இது எனது 100 ஆவது பதிவு . நானும் சதம் அடித்து விட்டேன் என நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது . எனக்கு ஆதரவு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன் . எனது பதிவுகளுக்கு கருத்துரைத்தவர்களுக்கும் எனது நண்பர்களுக்கும் எனது தாழ்மையான நன்றிகள் . இன்னும் பல பதிவுகள் என்னிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கலாம் .
இந்திய அணியின் அதிரடி, தொடக்க நட்ச்சத்திரம் செவாக். அதிரடி என்றால் ஆஸ்திரேலியாவின் கில்லி என்று அழைக்கப்படும் கில்கிரிஸ்ட்க்கு அடுத்து செவாக் தான் என்று சொல்வேன் . கில்கிரிஸ்ட் ஒரு நாள் போட்டி தொடர்களில் சோபிபபார். செவாக் டெஸ்டில் அதிரடியில் சோபிபபார்.
இந்திய அணியின் தொடக்க நட்ச்சத்திரம் செவாக் 1978 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். 31 வயது ஆகும் செவாக் இன்னும் அதிரடி காட்டி பல கிரிக்கெட் ரசிகர்களை தன்னகத்தே கட்டி போட்டு உள்ளார் . அவரின் அதிரடிக்கு ஆகவே மைதானத்துக்கு ரசிகர்கள் கூட்டம் வருவதுண்டு . மட்டையை விசுக்கினால் 4 அல்லது 6 தான் பறக்கும் .டெஸ்டில் 6000 ஓட்டங்களை கடந்து சாதனைகளை படைத்து வரும் இந்திய அணியின் சிங்கம் 16 தடவை சதம் பெற்று உள்ளார். 19 தடவை அரைச்சதம் பெற்றுள்ளார் .செவாக் நேற்று இலங்கைக்கு எதிராக பெற்று கொண்ட இரட்டை சதம் உலகிலே அதிக இரட்டை சதம் பெற்றவர்கள் வரிசையில் 4 ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். செவாக் இதுவரை 6 இரட்டை சதங்களை பெற்றுள்ளார். 168 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டியுள்ளார் .இலங்கைக்கு எதிராக மும்பையில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஏராளமான சாதனைகளை வீரேந்திர சேவாக் தனதாக்கிக் கொண்டார். அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களைக் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் அவர்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 293 ஓட்டங்களை பெற்று முரளிதரனின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து சென்றார் . முச்சதத்தை 7 ஓட்டங்களால் தவற விட்டுள்ளார் . செவாககின் அதிரடியால் இப்போது இந்திய அணி 500 ஓட்டங்களை தாண்டி விளையாடி கொண்டு இருக்கிறது . இலங்கை அணிக்கு நெருக்கடி தான் . இந்த டெஸ்டிலும் வெல்வதற்க்கு.
நிருபர்களுக்கு நேற்று விளக்கம் அளிக்கையில் செவாக் கூறியது;
2-ம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவேன் என்று எதிர்பார்த்தேன். அதைப் போலவே நான் விளையாடினேன். நான் எப்போதும்போல எனது இயல்பான ஆட்டத்தை இன்றும் வெளிப்படுத்தினேன்.÷முரளீதரன் பந்துவீச்சை அடித்து ஆடுவதே சிறந்த தற்காப்பு ஆட்டமாக இருக்கும் என்று நினைத்தேன். அதைப் போலவே அடித்து விளையாடினேன்.
அதற்கு நல்ல பலன் கிடைத்தது.÷ஆடுகளத்தில் முரளீதரனை செட்டிலாகவிடாமல் அவரது பந்துவீச்சை நொறுக்கினேன். அவரது பந்தை எதிர்கொள்வது சவாலான விஷயமாக இருக்கும். முரளீயைப் போன்ற மிகச்சிறந்த ஸ்பின் பெüலர்களை எதிர்த்து ஆடும்போது அவர்களது பந்தை அடித்து ஆடவேண்டும்.÷இதையடுத்து அவரை ஆதிக்கம் செலுத்தவிடாமல், அவரது முதல் பந்திலிருந்தே நான் அவர் மீது ஆதிக்கம் செலுத்தினேன். ஆமதாபாத், கான்பூரில் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆட வாய்ப்பு கிடைத்தும் அதை நழுவவிட்டேன். இந்த முறை அதை செய்ய விரும்பவில்லை. இன்று என்னுடைய நேரமாக இருந்தது என்று கூறினார் .
டெஸ்ட் போட்டிகளில் ஒரே நாளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையையும் வீரேந்திர சேவாக் பெற்றார். மும்பையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய சேவாக் ஒரே நாளில் 284 ரன்கள் குவித்து தனது சாதனையை தானே முறியடித்தார்.இதற்கு முன்னர் கடந்த ஆண்டு மார்ச்சில் சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் ஒரே நாளில் 257 ரன்கள் குவித்தார். 2-ம் நாள் ஆட்டத்தில் அவர் மொத்தம் 319 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
சிங்கம் ஓய்வு எடுக்கும் காட்சி
செவாக் இன்னும் அதிரடியாக விளையாட வேண்டும் . பல இரட்டை சதங்களை பெற வேண்டும் என நானும் அவரது ரசிகையாக இருந்து வாழ்த்துகிறேன் .
4 comments:
உங்க செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் பவி.........
சேவாக் அடுத்த டேஸ்ட்ல 400 அடிப்பார்னு
நம்பிக்கை இருக்கு.......
நன்றி சங்கவி .
எனக்கும் அதுதான் ஆசை
உங்க சதத்துக்கு வாழ்த்துக்கள்!!
உங்களது வாழ்த்துக்கு
எனது நன்றிகள்
Post a Comment