
இன்றைய இளம் பாடகர்களில் ஒருவரும் , நல்ல குரல்வளம் கொண்டவரும் , இன்றைய இளம் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட பாடகர் தான் நரேஷ் ஐயர் .
சில்லுனு ஒரு காதலில் ‘அன்பே வா முன்பே வா பாடல் மூலம் எல்லோரையும் தனது குரல் வளத்தால் ஈர்த்தவர் . வாரணம் ஆயிரம்’ படத்தில் ‘முன்தினம் பார்த்தேனே’, ‘பசங்க’ படத்தில், ‘ஒரு வெட்கம் வருதே வருதே’ போன்ற பாடல்கள் ரொம்ப சூப்பர் ஹிட் பாடல்கள் .

இப்போது அங்காடித் தெரு, அகம் புறம், வர்ணம், அகராதி என பல படங்களில் விதவிதமான பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறார் நரேஷ் ஐயர் .
மயிலிறகே மயிலிறகே பாடல் மூலம் அறிமுகம் ஆனார். ரகுமான் இசையில் பாடியவர் .பாடகர்களுக்கு இசை அறிவு முக்கியம் தேவை . இசையில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. அதை கற்றுவிட்டால், பாடும்போது ஏற்படும் சிரமங்கள் எதுவும் ஏற்படாது. இசை அறிந்து பாடும்போது, அந்த பாடலை நேர்மையாக பாட முடியும் என்று கூறும் நரேஷ் இன்னிசை அளபடையே பாடலை மிகவும் கஷ்டப்பட்டு தான் பாடி இருக்கிறேன் என்று கூறுகிறார் .

அது போல் எந்த பாடல்களையும் பாட கூடியவர் நரேஷ் . அதன் வரிகளும் கேட்க கூடியதாகவும் , விளங்க கூடியதாகவும் இருக்கிறதே இதுதான் பாடகர் நரேஷ் ஐயரின் சிறப்பும் கூட .

இன்னும் பல நல்ல பாடல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் தமிழ் ரசிகர்கள் .
3 comments:
naresh voice is super..........
super voice.
i like song is munpe vaa....
siva
நன்றி சிவா உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்
Post a Comment