்று கூறினார் .




டெஸ்ட் போட்​டி​க​ளில் ஒரே நாளில் அதிக ரன்​கள் குவித்​த​வர் என்ற பெரு​மை​யை​யும் வீரேந்​திர சேவாக் பெற்​றார். மும்​பை​யில் இலங்​கைக்கு எதி​ராக நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​யின் 2-ம் நாள் ஆட்​டத்​தில் கள​மி​றங்​கிய சேவாக் ஒரே நாளில் 284 ரன்​கள் குவித்து தனது சாத​னையை தானே முறி​ய​டித்​தார்.இ​தற்கு முன்​னர் கடந்த ஆண்டு மார்ச்​சில் சென்​னை​யில் தென்​னாப்​பி​ரிக்​கா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அவர் ஒரே நாளில் 257 ரன்​கள் குவித்​தார். 2-ம் நாள் ஆட்​டத்​தில் அவர் மொத்​தம் 319 ரன்​கள் சேர்த்து அவுட்​டா​னார்.



சிங்கம் ஓய்வு  எடுக்கும் காட்சி 


 
செவாக் இன்னும் அதிரடியாக விளையாட வேண்டும் . பல இரட்டை சதங்களை பெற வேண்டும் என நானும் அவரது ரசிகையாக இருந்து வாழ்த்துகிறேன் .

4 comments:

sathishsangkavi.blogspot.com said...

உங்க செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் பவி.........

சேவாக் அடுத்த டேஸ்ட்ல 400 அடிப்பார்னு
நம்பிக்கை இருக்கு.......

Pavi said...

நன்றி சங்கவி .
எனக்கும் அதுதான் ஆசை

தேவன் said...

உங்க சதத்துக்கு வாழ்த்துக்கள்!!

Pavi said...

உங்களது வாழ்த்துக்கு
எனது நன்றிகள்